முதலாம் முத்திரை Jeffersonville, Indiana, USA 63-0318 1இப்பொழுது ஜெபிப்பதற்காகத் தலை வணங்குவோம். எங்கள் பரம தந்தையே, உம்மை ஆராதிப்பதற்கென்று இன்னுமொரு தருணம் அளிக்கப்பட்டதற்காக இந்த இரவு நேரத்தில் உம்மை ஸ்தோத் தரிக்கிறோம். நாங்கள் உயிர் வாழ்ந்து, நித்திய ஜீவனின் மகத்தான வெளிப்பாடு எங்களுக்குள் தங்கியிருப்பதற்காக உம்மைத் துதிக் கிறோம். பிதாவே, தேவனுடைய வார்த்தையை ஒன்றாக சேர்த்து ஆராய் வதற்கென இன்றிரவு நாங்கள் கூடிவந்துள்ளோம். உலகத் தோற்றத்துக்கு முன் மறைக்கப்பட்டிருக்கும் இந்த இரகசியங்களை ஆட்டுக்குட்டி யானவர் ஒருவரே எங்களுக்கு வெளிப்படுத்தித் தரமுடியும். இன்றிரவு அவர் எங்கள் மத்தியில் வந்து தமது வார்த்தையை வெளிப்படுத்த நாங்கள் கெஞ்சுகிறோம். இந்தக் கடைசி காலத்தில், அவருக்கு நாங்கள் எவ்விதத்தில் சிறந்த ஊழியர்களாயிருக்கவேண்டும் என்பதை அதன் மூலம் அறிந்துகொள்வோம். தேவனே, கடைசி நாட்களில் இருக்கும் பலவீனராகிய எங்களுக்கு, நாங்கள் வாழும் காலத்தையும், வெகுவிரைவில் கர்த்தர் வரப்போகிறார் என்னும் நிச்சயத்தையும் எங்களுக்கு அறிவுறுத்தும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் இவையனைத்தையும் கேட்கிறோம். ஆமென். 2, ''கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மனமகிழ்ச்சியாயிருந்தேன்'' என்று தாவீது ஒருமுறை கூறியிருக்கிறான் என்று நான் நம்புகிறேன். நாம் இங்கு கூடி வருவது பெரும் சிலாக்கியமாகும். நாம் ஒன்றுகூடி தேவனுடைய வார்த்தையை ஆராய்வது இந்த மகத்தான நம்பிக்கையை நமக்களிக்கிறது. 2அநேகர் இடமில்லாத காரணத்தால் நின்றுகொண்டேயிருக்கின்றனர். என்னாலானவரை நான் துரிதமாக ஆராதனையை முடித்துவிட முயல்வேன். கடந்த இரண்டு நாட்களாக பரிசுத்த ஆவியின் பிரசன்னத் தினால் நான் களிகூர்ந்தது போல, நீங்கள் களிகூர்ந்திருப்பீர்களென்று நம்புகிறேன். (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) வெகுகாலமாக எனக்கு நிகழாத ஒரு காரியம் இன்றைக்கு நிகழ்ந்தது. முத்திரைகள் உடைக்கப்படும் பாகத்தை நான் வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். இருபது வருடங்களுக்கு முன்பாக இதை நான் படித்ததுண்டு என்று நான் ஊகிக்கிறேன். ஆனால் அப்பொழுது எனக்கு எவ்விதத்திலும் திருப்தி ஏற்படவில்லை. இந்த முத்திரைகளில் ஏதோ விசேஷித்த ஒன்று அடங்கியிருப்பதாக எனக்குத் தென்பட்டது. ஏனெனில் முத்திரைகள் கொண்டது ஒரு முழுப்புஸ்தகமாகும். பாருங்கள்? அது அந்தப் புஸ்த கமாயிருக்கிறது. அந்த முழு புஸ்தகமும் முத்திரிக்கப்பட்டுள்ளது. அது ஆரம்பிக்கின்றது....... 3இங்கு ஒரு முத்திரை இருப்பதாக வைத்துக்கொள்வோம். இங்கு ஏதாவது ஒன்று இருந்தால், நான் என்ன கருதுகிறேன் என்பதை உங்களுக்கு காண்பிக்க முடியும். (சகோதரன் பிரான்ஹாம் காகிதங்களை உபயோகித்து, புஸ்தகச் சுருளைக் குறித்தும், அது எவ்வாறு முத்திரிக் கப்படுகின்றது என்பதைக் குறித்தும் விளக்கிக் காண்பிக்கிறார்-ஆசி) இங்கே ஒரு முத்திரை உள்ளது? இது மற்றொன்று. அதை இவ்விதம் சுருட்டுகிறோம். கடைசியில் காகிதத்தின் ஒரு சிறு பாகம் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும். அது முதலாம் முத்திரை. அது சரி. அது புஸ்தகத்தின் முதல் பாகம். அதன் பின்பு அது மறுபடியும் இவ்விதமாகவே சுருட்டப்பட்டு, முடிவில் வேறொரு பாகம் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும். அப்படியெனில், ஆகமொத்தம் இரண்டு முத்திரைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தவிதமாக சுருள்களாக வேதப் புஸ்தகம் முழுவதுமே அக்காலத்தில் எழுதப்பட்டது. (சகோதரன் பிரான்ஹாம் தான் விளக்கும்படியாக உபயோகித்த காகிதங்களைப் பிரிக்கிறார்-ஆசி.] ஆகவே, இம்முத்திரைகளை நாம் உடைக்கும்போது, புஸ்தகத்தில் உள்ள இரகசியங்கள் வெளியரங்கமாகின்றன. 4நீங்கள் எரேமியாவின் புஸ்தகத்தைப் படித்தீர்களா? உங்களில் அநேகர் சென்ற இரவு அந்த பாகத்தைக் குறித்துக் கொண்டீர்களா? அது எழுதி முத்திரிக்கப்பட்டு, அவன் எழுபது வருட சிறைவாசம் கழிந்து தன் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வரும்வரை அது வைக்கப்பட்டிருந்தது. நான் அதை ஆராய்ந்து படிக்க நிச்சயம் விரும்புகிறேன். உங்களால்.. அவையெல்லாவற்றையும் விவரிக்க இயலாது. ஏனெனில் அது நித்திய வார்த்தையாக, நித்திய புஸ்தகமாக இருக்கிறது. ஆகையால் முக்கியமான பாகங்களை மாத்திரம் நாம் அறிந்து கொள்ள முயல வேண்டும். இன்றைக்கு நான் படித்தபொழுது அநேக வேத வாக்கியங்களை குறித்துக்கொண்டு வந்துள்ளேன். நீங்கள் இவைகளைப் படிக்கலாம்....நீங்கள் ஆராய்ந்து படிக்கையில், ஒலிநாடாக்களில் கேட்கும்போது அதைக் குறித்த அதிகமாகவே வெளிப்படும். அநேகக் காரியங்கள் இருக்கின்றன. 5எனக்கு அறையினுள் வெளிப்பட்ட விதமாய் எல்லாவற்றையும் நான் உங்களுக்கு இந்த மேடையின் மேல் நின்று வெளிப்படுத்தினால் அது மிகவும் அற்புதமாயிருக்கும். ஆனால் இங்கு நான் வந்தவுடன் ஒருவாறு நெருக்கப்படுவதனால், ஜனங்கள் புரிந்து கொள்ள வேண்டுமெனக்கருதி, சிலவற்றைக் கடந்து முக்கியமான பாகத்தை மாத்திரமே அவர்களுக்கு எடுத்துரைக்க முடிகிறது. 6சகோதரன் உங்ரன் (Ungren) தம்முடைய மகிமையை விட்டு இறங்கி வந்தார் என்னும் பாட்டை இப்பொழுது பாடினார். அதை நான் நிச்சயமாகவே பாராட்டுகிறேன். அவர் தம்முடைய மகிமையை விட்டு இறங்கி வரவில்லையென்றால், இன்றிரவு நம்முடைய நிலை என்னவாயிருக்கும்? ஆகவே நமக்கு உதவி செய்ய அவர் இறங்கி வந்ததற்காக அவருக்கு நாம் நன்றியுள்ளவர்களாயிருப்போம். 7இப்பொழுது, அநேகர் நின்று கொண்டிருப்பதினாலே, நம்மால் முடிந்தவரை துரிதமாக முடிக்க முயல்வோம். அதாவது துரிதமாக முடித்து விடுவேன் என்ற கருத்தில் நான் கூறவில்லை. நம்மால் முடிந்தவரை ஆராதனையை சீக்கிரம் துவக்கலாம் என்ற கருத்தில் நான் கூறினேன். இப்பொழுது நாம் திருப்புவோம்... நாம் இதுவரை வெளிப்படுத்தின விசேஷம் 1 முதல் 5 அதிகாரங் களைப் படித்துவிட்டோம். சென்ற இரவு 5-ம் அதிகாரத்தை தியானித் தோம். இன்றிரவு 6-ம் அதிகாரத்தைப் பார்ப்போம். இப்பொழுது, நாம் இந்த அதிகாரத்தை ஆராயும்போது, பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் காணப்படும் அநேக பாகங்களை நாம் குறிப்பிட நேரிடும். ஏனெனில் அந்த புஸ்தகம் முழுவதுமே இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. பாருங்கள்? அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முழுமையாக வெளிப் படுத்துகிற புஸ்தகமாய் உள்ளது. தேவன் தம்மையே இந்த புஸ்தகத்தில் வெளிப்படுத்துகிறார்; தேவன் தம்மை கிறிஸ்துவின் மூலமாய் இப்புஸ்த கத்தில் வெளிப்படுத்துகிறார். கிறிஸ்து தேவனுடைய வெளிப்படுத்த லாயிருக்கிறார். அவர் தேவனை வெளிப்படுத்த இவ்வுலகில் வந்தார்; ஏனெனில் அவரும் தேவனும் ஒன்றாயிருக்கின்றனர். “தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து உலகத்தை தம்மோடு கூட ஒப்புரவாக்கினார்.'' வேறு விதமாகக் கூறினால், நாம் காணும்படியாக தேவன் கிறிஸ்துவின் மூலம் தம்மை வெளிப்படுத்தாதிருந்தால், தேவன் யாரென்பதை நாம் அறிந்து கொண்டிருக்க முடியாது. 8பல வருடங்களுக்கு முன்னால், தேவன் என்பேரில் கோபங்கொண் டிருக்கிறார். ஆனால் கிறிஸ்து என்னை நேசிக்கிறார் என்று நான் நினைத்த துண்டு. உண்மையைக் கூறினால், அவர்களிருவரும் ஒருவர்தான் என்பதை பின்பு கண்டுகொண்டேன். கிறிஸ்து தேவனுடைய இருதய மாயிருக்கிறார். பாருங்கள்? வெளிப்படுத்தின விசேஷத்தில் முதல் மூன்று அதிகாரங்களும் (அதைக் குறித்து நாம் நன்கு ஆராய்ந்தோம்) ஏழு சபையின் காலங்களை விவரிக்கின்றன- ஏழு சபை காலங்கள் அல்லாமல், ஏழு முத்திரைகள், ஏழு எக்காளங்கள், கலசங்கள், தவளைகள் போன்ற அசுத்த ஆவிகள் இவையெல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டுள்ளன. என்னே, ஒரு பெரிய படம் வரைந்து இவையெல்லாவற்றையும் அதனதன் ஸ்தானத்தில் பொருத்தி, நான் காண்கிற விதத்தில் உங்களுக்கு விவரிக்க எனக்கு மிகவும் ஆசையாயிருக்கிறது. அதை ஒரு சிறிய காகிதத் துண்டில் வரைந்து வைத்திருக்கிறேன். ஆனால், நான்... நீங்கள் அறிவீர்கள். இதுவரையில் எல்லாமே அதில் சரியாக அமைந் துள்ளன. வந்துபோன காலங்கள் அனைத்தும் சரியாக பொருந்துகின்றன. நான் வரைந்தது ஒருக்கால் எல்லாமே சரியாயிராது. ஆனால் அவ்வளவுதான் நான் அறிந்தது. என்னால் முயன்றவரை நான் சிறப்பான ஒரு செயல் புரிந்து, அதில் ஏதாவது ஒரு தவறு நேரிடின், தேவன் நிச் சயமாக அப்பிழையை மன்னிப்பார் என்று நான் நன்றாய் அறிவேன். 9ஆனால், இப்பொழுது, முதல் மூன்று அதிகாரங்கள் ஏழு சபை யின் காலங்களைப் பற்றினவை. 4-ம் அதிகாரத்தில் யோவான் பர லோகத்திற்கு எடுக்கப்படுகிறான். பாருங்கள்? நாம் சபையின் காலங்களைக் காண்கிறோம். சபையின் காலங்களைக் குறித்து அதிகம் சொல் லப்படவில்லை. சம்பவிக்க போகிற உபத்திரவ காலத்திற்குள் அவர்கள் சபையை பொருத்துகின்றனர். அங்கேதான் அவர்கள் ஆச்சரியமடைவர் என்று நான் நினைக்கிறேன். அநேகருக்கு எடுக்கப்படுதல் நிகழ்ந்ததே தெரியாமலிருக்கும். நான் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) கூறினபடி உபத்திரவகாலம் வரும்போது, எடுக்கப்படுதல் ஏன் சம்பவிக்கவில்லை என்று அநேகர் கேட்பார்கள். அப்பொழுது எடுக்கப்படுதல் ஏற்கனவே நிகழ்ந்திருக்கும். ஆனால் அவர்கள் அதை அறியாமலிருப்பார்கள். அது எவ்விதம் இருந்ததோ, அவ்விதமே இருக்கும். அது கடந்து சென்றதை அவர்கள் அறியமாட்டார்கள். பாருங்கள்? 10இப்பொழுது, மணவாட்டியாகிய புறஜாதி சபைக்கு அநேக வாக்குத்தத்தங்கள் அளிக்கப்படவில்லை. இப்பொழுது, ஆகவே ஒரு சபையும் ஒரு மணவாட்டியும் உள்ளனர் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். பாருங்கள்? எல்லாமே மூன்று மூன்றாக அமையவேண்டும். நான்காக அல்ல. அது தவறு. மூன்று, ஏழு, பத்து, பன்னிரெண்டு, இருபத்து நான்கு, நாற்பது, ஐம்பது. தேவன் தம்முடைய செய்திகளை வேதத்தின் எண்களைக் கொண்டு உறுதிப்படுத்துகிறார். நீங்கள் கவனியுங்கள்... இந்த எண்களைத் தவிர, குறைவான எண்கள் உண்டானால், அடுத்து நிகழும் சம் பவத்துடன் அது பொருந்தாது, அப்பொழுது ஆரம்பத்திலிருந்து நீங்கள் மறுபடியும் எல்லாவற்றையும் பார்க்கவேண்டும். 11சகோ. லீ வேயில் (Lee Vayle) இங்கிருக்கிறார் என்று நினைக்கி றேன். அன்றொரு நாள் பாதையை விட்டு விலகிச் செல்லும் மனிதரைக் குறித்து நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். இது ஒரு இலக்கை நோக் கிச் சுடுவது போன்றதாகும். துப்பாக்கி சரிவர அமைந்து சுடுபவர் சரி யான பயிற்சி பெற்று, இலக்கை நன்றாக நோக்கி சுட்டால் குண்டு இலக்கை அடிக்கும். சுடும்போது துப்பாக்கியின் குழாய் குறியை விட்டு அசைந்துபோனால், அல்லது அதிர்ச்சியினால் ஆடிப்போனால், அல்லது பலத்த காற்று அதை அசைத்தால், குறி தவறிப்போகும். மீண்டும் இலக்கை சரியாகச் சுடவேண்டுமானால் ஆரம்பத்திலிருந்து துப்பாக் கியை சரிவர அமைத்து சுடவேண்டும். இல்லையெனில் குறி மறுபடியும் தவறிவிடும். 12வேதம் வாசிப்பதும் அவ்விதமாகவே அமைந்துள்ளது என்று நான் நம்புகிறேன். நாம் அதை ஆராயத்தொடங்கி அது சரிவர அமைய வில்லையெனில், நாம் எங்கேயோ தவறு செய்திருக்கிறோம் என்பது அதன் அர்த்தம். ஆகையால் நாம் மீண்டும் அதை ஆரம்பத்திலிருந்து படிக்கவேண்டும். நாம் ஞானத்தை உபயோகித்து அதை புரிந்துகொள்ள முடியாது. அது... வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது, ஒருவனும் அதைச் செய்ததில்லை, செய்யவும் முடியாது என்று வேத வசனங்களைக் கொண்டு நாம் அறிந்து கொண்டோம். ஆட்டுக்குட்டியானவர் மாத் திரமே அதை செய்ய முடியும். ஆகவே, வேத பள்ளிகள் அளிக்கும் வியாக்கியானம் எதுவாயினும் அது ஒன்றுமில்லை. பாருங்கள்? ஆட்டுக் குட்டியானவர் மாத்திரமே அதை வெளிப்படுத்த முடியும். அது சரி. அவர் நமக்குதவி செய்வார் என்று நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். 13“முன்னே நடந்தும், இப்பொழுது நடக்கிறதும், இனி நடக்கப் போகிற காரியங்களையும் காண்பதற்கென யோவான் 4-ம் அதிகாரத் தில் பரலோகத்திற்கு எடுக்கப்பட்டான். ஆனால் சபையானது 4ஆம் அதிகாரத்தில் முடிவுறுகின்றது. கிறிஸ்து சபை தம்மை சந்திக்கும்படியாக அதை ஆகாயத்தில் எடுத்துக் கொள்கின்றார். வெளி:19-ம் அதிகாரம் வரை அது மீண்டும் காணப்படுவதில்லை. அந்த அதிகாரத்தில் இயேசு ராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தாவாக சபையுடன் திரும்ப வருகிறார். எப்பொழுதாவது ஒருநாள் அவர் வருவார். இப்பொழுது, ஓ... அதற்கு முன்னால் இவை யாவையும் விவரித்து முடிக்கலாமென நம்புகிறேன். அவ்வாறு இயலாவிடில், அதன் சாராம்சத்தையாவது நாம் அறிந்துகொள்ளலாம். 14இப்பொழுது 5-ம் அதிகாரத்தில், ஏழு முத்திரைகளால் முத்தரிக் கப்பட்ட புஸ்தகத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. முதலாவதாக, நாம் முதலாம் முத்திரையை வாசிப்போம். ஆனால் அதற்கு முன்பு (இதற்கு ஆதாரமாக). நேற்று கூறினவை களைப் பார்ப்போம். அந்த புஸ்தகம் அதன் மூல சொந்தக்காரராகிய தேவனின் கையில் இருப்பதை யோவான் காண்கிறான். ஆதாம் எங்ஙனம் அதை இழந்தான் என்பது நினைவிருக்கிறதா? சாத்தானின் விவேகத்தைப் பெற்று அவன் அப்புஸ்தகத்தை பறிகொடுத்து, தனக்கிருந்த உரிமை யாவையும் அவன் இழந்து போனான். அவனை மீட்பதற்கு வேறு வழியே இல்லாமலிருந்தது. பின்னர் தேவன் மனித ரூபங்கொண்டு மீட்பராகி, நம்மை மீட்டுக் கொண்டார். 15ஆகவே கடந்த காலங்களில் இரகசியமாயிருந்தவை இக்கடைசி காலத்தில் வெளிப்பட வேண்டியிருக்கிறது என்பதை நாம் இப்பொழுது காண்கிறோம். இனத்தான் மீட்பன் முன்னே தம்முடைய உரிமைகளைக் கோரும் படியான அழைப்பை யோவான் கேட்டபோது, வானத்திலாவது, பூமி யிலாவது, பூமியின் கீழாவது ஒருவனும் அதைச் செய்யப் பாத்திரவா னாகக் காணப்படவில்லை என்பதை நாம் இப்பொழுது காண்கிறோம். அந்தப் புஸ்தகத்தைப் பார்ப்பதற்கும்கூட யாரும் பாத்திரவானாக இல்லை. அதைப் பார்ப்பதற்கு ஒருவருக்கும் தகுதியில்லை என்பதை சற்று சிந் தித்துப் பாருங்கள்! ஆகவே, யோவான் அப்பொழுது அழத் தொடங்கினான். அப்படியானால், மீட்கப்படுவதற்கு எவ்வித வாய்ப்புமில்லை என்று யோவான் அறிந்து கொண்டான். ஓ! எல்லாமே தோல்வி கண்டிருந்தது. ஆனால் யோவானின் அழுகை விரைவில் நின்றது என்பதை நாம் கண்டறிகின்றோம். ஏனெனில் நான்கு ஜீவன்களில் ஒன்று இல்லை ... சரியாகக் கூறினால், மூப்பர்களில் ஒருவன், “யோவானே, அழவேண்டாம். புஸ்தகத்தை திறப்பதற்கு யூதா கோத்திரத்து சிங்கமானவர் ஜெயங்கொண்டிருக்கிறார்” என்றான். வேறுவிதமாகக் கூறினால், “அவர் மேற்கொண்டு, ஜெயங்கொண்டார். 16யோவான் திரும்ப பார்த்து, ஒரு ஆட்டுக்குட்டி வருவதைக் கண்டான். அது இரத்தம் தோய்ந்ததாய், அடிக்கப்பட்டு காயப்பட்டதாயிருக்க வேண்டும். “அடிக்கப்பட்டவண்ணமாயிருந்த ஒரு ஆட்டுக்குட்டி...” உண்மையாகவே அது இன்னமும் இரத்தம் தோய்ந்ததாயிருந்தது. நீ ஒரு ஆட்டுக்குட்டியை வெட்டுவாயானால் அந்த ஆட்டுக்குட்டி கொல்லப்பட்ட விதமாகவே செய்வாயானால் அது இரத்தம் தோய்ந்ததாயிருக்கும். ஆகவே ஆட்டுக்குட்டி உண்மையாகவே இரத்தம் தோய்ந்ததாயிருக்கின்றது. அது சிலுவையில் துண்டு துண்டாக துண்டிக்கப்பட்டது. விலாவில் ஈட்டியால் குத்தப்பட்டு கைகள் ஆணிகளால் கடாவப்பட்டு, தலை முள்முடியால் சூட்டப்பட்டிருந்தது. அவர் மிகவும் கோரமான, பயங்கரமான நிலையில் இருந்தார். இத்தகைய ஆட்டுக்குட்டியானவர் புறப்பட்டு வந்து, மீட்பின் முழு உரிமைப் பத்திரத்தைக் கையில் கொண்டவராய் சிங்காசனத்தில் வீற்றிருந்தவரின் அருகில் சென்று, அப்புஸ்தகத்தை அவர் கையிலிருந்து எடுத்து, முத்திரைகளை உடைத்து, புஸ்தகத்தைத் திறந்தார். இச்சம்பவம் நிகழ்ந்தபோது, பரலோகத்தில் மகத்தான காரியங்கள் நடைபெற்றன என்பதை நாம் கண்டோம். இருபத்து நான்கு மூப்பர்களும், ஜீவன்களும், பரலோகத்தில் உள்ள யாவரும், “பாத்திரவான்” என்று ஆர்ப்பரிக்கத் துவங்கின. இதோ தூதர்கள் வந்து பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களை ஊற்றினர். பலிபீடத்தின் கீழிருந்த பரிசுத்தவான்கள் சத்தமிட்டனர், “ஆட்டுக்குட்டியானவரே நீர் பரிசுத்தவானாயிருக்கிறீர். நீர் எங்களை மீட்டுக்கொண்டு எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர். நாங்கள் பூமியிலே அரசாளுவோம்” என்று பாடினர். ஓ, என்னே ! அவர் புஸ்தகத்தைத் திறந்தபோது பரலோகத்தில் இவ்விதம் சம்பவித்தது. 17நீங்கள் பாருங்கள். அந்த புஸ்தகம் உண்மையாகவே உலகத்தோற்றத்துக்கு முன்னாலேயே திட்டமிடப்பட்டு எழுதப்பட்டது. கிறிஸ்துவும் ஆட்டுக்குட்டியானவராக உலகத்தோற்றத்துக்கு முன்னமே அடிக்கப்பட்டார். அவருடைய மணவாட்டி அங்கத்தினரின் பெயர்கள் உலகத்தோற்றத்துக்குமுன்னமே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டன. ஆனால் அப்பொழுது அது முத்திரிக்கப்பட்டுவிட்டது. இப்பொழுதோ அதில் யாருடைய பெயர்கள் உள்ளன என்பதைக் குறித்த யாவும் வெளிப்படுத்தப்படுகின்றன. என்ன ஒரு மகத்தான காரியம். யோவான், “ஆமென். துதியும் கனமும் அவருடையது” என்று அவன்-அவன் கூறியதை பரலோகத்திலுள்ள யாவரும், பூலோகத்திலுள்ள அனைவரும் கேட்டதாக உரைக்கிறான். பரலோகத்தில் அவனுக்கு அது ஒரு மகத்தான தருணமாயிருந்தது. ஏனெனில் “ஆட்டுக்குட்டியானவர் பாத்திரவானாயிருந்தார்.” 18ஆகவே இப்பொழுது ஆட்டுக்குட்டியானவர் நின்று கொண்டிருக் கிறார். இப்பொழுது, நாம் 6-ம் அதிகாரத்தை தியானிக்க தொடங்கும் இச்சமயத்தில் ஆட்டுக்குட்டியானவர் புஸ்தகத்தை கையில் ஏந்தியவாறு நின்றுக்கொண்டு, இரகசியங்களை வெளிப்படுத்த தொடங்குகிறார். ஓ, இன்றைக்கு முற்றிலுமாக நான் கூறுவதைப் புரிந்து கொள்ள ஜனங்கள் ஆவிக்குரியவர்களாக இருக்கிறார்களென்று நம்புகிறேன். இன்று பகல் 12-00 மணிக்கு பரிசுத்த ஆவியானவர் என் அறைக்குள் நுழைந்து, நான் உங்களிடம் கூறத்தக்கதாக நான் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த ஒன்றை திருத்தியிராவிடில், நான் உங்களிடம் இன்று செய்தியளிக்கும்போது பயங்கரமான தவறு ஒன்றைப் பிரசங்கித்திருப் பேன். நான் பழைய பிரசங்கங்களிருந்து சிலவற்றை எடுத்து அப் பொழுது குறிப்பு எழுதிக்கொண்டிருந்தேன். அதைக் குறித்து என்னிடம் வேறொன்றும் இல்லாதிருந்தது. இரண்டாம் முத்திரையின் இரகசியம் எனக்குத் தெரியாது. அநேக வருடங்களுக்கு முன்னர் இதைக் குறித்து நான் அளித்த செய்தியிலிருந்து சில குறிப்புகளை எழுதிக் கொண்டிருந் தேன். அப்பொழுது நான் டாக்டர் ஸ்மித் (Dr. Smith) என்பவரின் கருத்துக்களையும், அநேக பிரசித்தி வாய்ந்த போதகர்கள் கொண்டிருந்த கருத்துக்களையும் ஒன்று தொகுத்து அப்பிரசங்கத்தை ஆயத்தம் செய்தேன். இவைகளை ஆதாரமாக வைத்துக்கொண்டு முதலாம் முத்திரையை இந்த கோணத்திலிருந்து படிக்கலாமென்று தீர்மானம் செய்தேன். ஆனால் இன்று 12.00 மணிக்கு பரிசுத்த ஆவியானவர் வேகமாய் அறைக்குள் நுழைந்தார். உடனே, முதலாம் முத்திரையைக் குறித்த இரகசியம் முழுவதும் திறக்கப்பட்டு வெளிப்பட்டது. நான் இன்றிரவு இங்கே நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிஜமோ, அதைப் போலவே நான் இங்கு கூறப் போகின்ற சுவிசேஷ சத்தியமும் நிஜமாகவே இருக் கின்றது. அதை நான் சற்று முன்புதான் அறிந்தேன். 19ஏனெனில் ஒரு வெளிப்பாடு தேவனுடைய வார்த்தைக்கு முரண் பட்டதாயிருந்தால் அது வெளிப்பாடே அல்ல. சில காரியங்கள் சத்தியமாக தென்படும். ஆனால் அவை சத்தியமாய் இல்லாமல் இருக்கக்கூடும். பாருங்கள்? அது அதைப் போலத்தோன்றும். ஆனால் அது அதுவல்ல. 20ஆட்டுக்குட்டியானவர் இப்பொழுது புத்தகத்தை வைத்துக்கொண் டிருக்கிறார் என்று நாம் காண்கிறோம். 6-ம் அதிகாரத்தை இப்பொழுது படிப்போம். ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின் மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான். அவனுக்கு ஒரு கிரீடங்கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான். 21இப்பொழுது, அது முதலாம் முத்திரை. இந்த ஒன்றை நாம் இன்றிரவு தேவகிருபையைக் கொண்டு விரிவாக விவரிக்கப் போகிறோம். ஒரு மனிதன் இதனை தன் சொந்த ஞானத்தினால் வியாக்கியானம் செய்ய முயன்றால், அவன் ஆபத்துக்கள் நிறைந்த நிலத்தின் மேல் நடக்கிறான். நீ என்ன செய்கின்றாய் என்பதை அறியாமல் இருக்கிறாய் என்றால்...பாருங்கள்? ஆகவே, அது எனக்கு வெளிப்பாட்டினால் வருமானால் அதை நான் உங்களுக்குக் கூறுவேன் அல்லது அதை நான் என் சிந்தனையின் மூலம் எடுப்பேனாகில் அதைக் குறித்து நான் பேசுமுன்னரே உங்களுக்கு நான்-நான் அதைக் கூறிவிடுவேன், நான் இன்றிரவு இங்கே நின்று கொண்டிருப்பது எவ்வளவு உறுதியோ, அதேபோல் நான் கூறப்போகும் இதன் விளக்கம் நான் சர்வ வல்லவரிடமிருந்து இன்று நேரடியாகப் பெற்ற வெளிப்பாடு என்பது உறுதி. வேதத்தின் இப்பகுதிக்கு வரும்பொழுது, நான் மாறாகக் கூறுகின்ற சுபாவம் உடையவனல்ல. நான் நான்... நான் இப்பொழுது பேசிக் கொண்டிருப்பது என்ன என்பது உங்களுக்கு புரிகிறது என்று நான் நம்புகிறேன், நீங்கள் பாருங்கள், இப்பொழுது, நீங்கள் சிலவற்றை சொல்ல முடியாது...ஏதோ ஒன்று இங்கு வைக்கப்படுவதாயிருந்து, அது இங்கு வைக்கப்படுவதற்கு முன்பாகவே நாம் அதைக் குறித்துப் பேச முடியாது. பாருங்கள்? உங்களுக்குப் புரிகின்றதா? நீங்கள் ஏதோ ஒன்றை கவனிக்கிறீர்களா? பாருங்கள்? 22இப்பொழுது, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்ட சுருள் புஸ்தகம் இப்பொழுது ஆட்டுக்குட்டியானவரால் வெளியிடப்படுகிறது. அந்தப் பகுதியைத்தான் நாம் இன்றிரவு அணுகுகிறோம். தேவன் நமக்கு ஒத்தாசை செய்வாராக, முத்திரைகள் உடைக்கப்பட்டு, வெளிப்படும்போது, புத்தகத்தில் உள்ள இரகசியங்கள் வெளிப்படுகின்றன, இப்பொழுது பாருங்கள், இதுதான் முத்திரிக்கப்பட்ட புஸ்தகம், இப்பொழுது நாம் அதை நம்புகிறோம். நாம் நம்பவில்லையா? (சபையோர், “ஆமென்” என்கின்றனர்.-ஆசி.] அது முத்திரிக்கப்பட்ட புஸ்தகம் என்று நாம் நம்புகிறோம், முத்திரிக்கப்பட்ட அந்த புஸ்தகத்தை நாம் முன்பு ஒருபோதும் அறிந்ததில்லை , ஆனால் அது, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்தது, அது, புஸ்தகத்தின் பின்புறத்திலே ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்தது. 23நாம் இந்தவிதமான புஸ்தகத்தைக் குறித்துப் பேசுவோமானால், அது ஒவ்வொரு முத்திரையாக ஏழு தோல் வார்களில் (Straps) கட்டப்பட்டிருந்தது. (சகோதரன் பிரான்ஹாம் ஒரு புஸ்தகத்தை எடுத்து விளக்கிக் காண்பிக்கிறார்-ஆசி.) ஆனால் அது இதைப் போன்ற புஸ்தகம் அல்ல. அது ஒரு சுருளாயிருந்தது. அந்தச் சுருளை அவிழ்க்கும்போது, முதலாவது வருகின்றது. அதன்பின் இரண்டாம் முத்திரை அங்குள்ளது. அதனுள்ளே என்ன எழுதப்பட்டுள்ளது என்று அது கூறுகின்றது. ஆனால் அது ஒரு இரகசியமாயுள்ளது. நினைவு கொள்ளுங்கள், அந்தப் புஸ்தகமானது முத்திரிக்கப்பட்டிருந்த போதிலும், அதை ஆராய்ந்தனர். இப்புஸ்தகம் இரகசியம் அடங்கிய வெளிப்பாடான புஸ்தகமாயுள்ளது. பாருங்கள். இந்தப் புஸ்தகம் இயேசு கிறிஸ்துவைக் குறித்த வெளிப்படுத்தல்களின் புஸ்தகம். காலங்கள் முழுவதுமாக மனிதன் அதை ஆராய்ந்து அதற்குள் இருப்பதைப் பெற்றுக்கொள்ள முயன்றான் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாமனைவரும் அதை அறிந்துள்ளோம். 24ஒருமுறை, நான் நினைவு கூறுகிறேன். திரு. போகன்னான் (Bohannon) என்பவர் என் ஆப்த நண்பர். அவர் இன்றைய கூட்டத்தில் இருந்தால், அல்லது அவர் பந்துக்கள் யாராயினும் இருந்தால், நான் இப்போது கூறப்போவதை அவமரியாதையாகக் கொள்ளவேண்டாம். அவர் அரசாங்க உத்தியோகத்தில் மேலதிகாரியாகப் பணிபுரிந்து கொண்டி ருந்தார். அப்பொழுது நானும் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். நான் இரட்சிக்கப்பட்டவுடன், ஒரு நாள் அவருடன் வெளிப் படுத்தின விசேஷத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். அதற்கு அவர், ''நான் அதை வாசிக்க முயற்சித்திருக்கிறேன்,'' என்றார். அவர் மிகவும் நல்லவர்தான். அவர் ஒரு ஸ்தாபனத்தில் அங்கத்தினராயிருந் தார். ஆனால் எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர் என்று நான் அறியேன். அவர் என்னிடம், “யோவான் காரமுள்ள உணவை வயிறு புடைக்கத் தின்று உறங்கச் சென்றிருப்பான்'' என்றார். (அதன் காரணமாக அர்த்தமற்ற சொப்பனத்தை அவன் கண்டான் என்று குறிப்பாக அவர் சொன்னார்). 25என்னால் அதைத் தாங்க முடியவில்லை. நான் அவரிடம், ''தேவனுடைய வார்த்தையைக் குறித்து அவ்விதம் கூற உமக்கு வெட்க மில்லையா?'' என்று கேட்டேன். பாருங்கள்? (அவர் மேலதிகாரியான தால் இதன் விளைவாக, அவர் என்னை வேலையிலிருந்தும் நீக்கியிருக்க முடியும்). அப்பொழுது எனக்கு இருபத்திரண்டு அல்லது இருபத்து மூன்று வயதாயிருக்கும். வேலை கிடைப்பதென்பது அக்காலத்தில் துர் லாபமாயிருந்தது. ஆயினும் தேவனுடைய வார்த்தை எவ்விதத்திலாவது அவமதிக்கப்படுவதை நான் கேட்கும்பொழுது, எனக்கு ஒரு பயம் ஏற்படுவதுண்டு. அது (வேதம்) சத்தியமாகும். அனைத்துமே சத்தியம். யோவான் கண்டது ஒரு சொப்பனமன்று; அல்லது ஒரு தீயக்கனவும் (nightmare) அல்ல. அவன் ஆகாரம் உட்கொண்டதனாலும் அல்ல. அவன் தேவனுடைய வார்த்தையைப் புத்தக வடிவில் எழுத முயன்றதன் காரணத்தால், ரோம அரசாங்கத்தாரால் பத்மூ தீவுக்கு அவன் நாடு கடத்தப்பட்டான். கர்த்தருடைய நாளில் அவன் அத்தீவில் இருந்தான். அவனுக்குப் பின்னால் எக்காளசத்தம் போன்ற ஒரு பெரு வெள்ளத்தின் சத்தத்தைக் கேட்டு அதைப் பார்க்கத் திரும்பினபோது, ஏழு குத்துவிளக்குகளைக் கண்டான். அங்கே அவைகளின் மத்தியில் தேவ குமாரன் (Son of God) நின்று கொண்டிருந்தார். (வெளி 1:10). இப்பொழுது... 26அந்த புஸ்தகம் ஒரு வெளிப்பாடாக உள்ளது. வெளிப்பாடு என்பது அதுவரை அறிவிக்கப்படாத ஒன்றை வெளிப்படுத்தலாகும். இப்பொழுது... நீங்கள் இதை மறவாதபடிக்கு, இதைக் கவனியுங்கள். “அது கடைசி காலம்வரை அறிவிக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது.'' பாருங்கள்? ''அதில் அடங்கியுள்ள இரகசியம் முழுமையும் கடைசி காலம் வரை அறிவிக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது,'' அவ்வாறு வேதம் கூறுவதை நாம் இங்கே பார்க்கலாம். 27இப்பொழுது முத்திரைகள் உடைக்கப்படும்போது அப்புஸ்த கத்தில் அடங்கியுள்ள இரகசியங்கள் வெளிப்படும். முத்திரைகள் முற்றிலும் உடைக்கப்பட்டுவிட்டால், மீட்பின் சமயம் முடிவடைந்துவிட்டது. ஏனெனில் அப்பொழுது ஆட்டுக்குட்டியானவர் தம் மத்தியஸ்த உத்தியோகத்தை விட்டுவிட்டு தம் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வந்து விடுவார். அதன் நடுவில் அவர் மத்தியஸ்தராய் இருந்தார். ஆனால் முத்திரைகள் உடைக்கப்படுவது ஆரம்பிக்கையில், அவைகளைக் குறித்த உண்மையான வெளிப்படுத்தல்கள் சம்பவிக்கும்பொழுது, ஆட்டுக் குட்டியானவர் பிரகாரத்தைவிட்டு முன் வருகிறார். அது வேதப்பூர்வமானது. சென்ற இரவு அதை வேதத்திலிருந்து வாசித்தோம். அவர் புறப்பட்டு வந்து புஸ்தகத்தை எடுத்தார். அப்பொழுது அவர் மத்தியஸ்தரல்ல. அவர் சிங்கமென்று அழைக்கப்படுகிறார். அங்ஙனமாயின் அவர் ராஜா. 28இந்த முத்திரைகளிலுள்ள நடிகர்கள் முதலாம் சபையிலேயே நடிக்க ஆரம்பிக்கின்றனர். இவைகளின் பின்னணியை நம்மால் முடியு மளவிற்கு அவைகளை நாம் முழுமையாகப் பெற்றுக்கொள்வோம் என்பதை இப்பொழுது நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். ஒரு மனிதன் தன் முகமூடிகளை மாற்றுவதினால்தான் நடிகன் எனப்படுகிறான். ஆகவேதான் ''நடிகர்கள்'' என்று நான் கூறுகிறேன். பாருங்கள்? இன்றிரவு நாம் சிந்திக்கப்போகும் நாடகத்தில், சாத்தான் அவனது முகமூடியை மாற்றிக்கொண்டே போவதை நாம் காணலாம். மற்ற நடிகர் அனைவரும் அவ்விதமே செய்கின்றனர். கிறிஸ்து ஆவியின் ரூபமாயிருந்து மனித ரூபம் கொண்டபோது அவர் ஒரு நடிகனின் ஆடையை உடுத்திக்கொண்டார். அதாவது மனித உடல். அவர் மீட்கும் இனத்தான் ஆவதற்கு மனித ரூபம் கொண்டு இறங்கிவந்தார். 29இப்பொழுது, நீங்கள் பாருங்கள், அது ஒரு நடிகனின் ரூபம்தான். அதன் காரணமாகத்தான் எல்லாமே ஜீவன், மிருகம் போன்ற உவமை களாக கூறப்பட்டுள்ளது. ஏனெனில் இது ஓர் நாடகமாகும். இந்த நடி கர்கள் முதலாம் சபையின் காலம் தொடங்கி நடிக்கின்றனர். ஏனெனில் கிறிஸ்து தம்மை ஏழு சபையின் காலங்களுக்கு வெளிப்படுத்துகின்றார். நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) அது சரி. இந்த ஏழு சபையின் காலங்கள்தோறும் ஒரு பெரிய குழப்பம் ஏற்படுகிறது. சபையின் கால முடிவில், ஏழாம் தூதனின் செய்தி சபை யின் காலங்களில் வெளிப்படாத இரகசியங்களை சபைக்கு வெளிப் படுத்தித்தரும். பாருங்கள்? நாம் அதை இப்பொழுது காணலாம். 30அவைகளின் உண்மை நிலை அப்பொழுது வெளிப்படவில்லை. வேதம் கூறும் காலங்களில் இரகசியங்கள் உண்டாயிருந்தன. அவர்கள் யாவரும் யோவான் கண்டவிதமாகவே இச்சம்பவங்களை அர்த்தங் கொண்டனர். உதாரணமாக யோவான் “வெள்ளைக்குதிரையின் மேலிருப்பவனை'' காண்கிறான். ஆனால் அதில் ஒரு இரகசியம் அடங்கியுள் ளது. அதின் இரகசியம் என்னவென்பதை வேதம் கூறும் காலத்திலுள்ளவர்கள் அறிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில் அந்த இரகசியம் என்னவென்று வெளிப்படவேண்டும். ஆட்டுக்குட்டியானவர் இனத்தான் மீட்பராக மத்தியஸ்த ஊழியம் செய்து, பிதாவின் சிங்காசனத்தை விட்டு புறப்பட்ட பின்னர் இந்த இரகசியங்களின் அர்த்தம் வெளிப்படும். 31நான் இப்பொழுது ஒன்றைக் கூறப் போகிறேன். இப்பொழுது, யாராவது இந்த ஒலி நாடாக்களைப் பெற்றுக் கொண்டால்... எந்த மனிதனும் அவன் விரும்பியதைப் பேசலாம். சரியென்று அவனுக்குக் காணப் படுவதை அவன் பேசுவதற்கு உரிமையுண்டு. ஒரு போதகர் இப்பொழுது நான் கூறப்போவதை தன் சபையோருக்கு அறிவிக்க விருப் பங்கொள்ளாமலிருந்தால், அதை அறிவிக்க வேண்டாம். நான் யாருக்கென்று அனுப்பட்டேனோ, அவர்களுக்காக இதைச் சொல்லுகிறேன். ஆகையால் அவர்களுக்கு நான் சத்தியத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். பாருங்கள்? 3259, இங்கே மத்தியஸ்த ஊழியத்தைச் செய்து கொண்டிருந்த ஆட்டுக் குட்டியானவருக்கு யார்யாருடைய பெயர் உலகத் தோற்றத்துக்கு முன் எழுதப்பட்டுள்ளது என்பது தெரியும். அப்பெயர் கொண்டவர்கள் உலகத்தில் தோன்றும்வரை அவர் மத்தியஸ்த ஊழியத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? (சபையார் “ஆமென்” என் கின்றனர்- ஆசி) முன் குறித்தலின் பரிபூரணம். பாருங்கள்? அது சரி. தேவன் எவர்களை நித்திய ஜீவனுக்கென்று நியமித்தாரோ, அவர்களுக்காக அவர் மரிக்க வந்தார். பாருங்கள்? பாருங்கள்? அவர் அவர்களைத் தம் முன்னறிதலினாலே கண்டார். அது அவருடைய சுய சித்தம் அல்ல. யாரும் கெட்டுப் போவது தேவனுடைய சித்தமல்ல. ஆனால் யார் கெட்டுப்போவார்கள், யார் கெட்டுப்போவதில்லை என்பதை அவர் முன்னறிந்திருந்தார். ஆகையால் பூலோகத்தில் தோன்றாத ஒருவரின் பெயர் அதில் இருந்தாலும்கூட, அந்த மனிதன் தோன்றி ரட்சிக்கப்படும்வரை கிறிஸ்து மத்தியஸ்த ஊழியத்தில் நிலைத்திருக்க வேண்டும். கடைசி பெயர் வெண்மையாக்கும் திரவத்தில் (Bleach) விழுந்த மாத்திரத்தில், அவருடைய மத்தியஸ்த ஊழியம் முடிவு பெறும். “அசுத்த மாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும். பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.'' பாருங்கள்? அவர் மத்தியஸ்த பிரகாரத்தை விட்டுப் புறப்பட்டவுடன், அது நியாயாசனமாக மாறுகின்றது. அப்பொழுது கிறிஸ்துவை விட்டு அப்பாற்பட்டிருப்பவர்களுக்கு ஐயோ! 33இப்பொழுது கவனியுங்கள். ஆட்டுக்குட்டியானவர் பிதாவினிடத்திலிருந்து தாம் மத்தியஸ்த ஊழியம் செய்த ஸ்தலத்தை விடும் பொழுது அது வெளிப்படும். இப்பொழுது, இது வெளிப்படுத்துதல் 5-ஆம் அதிகாரமாகும். அவர் முத்திரைகளாகிய புஸ்தகத்தை அல்லது முத்திரைகளுடன் முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தை எடுத்து, அவைகளை உடைத்துக் காண்பிக்கிறார். கவனியுங்கள். இப்பொழுதுள்ள கடைசிக் காலத்தில் மத்தியஸ்த ஊழியம் முடியும்போது, சபை காலங்கள் யாவும் முடிவு பெறுகின்றன. முதலாம் சபையாகிய எபேசு சபையின் காலத்தில், அவர் வருகை தந்து, வெளிப்பாட்டை அளித்து, தூதனை அனுப்பினார். இப்பொழுது நாம், திட்டம் எவ்விதம் அமைந்துள்ளது என்பதைக் காண்போம். ஒரு காரியம் முதலில் சம்பவிக்கும்போது அது பரலோகத்தில் முதலில் அறிவிக்கப்படுகின்றது. சம்பவிப்பது என்ன? ஒரு முத்திரை திறக்கப்படுகின்றது. அது என்ன? ஒரு இரகசியம் வெளியரங்க மாகிறது. பாருங்கள்? இரகசியம் வெளிப்படும்போது, எக்காளம் முழங்குகின்றது. அது போர் உண்டாகும் என்று அறிவிக்கிறது. வாதை விழுகின்றது. சபையின் காலம் திறக்கப்படுகின்றது. பார்த்தீர்களா? 34“போர்” எதற்காக? அந்தச் சபையின் தூதன், முழுவதும் வெளிப்படாத தேவரகசியத்தை பெற்றுக்கொள்கிறான். ஆனால் தேவரகசியத்தைப் பெற்றுக்கொண்டபின், தேவரகசியமானது அவனிடத்தில் அளிக் கப்பட்ட பிறகு அவன் ஜனங்களிடையே செல்கிறான். அவன் ஜனங்களிடம் செல்கிறான். அவன் அங்கே என்ன செய்கிறான்? அவன் அந்தச் செய்தியைப் பிரகடனப்படுத்த ஆரம்பிக்கிறான். அது எதைத் தொடங்கு கிறது? ஒரு யுத்தத்தைத் தொடங்குகிறது-ஆவிக்குரியயுத்தம். அதன் பின்னர் தேவன், அவருடைய செய்தியாளனையும் அக்காலத்தில் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் எடுத்துக் கொண்டு நித்திரையடையச்செய்து, அவர் செய்தியைப் புறக்கணித்தவர்கள் மீது வாதையை வரப்பண்ணுகிறார். தற்காலிக நியாயத்தீர்ப்பு. அது முடிவடைந்த பின்னர், ஜனங்கள் ஸ்தாபனமாகி, ஒரு ஸ்தா பனத்தை உண்டாக்கிக்கொண்டு, வெஸ்லி போன்ற மனிதனின் கிரியைகளில் முக்கியத்துவம் செலுத்துவதனால், மறுபடியுமாக, எல்லாமே குழப்படைகின்றது. பின்னர் வேறொரு தேவரகசியம் புறப்பட்டு வருகின்றது. அப்பொழுது என்ன சம்பவித்தது? மற்றுமொரு சபையின் காலத்திற்கென வேறொரு செய்தியாளன் பூமியில் தோன்றுகின்றான். பாருங்கள்? அவன் வரும்போது, எக்காளம் ஊதுகிறான். அவன் போர் ஒன்றை அறிவிக்கிறான். பாருங்கள்? அதன்பின் சம்பவிப்பது என்ன? அவன் மரித்த பின்பு, வாதை விழுந்து ஒரு கூட்டத்தாரை ஆவிக்குரிய மரணத்தில் ஆழ்த்துகின்றது. அந்த சபையை அழிக்கின்றது. இது ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்கின்றது. ஓ, அது ஒரு மகத்தான திட்டம்! 35கடைசி தூதன் தோன்றும்வரை இது சம்பவிக்கின்றது. கடைசி தூதன் வெளிப்படுத்துவதற்கு ஒரு பிரத்தியேகமான இரகசியம் அளிக்கப்படவில்லை. ஆனால் அவன், அவனுக்கு முன்பிருந்த காலங்களில் உண்மையாக வெளிப்படாத சகல சத்தியங்களையும் திரட்டி அவனுக்கு வெளிப்பாடு அவ்வப்போது அளிக்கப்படும்போது அவைகளை அவன் தன் காலத்தில் எடுத்துரைக்கிறான். அதைக்குறித்து அறிய வேண்டுமா னால் வெளி. 10:1-4 வரை படியுங்கள். அதை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். அது சரி. பாருங்கள்? ''ஆட்டுக்குட்டியானவர் முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தை எடுத்து அதன் முத்திரைகளை உடைத்து,'' அதனுள் அடங்கிய இரகசியத்தை ஏழாம் தூதனுக்குக் காண்பிக்கிறார். தேவரகசியத்தை வெளிப்படுத்துவது மாத்திரமே ஏழாம் தூதனின் ஊழியமாக அமைந்திருக்கிறது. ஏழு சபையின் காலங்களைக் குறித்து வேதத்தில் கூறப்பட்டவைகள் நிறைவேறியுள்ளன என்பதை நாம் சரித்திரப் பூர்வ மாய் சில நாட்களுக்கு முன்பு நிரூபித்து காண்பித்தோம். பாருங்கள்? அது ஏழாம் சபைக்கு, ஏழாம் தூதன் அளித்த செய்தியாகும். சரி, கடந்த காலங்களில் தேவரகசியமாயிருந்தவைகளை ஏழாம் தூதன் அவன் காலத்தில் வெளிப்படுத்துகிறான். வெளி;10:7 அவ்விதம் கூறுகின்றது. “ஏழாம் தூதன் தன் நாட்களில் சுவிசேஷ எக்காளத்தை பல மாய் முழங்கி, எல்லா தேவரகசியத்தை நிறைவேற்ற வேண்டும்'' என்பதை இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். 36ஆதி சபையின் காலங்களில் இது இவ்விதம் வந்தது. அந்த உபதேசத்தைக் குறித்து நாம் சிறிது நேரத்தில் காண்போம். முதலாவதாக அது பேசப்பட்டு, அதன்பின் உபதேசமானது. அது பின்னர் உபதேச சட்டமாக மாறி, பின் ஒரு சபையாகி, இருளின் காலங்களுக்குள் சென்றது. இருளின் காலங்களில் லூத்தர் தோன்றி, முதல் சீர்திருத்தத்தை உண்டு பண்ணினார். அவர், அவருடைய சபையின் காலத்தில், அதற்கு முன்பு மறைவாயிருந்த இரகசியங்களை வெளிப்படுத்தினார். ஆனால் எல்லா இரகசியங்களையும் அவர் வெளிப்படுத்தி முடிக்கவில்லை. அதன் பின்னர் வெஸ்லி தோன்றி, 'பரிசுத்தமாக்கப்படுதல்' (Santification) என்பதைப் பிரசங்கித்தார். அவர் சிலவற்றை அதிக மாய்ப் பெற்றுக்கொண்டார். ஆயினும் அவர் எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்த முடியவில்லை. ஆங்காங்கே தவறான போதகத்தை அவர்களிருவரும் கைக்கொண்டனர். உதாரணமாக வெஸ்லி முழுக்கு ஞானஸ்நானத்திற்குப் பதிலாக தெளிக்கப்படுதலைக் கைக்கொண்டார். அவ்வாறே லூதர் “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம்'' என்பதற்குப் பதிலாக ”பிதா குமாரன், பரிசுத்த ஆவியை ஏற்றுக்கொண்டார். அவர்கள் இவ்விதமாக வித்தியாசமானவைகளைப் பெற்றிருந்தனர். 37பின்னர் பெந்தெகொஸ்தே காலம் பரிசுத்த ஆவியின் ஞானஸ் நானத்துடன் தோன்றியது. அவர்கள் அதை ஆதாரமாகக் கொண்டு ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அதன் பின்னர் வேறொரு சபை காலமிராது. அத்துடன் அது முடிவடைகிறது. அது பிலதெல்பியா சபை.. அல்லது இப்பொழுது, லவோதிக்கேயா சபை. ஆனால் அதன் பின்... ஒவ்வொரு சபையின் செய்தியாளனும் அந்த சபையின் காலம் முடிவடையும் போது தோன்றுகிறான் என்பதை நாம் வேதாகமத்தை ஆராயும்போது, அறிந்துகொண்டோம். பவுல் அவன் சபையின் காலத்தின் முடிவில் தோன்றுகிறான். அவ்வாறே, ஐரினேயஸ், சபையின் காலம் முடிவடையும் நேரத்தில் தோன்றினார். மார்டினும் சபையின் காலத்தின் முடிவில் தோன்றினார். லூதர், கத்தோலிக்க சபையின் கால முடிவிலும், வெஸ்லி, லூதரன் கால முடிவிலும் தோன்றினர். பெந்தெகொஸ்தே, 'பரிசுத்தமாக்கப்படுதல்' போதிக்கப்பட்ட காலத்தின் முடிவில் தோன்றி பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து போதித்தது. பெந்தெகொஸ்தே சபையின் கால முடிவில் நாம் ஒரு செய்தியைப் பெறப்போகிறோம் என்பதாக தேவனுடைய வார்த்தையின்படி இன்றிரவு தேவ ஒத்தாசையைக் கொண்டு உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். கடைசிக்கால செய்தியாளன் அதுவரை தளர்ந்து விடப்பட்டுக் காணப்பட்ட பாகங்களையெல்லாம் நேராக்கி, சபை எடுக்கப் படுவதற்கென, தேவனைக் குறித்த முழு இரகசியத்தையும் வெளிப் படுத்துவான். 38பின்னர் வேதத்தில் எழுதப்படாத ஏழு இரகசியமான இடிமுழக்கங்கள். அது சரி. ஆகவே எடுத்துக் கொள்ளப்படுவதற்கான விசுவாசத்திற்காக மணவாட்டியை ஒன்று சேர்ப்பதற்கென்று, இந்த கடைசி நாட்களில் அந்த ஏழு இடிமுழக்கங்களின் மூலமாக வெளிப்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் இப்பொழுது நம்மிடம் உள்ளதைக் கொண்டு, நாம் எடுக்கப்படுதலில் செல்லமுடியாது. அங்கே ஏதோ ஒன்றுள்ளது. நாம் இன்னும் தூரம் செல்ல வேண்டியவர்களாய் இருக்கிறோம். இப்பொழுது தெய்வீக சுகமளிப்புக்கும்கூட போதிய விசுவாசம் நமக்கில்லை. ஒரு இமைப்பொழுதில் நம் சரீரம் மாறி நாம் இப்பூமியிலிருந்து எடுக்கப்படுவதற்கு, நமக்குப் போதிய விசுவாசம் இருக்க வேண்டும். சற்று பின்பு, கர்த்தருக்குச் சித்தமானால், அது எங்கு எழுதப்பட்டுள்ளது என்பதை நாம் பார்க்கலாம். 39அதன்பின், பொல்லாங்கு செய்த இவர்களுடைய நியாயத்தீர்ப்புகளைக் குறித்து இப்பொழுது பாருங்கள். இந்தக் கடைசி முத்திரை இப்பொழுது உடைக்கப்படும் வரையிலும், காலங்கள் முழுவதும் இம்முத்திரைகள் உடைக்கப்பட்டே வந்தன. அவர்கள் இப்போது போலவே, அப்பொழுதும் முத்திரைகளைக் கவனித்து வந்தனர். அவர்கள் செய்வது என்ன என்பதை ஊகிக்க மட்டும் செய்தனர். இந்த ஏழு முத்திரைகளில் உள்ள இந்த பொல்லாப்பு செய்பவர்கள் சபையில் மர்மமான முறையில் கிரியை செய்தவர்கள். இப்பொழுது சபை காலங்களின் முடிவில் இப்பொல்லாங்கர் அனைவரும் உபத்திரவத்தில் முடிவுறுவர். இவ்விதம் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல் தீங்கு செய்தவர்கள் ஒரு சபையின் பேரால் அதைச் செய்தார்கள் என்பதை இன்னும் சில நேரத்தில் கண்டுகொள்ளலாம். அது மாத்திரமல்ல, அவர்கள்தான் உண் மையான “சபை” என்றும் அவர்கள் கூறிக்கொண்டனர். நான் கூறுவது உண்மைதான் என்பதை நீங்களே கண்டுகொள்ளலாம். ஆகையால் நான் ஸ்தாபனங்களுக்கு விரோதமாய் இருப்பதைக் குறித்து வியப்படை வதற்கில்லை. என்னை அறியாமலே அவைகளுக்கு விரோதமாய் நான் இருந்து வந்திருக்கிறேன். பாருங்கள்? பாருங்கள்? அவர்கள் இவ்விதமாக முடிவுறுகின்றனர். அது ஆதியிலே தீவிர மில்லாத (mild) ஒன்றாகத் தொடங்கி, காலங்கள்தோறும் மோசமாகிக் கொண்டே வந்திருக்கிறது. ஜனங்களும் இது மிகவும் நன்றாயிருக்கிறது'' எனக்கூறி அதை ஏற்றுக்கொண்டனர். ஆனால் கடைசி காலங்களில் இக்காரியங்கள் யாவும் வெளியாக்கப்படுகின்றன. அவர்கள் கடைசி காலத்தில் மிகவும் மோசமான ஒரு நிலையையடைந்து, அதன் விளைவாக உபத்திரவ காலத்திற்குள் செல்வர். 40கிறிஸ்துவின் மணவாட்டி உபத்திரவ காலத்திற்குள் செல்கிறாள் என்று எங்ஙனம் ஒருவன் கூற முடியும்? என்னால் அதைப் புரிந்துகொள் ளவே முடியவில்லை. பாருங்கள்? அவள் உபத்திரவ காலத்திற்கு முன்பு எடுக்கப்படுகிறாள். சபையானது ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட் டிருந்தால், மணவாட்டி இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை ஏற்றுக் கொண்டு அதன் மூலம் நியாயந் தீர்க்கப்பட்டிருந்தால், தேவன் பரிபூரண மாக முற்றிலும் பாவமில்லாத ஒருவனை எங்ஙனம் நியாயந்தீர்க்க முடியும்? “அவ்விதமான நபர் ஒருவரும் இல்லை'' என்று நீங்கள் கூறலாம். மறுபடியும் பிறந்த உண்மையான விசுவாசி ஒவ்வொருவனும் தேவனுக்கு முன்பாக பரிபூரணமாக, முற்றிலுமாக பாவமில்லாதவனா யிருக்கிறான். அவன் தன் கிரியைகளில் சார்ந்திராமல், பாவங்களை அறிக்கையிட்டு பாவங்கள் நீங்கப்பட இயேசுவின் இரத்தத்தின் பேரில் சார்ந்திருக்கிறான். வேதம் அவ்வாறே கூறுகின்றது. பாருங்கள்? “தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான்''. ஏனெனில் அவன் பாவம் செய்யமுடியாது. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என்னும் வெண்மையாக்கும் திரவம் ஒரு மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே இருக்கும் போது, அம்மனிதனைப் பாவி என்று நீங்கள் எவ்வாறு அழைக்கலாம்? அந்த வெண்மையாக்கும் திரவம் பாவத்தைச் சிதறடித்து, அதை ஒன்று மில்லாமல் செய்யும். பாருங்கள்? இயேசு கிறிஸ்துவின் சுத்த இரத்தம் பாவத்தை அதன் வழியாகக் கடந்து செல்ல எவ்வாறு அனுமதிக்கும்? அது ஒருக்காலும் முடியாது. “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக் கிறதுபோல நீங்களும் பூரண சற்குணராயிருக்ககடவீர்கள்'' என்று இயேசு சொன்னார் (மத். 5:48). நாம் சற்குணராயிருக்க வேண்டுமென்று இயேசு சொன்ன காரணத்தினால்தான் அந்த எண்ணமே நம் மனதில் உதித்தது. நாம் சற்குணராயிருக்கவேண்டுமென்று இயேசு விரும்பினால், அதற்கான வழியையும் அவர் உண்டாக்கவேண்டும். அவர் தமது சொந்த இரத்தத்தின் மூலம் அவ்வழியை நமக்கு வகுத்துள்ளார். 41இப்பொழுது, கடந்த காலங்களிலிருந்த இரகசியங்கள் யாவும் வெளிப்படுகின்றன. அநேக காலங்களுக்கு முன்பாக ஆரம்பித்த இந்த இரகசியங்கள் சபைக்காலங்கள் முழுவதுமாக இருந்து வந்து, முத்திரைகள் உடைக்கப்படுகின்ற இக்கடைசிக் காலங்களில் வெளிப் படுத்தப்பட வேண்டும். அந்த சமயத்தில் மத்தியஸ்த ஊழியம் ஏறக் குறைய முடிவடைந்திருக்கும். பிறகு பின்னால் இருப்பவர்களுக்கு நியாயத்தீர்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் அதற்குள் செல்வார்கள். அது மண வாட்டியானவள் காட்சியிலிருந்து எடுக்கப்பட்ட பின்னர் சம்பவிக்கும் ஒன்றாகும். 42ஓ, நாம் ஒரு வேதவசனத்தை சற்று வாசிப்போம். நீங்கள் அனைவரும் வேத வசனத்தைக் குறித்துக் கொள்ள விரும்புகிறீர்கள் அல்லவா? நாம் 2 தெசலோனிக்கேயர் புஸ்தகத்தை ஒரு கணம் எடுத்து ஒரு நிமிடம் அதை இங்கே நோக்குவோமாக. இது இங்கு அழகாக சித்தரிக்கப்பட் டுள்ளது. நான் அதை விரும்புகிறேன். நாம் அதைப் பார்ப்போம். ஆம், இரண்டு தெசலோனிக்கேயர், இரண்டாம் அதிகாரம் 7-வது வசனத்தை நாம் காண்போம். அது சரி என்றே நான் எண்ணுகிறேன். இப்பொழுது, 1தெசலோனிக்கேயர் 2:7. நான் இதை எழுதும்போது, எனக்கு நடுக்கம் பிடித்தது: “அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியை செய் கிறது; ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப் படுமுன்னே அது வெளிப்படாது”. 43தடை செய்கிறவன் யார்? பாருங்கள்? பாருங்கள், “அக்கிரமத்தின் இரகசியம்” முதலாம் சபையின் காலத்திலேயே கிரியை செய்தது. ''அக்கிரமத்தின் இரகசியம்'' என்று பவுல் இங்கே எழுதுகிறான். அக்கிரமம் என்பது என்ன? நாம் செய்யக்கூடாது என்று அறிந்தும், அக்காரியத்தைச் செய்வதுதான் அக்கிரமம். இன்றைக்கு உலகத்தில் அக்கிரமச் செய்கைக்காரர் உள்ளதாக பவுல் கூறியிருக்கிறான். நாம் 3-ம் வசனத்திலிருந்து வாசிப்போம். அதை நாம் ஒரு நிமிடம் வாசிப்போம். எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு கேட்டின் மகனாகிய பாவ மனுஷன் (ம-னு-ஷ-ன்) வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. (அது சரி). அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல் உட்கார்ந்து தன்னைத் தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். (பாவங்களை மன்னித்தல்). நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா? இது போதிக்கப்பட்டபோது, நானும் அப்பொழுது அமர்ந்திருந்து கேட்டிருக்க எனக்கு விருப்பமுண்டு. நீங்கள் அவ்வாறு விரும்பு வதில்லையா? அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு இப்பொழுது அவனைத் தடை செய்கிறது இன்னதென்று அறிந்திருக் கிறீர்களே! 44பாருங்கள்! அக்காலத்திலல்ல, ஆனால், ''அவனுடைய காலத் தில், '' பாருங்கள். அந்த முத்திரை உடைக்கப்படும்போது, அது என்ன வென்று நாமெல்லோரும் அறிந்து கொள்வோம். இந்த அக்கிரமக்காரன் யார்? அக்கிரமம் செய்து, தன் காலத்தில் வெளிப்படும் இந்த பாவ மனு ஷன் யார்? “ஆனால் அவன் தன் காலத்தில் வெளிப்படுவான்''. அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியை செய் கிறது: (வஞ்சிக்கிறவர்கள், ஜனங்களைத் தவறான ஒன்றில் வழி நடத்தி அவர்களை ஏமாற்றுகிறவர்கள். பாருங்கள்) ஆனாலும் தடை செய்கிறவன் (சபை - கிறிஸ்து மணவாட்டி) நடுவிலி ருந்து (தேவனால்) நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது. நீக்கப்படும்போது அந்த அக்கிரமக்காரன் வெளிப்படு வான். கடைசி காலத்தில், முத்திரை உடைக்கப்படும்போது என் காலத் திலல்ல, அவன் வெளிப்படும் அந்த காலத்தில்'' என்று பவுல் கூறு கிறான். பாருங்கள்? அவனை கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து... அதைப் பற்றி சிறிது நேரத்தில் நாம் சிந்திக்கப் போகிறோம்... வாயின் சுவாசத்தினாலே (ஆங்கிலத்தில் வாயின் ஆவி யினாலே (Spirit of his mouth) என்றுள்ளது - தமிழாக்கியோன்) அது என்னவென்பதைப் பார்க்கலாம்... அழித்து தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே (ஆங்கிலத்தில் வருகையின் Brightness - பிரகாசத்தினால் என்றுள்ளது - தமிழாக்கியோன்) நாசம் பண்ணுவார். அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செய லின்படி... அவன், ''அவன்'', - ஒரு மனிதன், அவன் கிரியை சாத்தானின் செயலைப் போன்றிருக்கும். சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய் யான அற்புதங்களோடும் கெட்டுப் போகிறவர்களுக் குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் (ஜனங்களை அநீதியினால் வஞ்சிப்பான்) இருக்கும்... (ஆனால் மணவாட்டியை அவன் வஞ்சிக்க முடியாது. அதைப் போன்ற காரியத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களை அவன் வஞ்சிப்பான்.) இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின் மேலுள்ள அன்பை அவர்கள் அங்கீகரியாமற் போனபடியால்... கிறிஸ்துதான் சத்தியம். கிறிஸ்துதான் வார்த்தை . அவர்கள் சத்தியத்தை ஏற்பதைக் காட்டிலும் ஸ்தாபனங்களின் பிரமாணங்களை ஏற்பர் ஊம்... பாருங்கள்? அப்படி நடக்கும். ஆகையால் சத்தியத்தை விசுவாசி யாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள் ளாக்கப்படும்படிக்கு அவர்கள் பொய்யை விசுவாசிக்கத் தக்கதாக... 45ஒரு பொய்யை அல்ல, நான் 'லெக்சிகன்' அகராதியில் கண்ட படி, அது “அந்த பொய்'', ”ஒரு பொய்' அல்ல. “அந்த பொய்'' ஏவா ளிடம் அதையே அவன் சொன்னான்). கொடிய வஞ்சகத்தைக் தேவன் அவர்களுக்கு அனுப்புவார். என்னே ஒரு அறிவிப்பு. மணவாட்டி எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் இந்த பாவமனுஷன் தன்னை வெளிப்படுத்துவான். அவள், கிறிஸ்துவின் உண்மையான மணவாட்டி. ஒவ்வொரு சபை காலத்திலும் தெரிந்தெடுக்கப்பட்டுவிட்டவளாய் இருக்கிறாள். இப்பொழுது, “மணவாட்டி தன் வீட்டுக்கு எடுத்துச் செல்லப் படுவதை அநேகர் அறியவே மாட்டார்கள்,'' என்று அன்றொரு நாள் நான் உங்களிடம் கூறினேன். அது உண்மை . ஒருவர் என்னிடம், 'சகோ. பிரான்ஹாம்! அப்படியானால் மணவாட்டி மிகச் சிறிய கூட்டமாக இருக்குமே'' என்றார். 46இயேசு, 'நோவாவின் நாட்களில் நடந்தது போல'' என்று கூறி னார். நீங்கள் அவரிடம் அதைக் கேட்டுப் பாருங்கள். அக்காலத்தில் எட்டு பேர் தண்ணீரினால் காப்பாற்றப்பட்டனர். மனுஷக்குமாரன் வரும் நாளிலும் அவ்விதமாகவே இருக்கும்.'' இன்றிரவு 800 பேர் எடுக்கப் பட்டால், நாளை அல்லது எப்பொழுதுமே அதைக் குறித்து ஒரு வார்த் தையும் கூட நீங்கள் கேள்விப்படாமல் இருக்கலாம். அவர்கள் போய் விட்டு இருப்பார்கள். நீங்கள் அதை அறியாமல் இருக்கலாம். பாருங்கள், அது அவ்விதமாக மட்டுமே இருக்கும். நான் உங்களுக்கு என்ன கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்? நான் உங்களைப் பயப்படுத்தவோ அல்லது உங்களில் கவலையுண் டாக்கவோ முயலவில்லை. நீங்கள் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். விழித்துக் கொண்டிருந்து ஒவ்வொரு நிமிடமும் ஆயத்தமாயிருங்கள். அர்த்தமற்ற யாவையும் அகற்றுங்கள். தேவனுடன் அலுவலில் ஈடுபடுங்கள். ஏனெனில் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகிவிட்டது. 47இப்பொழுது உண்மையான மணவாட்டி உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது தவறான மணவாட்டி ஒன்று உண்டு என்பதை அறியவும். அதை வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்தில் பார்க்கலாம். அவள்... ''நான் ஒரு விதவை, எனக்கு ஒரு குறைவுமில்லை'' என்று சொல்லிக் கொள்கிறாள். அவள் சிவப்பு மிருகத் தின்மேல் உட்கார்ந்திருக்கிறாள் என்பதை நீங்கள் பாருங்கள். இப்பொழுது, ஆனால் உண்மையான மணவாட்டியோ, ஒவ்வொரு சபையின் காலத்திலும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை ஒருங்கே கொண்ட ஆயிரமாயிரம் பேராயிருக்கும். ஒவ்வொரு சபையின் காலத்திலும் அளிக்கப்பட்ட செய்தியை விசுவாசித்து அதன் முழு வெளிச்சம் அனைத்தையும் ஏற்றுக்கொண்டவர் அனைவரும் மீட்கப்படும் நாளுக் கென்று முத்திரிக்கப்படுகின்றனர். ஏழாம் ஜாமத்தில், “இதோ மணவாளன் வருகிறார். அவருக்கு எதிர்கொண்டு போகப் புறப்படுங்கள் என்னும் சத்தம் உண்டானது'' என்று இயேசு கூறினபோது, இதைத்தான் குறிப்பிட்டார். ஏழாம் ஜாம மென்பது கடைசி சபையின் காலம். பாருங்கள்? அப்பொழுது புத்தியில்லாத கன்னிகைகள் உறக்கத்தினின்று எழுந்து, கண்களைத் துடைத்தவாறு, 'நாங்களும் எண்ணெயைப்பெற வேண்டும். நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்' என்று கூறுவர். ஆனால் அங்குள்ள உண்மையான மணவாட்டி புத்தியில்லாத கன்னிகைகளை நோக்கி, ''நாங்கள் உள்ளே செல்வதற்குப் போதிய எண்ணெய் மாத்திரமே எங்களிடம் உள்ளது. உங்களுக்கு எண்ணெய் கொடுக்க எங்களால் இயலாது. ஊம்... எண்ணெய் வேண்டுமானால், நீங்கள் சென்று ஜெபியுங்கள்'' என்பார்கள். புத்தியில்லாத கன்னிகைகள் எண்ணெய் வாங்கச் சென்ற சம் யம், மணவாளன் வந்துவிட்டார். மணவாட்டி அவருடன் கலியாண விருந்துக்குள் பிரவேசித்தாள். அப்பொழுது முற்றிலும் உத்தமமான மீதியானவர்கள் - அதாவது சபை - வெளியே விடப்படுகின்றனர். அங்கே அழுகையும், மார்பை அடித்துக் கொள்ளுதலும் (wailing), பற்கடிப்பும் உண்டாயிருக்கும் (மத். 25:1-12). 48இப்பொழுது தெரிந்து கொள்ளப்பட்ட இவர்களைப் பாருங்கள். மணவாளன் வருகிறார்' என்னும் சத்தம் எழுந்தவுடன், சபையின் காலங்கள் தோறும் நித்திரையடைந்திருந்த ஒவ்வொருவரும் உயிரோடெழு கின்றனர். பாருங்கள்? இக்காலத்திலுள்ள சில ஆயிரம் பேரை மாத்திரம் தேவன் தேடிப் பிடித்து அவர்களை எடுத்துச்செல்வார் என்று கூறுவது சரியல்ல. ஒவ்வொரு சபையின் காலத்திலும் தெரிந்து கொள் ளப்பட்டவர்கள் எடுக்கப்படுவர். தெரிந்து கொள்ளப்பட்ட கடைசி நபர் கடைசி காலத்தில் உட்பிரவேசிக்கும் வரை, கிறிஸ்து மத்தியஸ்த ஸ்தா னத்தை வகிக்கவேண்டும். இத்தகைய வெளிப்பாடு ஜனங்களுக்கு அளிக்கப்படும்போது, அவர்கள் என்ன நிகழ்ந்துள்ளது என்று புரிந்து கொள்கின்றனர். பாருங்கள்? உங்களுக்கு இப்பொழுது புரிகின்றதா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) அது சரி. 49கவனியுங்கள், ''மரணமடைந்த மற்றவர்கள்''- ஸ்தாபனத் தின்-அங்கத்தினர்கள், “ஆயிரம் வருஷம் முடிவடையுமளவும் உயிரடையவில்லை.'' சபையின் அங்கத்தினர்கள் - கிறிஸ்தவர்கள், சபை, ஆயிரம் வருடங்கள் முடியும் வரையிலும் உயிரோடிருப்பதில்லை. அதன்பின்பு அவர்கள் உயிரோடெழுந்து மணவாட்டிக்கு முன்பாக- ராஜாவுக்கும் ராணிக்கும் முன்பாக - நிற்கின்றனர். அது உண்மை . ஓ மகிமை ! சில ஸ்தாபனங்கள் இன்று தங்களைப் பரலோகத்தின் ராணி' என்று அழைத்துக் கொள்கின்றன. 50ஆனால் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட கிறிஸ்துவின் மண வாட்டிதான் உண்மையில் பரலோகத்தின் ராணியாவாள். அவள் அவருடன் புறப்பட்டு வருகிறாள். தானியேல் இக்காட்சியைக் கண்டு, “ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவித்தார்கள்'' என்கிறான் (தானி. 7: 9-10) தானியேலின் புஸ்தகத்தைப் படித்தால், ''அப்பொழுது நியாய சங்கம் உட்கார்ந்தது, புஸ்தகங்கள் திறக்கப்பட்டன'' என்று நாம் பார்க் கலாம். அவர் வரும்போது தம் மணவாட்டியுடன் கூட வருகிறார் என்பதை ஞாபகங்கொள்ளுங்கள். மனைவி தன் கணவனுக்குச் சேவை செய்வாள். ஆயிரமாயிரம் பேர் அவருக்குச் சேவை செய்ததாக தானியே லின் புத்தகம் உரைக்கிறது. நியாய சங்கம் உட்கார்ந்தது: புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. அது ஜீவ புஸ்தகம். மணவாட்டி என்பதே இங்கு இல்லை. மணவாட்டி அவருடன் சென்று மறுபடியும் வந்து தங்கள் தங்கள் தலைமுறைகளில் சுவிசேஷ செய்தியை ஏற்றுக்கொள்ள மறுத்தவர் அனைவரையும் நியாயந்தீர்ப் பாள். 51“தென் தேசத்து ராஜஸ்திரீ நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த சந்ததி யாரோடெழுந்து இவர்கள் மேல் குற்றஞ் சுமத்துவாள்'' என்று இயேசு கூறவில்லையா? ”அவள் சாலோமோனுடைய ஞானத்தைக் கேட்க பூமி யின் எல்லைகளிலிருந்து வந்தாள். இதோ சாலோமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்!'' தென் தேசத்து ஷீபாவின் ராணி நியாயத்தீர்ப்பு நாளிலே அங்கு நின்று கொண்டு தன் சாட்சியைக் கூறுவாள். அந்த சந்ததியிலே யூத மார்க்கத்தைக் கடைபிடித்த ஒருவனும் கூட இல்லை. ஏனெனில் அவர்கள் குருடராயிருந்து அவரைக் கண்டு கொள்ளத்தவறினர். அவர்கள் அவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் எளிமையில் தோன்றிய காரணத்தால் அவர்கள் குப்புற விழுந்தனர். ஆனால் அந்த புகழ்வாய்ந்த ராணியோ தன்னைத் தாழ்த்தி செய்தியை ஏற்றுக்கொண்டாள். “அவள் நியாயத்தீர்ப்பின் நாளில் நின்று அந்த சந்ததியின் மேல் குற்றம் சுமத்துவாள்'' என்று இயேசு கூறினார் இங்கே மூன்று சாராரை எப்பொழுதுமே நாம் காணலாம். புஸ்தகம் திறக்கப்பட்டது. மரித்தோர் நியாயத்தீர்ப்படைந்தனர். வேறொரு புஸ்தகம் ஜீவபுஸ்தகம் - ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டவர்கள். 52“உங்கள் பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தால் எல்லாம் சரியாயிருக்கிறது'' என்கிறார்கள். இல்லை ஐயா! யூதாஸ் காரியோத்தின் பெயரும் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதே என்று கவனித்துப் பாருங்கள். இது தவறு என்று நீங்கள் நினைக்கிறீர்களா? மத்தேயு பத்தாம் அதிகாரத்தில், இயேசு சீஷர்களுக்கு பிசாசுகளைத் துரத்தவும், பிணியாளிகளை சொஸ்தப்படுத்தவும், குஷ்ட ரோகிகளை குணமாக்கவும், மரித்தோரை உயிர்ப்பிக்கவும் அதிகாரம் கொடுத்தார். அவர்களில் யூதாஸ் காரியோத்தும் ஒருவனாவான். அவர்கள் பிசாசுகளைத்துரத்தி, அற்புதங்களைச் செய்து திரும்பி வந்து அவரிடம், “ஆண்டவரே, பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகின்றன'' என்றனர். 53அதற்கு இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, “பிசாசுகள் உங்களுக்குக் கீழ்படிவதனால் நீங்கள் சந்தோஷப்படாமல், பரலோகத்தில் உங்கள் பெயரெழுதப்பட்டிருப்பதற்காக சந்தோஷப்படுங்கள்” என்றார். யூதாஸும் அவர்களில் ஒருவனாயிருந்தான். ஆனால் என்ன நேர்ந்தது? தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவியைப் பெறவேண்டிய சமயம் வந்தபோது, யூதாஸ் தன் உண்மையான ரூபத்தைக் காண்பித்தான். அவனும் நியாயத்தீர்ப்பில் இருப்பான். ஆகவே, புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. ஜீவ புஸ்தகமும் திறக்கப்பட்டது. ஒவ்வொரு மனிதனும் இவ்விதம் நியாயந்தீர்க்கப்பட்டான். மணவாட்டியோ கிறிஸ்துவுடன் நின்று கொண்டு உலகத்தை நியாயந்தீர்க்கிறாள். பவுல், (மணவாட்டியிடம்) “உங்களுக்குள்ளே வழக்குண்டானால் வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல் அநீதிக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன? பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந் தீர்ப்பார்களென்று அறியீர்களா?' என்றான். (1 கொரி. 6:1-2). பாருங்கள்? ஆம், பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்த்து அதைக் கைப்பற்றுவார்கள். அது சரி. . 54நீங்கள் ஒருக்கால், “இந்த சிறு மணவாட்டியின் குழு எவ்வாறு அங்ஙனம் செய்யமுடியும்?'' என்று கேட்கலாம். அதைக் குறித்து எனக்குத் தெரியாது. அவர்கள் அவ்விதம் செய்வார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். அதன் பிறகு என்னைப் பொறுத்தவரை மறு பேச்சே கிடை யாது. இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது கவனியுங்கள். ''மரண மடைந்த மற்றவர்கள் (அதாவது மரித்துப்போன ஸ்தாபனத்தின் அங்கத்தினர்கள்) ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.'' ஆயிரம் வருஷம் முடிவடைந்த பின்பு, இரண்டாம் உயிர்த்தெழுதல் நிகழ்கின்றது. அப்பொழுது இவர்கள் உயிரோடெழுந்து ஒன்று சேர்க் கப்படுகின்றனர். கிறிஸ்துவும் மணவாட்டியும் (சபையல்ல, மண வாட்டி) கிறிஸ்துவும், ராணியும் அங்கு நின்று கொண்டிருக்கின்றனர். 55உயிரோடெழுந்தவர்கள். வெள்ளாடுகள் செம்மறியாடுகளி லிருந்து பிரிக்கப்படுவது போன்று, இரு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றனர். அது சரி. அங்கே ஸ்தாபனத்தின் அங்கத்தினர்கள் காணப்படு கின்றனர். அவர்கள் சத்தியத்தைக் கேட்டு அதைப் புறக்கணித்தவர்கள். அவர்கள் அதைக் குறித்து எண்ணிய எண்ணங்களெல்லாம் வானத்தின் விரிவுகளிலே எழுதப்பட்டிருக்கும்போது அவர்கள் எப்படி தப்பித்துக் கொள்ள முடியும்? தேவனுடைய மகத்தான டெலிவிஷனில் உங்கள் எண்ணங்களெல்லாம் திரையிடப்படும். அச்சமயம் உங்கள் சிந்தனைகளே உங்களுக்கு விரோதமாக சாட்சி பகரும். அந்த நேரத்தில் உங்கள் சிந்தனைகளே உங்களுக்கு எதிராக சாட்சி கூறும். ஆகையால் நீங்கள் வெளிப்புறம் ஒன்றைச் சொல்லி, உட்புறத்தில் வேறுவிதமாக எண்ணும் இயல்புடையவர்களாயிருந்தால், அதை உடனடியாக நிறுத்திவிடுங்கள். உங்கள் சிந்தனைகளெல்லாம் தேவனையே நோக்கி இருக்கட்டும். அவைகளைச் சுத்தமாக வைத்துக் கொண்டு அதில் நிலைகொண்டிருங்கள். எப்பொழுதும் அதே காரியத்தைப் பேசுங்கள். பாருங்கள்? 'நல்லது, நான் விசுவாசிப்பதாய் தற்பொழுது சொல்லிவிடுகிறேன். ஆனால் அது சரியா, தவறா என்பதை பிறகு ஆராயலாம்'' என்று மாய்மாலம் கொள்ளவேண்டாம். நான் அதை விசுவாசிக்கிறேன் என்று கூறுங்கள். ஆமென். 56இந்த சாராரைப் பாருங்கள். அவர்கள் மரிக்கும் காரணம், உபத் திரவ காலத்தில் நேரிடும் சோதனையில் அவர்கள் பங்கு கொண்டு சுத்திகரிக்கப்படவேண்டும். ஏனெனில் அவர்கள் இரத்தத்தின் கீழ் இல்லை! அவர்கள் இரத்தத்தின் கீழ் உள்ளதாக சொல்லிக்கொள்கின்றனர். ஆனால் உண்மையாக அவர்கள் இல்லை. அவர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ் துவின் இரத்தத்தின் கீழ் இருந்திருப்பார்களானால், அந்த வெண்மையாக்கும் திரவம் பாவத்தின் லட்சணம் அனைத்தையும் அவர்களிடத்திலிருந்து போக்கியிருக்கும். அப்படியானால் அவர்கள் சுத்திகரிக்கப்படுவதற்கும் உபத்திரவகாலம் போன்ற ஒரு சோதனை அவர்களுக்கு அவசியமில் லையே! நீங்கள் ஏற்கனவே மரித்து, உங்கள் ஜீவன் கிறிஸ்துவின் மூல மாய் தேவனுக்குள் மறைந்து கிடந்து, பரிசுத்த ஆவியினால் நீங்கள் முத்தரிக்கப்பட்டிருந்தால், பின்னை ஏன் நீங்கள் நியாயந்தீர்க்கப்படவேண்டும்? உங்கள் சுத்திகரித்தலை எங்கே பெற்றுக்கொள்கிறீர்கள்? நீங்கள் கிறிஸ்துவுக்குள் பாவமில்லாமல் பரிபூரணப்பட்டிருந்தால், உங்களுக்கு சுத்திகரிப்பு அவசியமேது? உங்களுக்கு நியாயந்தீர்ப்பு எதற்கு? ஆனால் உறங்கிக் கொண்டிருக்கும் கூட்டம் மட்டுமே (புத்தியில்லாத கன்னி கைகள்-தமிழாக்கியோன்) உபத்திரவத்திலிருந்து தப்பிக்காது. 57இப்பொழுது, அநேக வருடங்களாக அதை அவர்கள் செய்யவில்லை என்பதை நீங்கள் பாருங்கள். மணவாட்டி வருகின்ற வேளையிலே வெளிப்படுத்தப்படுகின்றது. தேவரகசியங்கள் வெளிப் படும் தருணம் இதுதான், பாருங்கள். பாருங்கள். முடிவான காரியங்கள் வந்து கொண்டிருக்கின்றன. எல்லாம் முடிவுக்கு வருகின்றன. நண்பனே, எல்லாம் முடிவுக்கு வருகிறது என்று நான் நம்புகிறேன். எப்பொழுது? அதை நானறியேன். என்னால் அதைக் கூறமுடியாது. ஆனால் ஏதாவது... இன்றிரவு அது ஒருக்கால் நேர்ந்தால், அதற்கு நான் ஆயத்த மாயிருக்க வேண்டும். பாருங்கள்? ஒருக்கால் இன்றிரவு அவர் வரலாம். இல்லையேல் அவர் இன்னும் இருபது வருடத்திற்கு வராமலும் இருக்க லாம். அவர் எப்பொழுது வருவார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அது எப்பொழுது இருந்தாலும்... ஒருக்கால் என் வாழ்க்கை இன்றிரவு முடிவடையலாம். நான் செய்த அனைத்தும் அச்சமயத்தில் முடிவு பெறும். நான் வாழ்ந்த ஜீவியத்திற்காக அவரை நியாயத்தீர்ப்பில் சந்திக்க வேண் டியவனாயிருக்கிறேன். ''ஒரு மரம் எப்பக்கம் சாய்கிறதோ, அப்பக்கத் திலே அது விழும்.'' 58நினைவுகொள்ளுங்கள். அவர்கள் எண்ணெய் வாங்கச் சென்ற போது... ஓ, “ இப்பொழுது ஒரு நிமிடம் பொறுத்திருங்கள். சகோ. பிரான்ஹாமே, அதைப் பற்றி எனக்குத் தெரியாது'' என்று நீங்கள் கூற லாம். அவர்கள் எண்ணெய் வாங்கச் சென்று திரும்பி வந்தபோது, மண வாட்டி ஏற்கனவே சென்றுவிட்டாள். கதவும் அடைபட்டுவிட்டது. அவர்கள் கதவைத் தட்டி, ”எங்களை உள்ளே அனுமதியும், எங்களை உள்ளே அனுமதியும்'' என்று கூக்குரலிட்டனர். (சகோ. பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை அநேக முறைகள் தட்டுகிறார்-ஆசி). ஆனால் அவர்கள் புறம் பான இருளில்தான் இருந்தனர். அதற்கு ஒரு முன்னடையாளம் உங்களுக்கு வேண்டுமானால், 'நோவாவின் காலத்தில்', இயேசு அதைக் குறிப்பிட்டுச் சொன்னார். இப்பொழுது நோவாவின் காலத்தில் அவனும் அவன் குடும்பத்தினரும் பேழைக்குள் சென்று நியாயத்தீர்ப்பின் காலத்தில் அவர்கள் நியாயத்தீர்ப்புக்குத் தப்பினர். ஆனால் அவர்கள் கிறிஸ்துவின் மணவாட்டிக்கு முன்னடையாளமல்ல. ஏனோக்குதான் மணவாட்டிக்கு முன்னடையாளமாய் இருந்தவன். ஏனோக்கு! நோவா உபத்திரவ காலத்திற்குள் பிரவேசித்து, துன்பப்பட்டு குடிகாரனாய் மரித்துப்போனான். ஆனால் ஏனோக்கு 500 வருடங்களாக தேவனுடன் சஞ்சரித்து, எடுக்கப்படுதலுக்கேற்ற விசுவாசம் கொண்ட வனாய் “தேவனைப் பிரியப்படுத்தினான்'' என்ற சாட்சியைப் பெற்றிருந் தான். அவன் நடந்து சென்று வானத்தைக் கடந்து, மரணத்தைருசிபாராமல் தன் பரலோக வீட்டை அடைந்தான். அவன் மரிக்கவே யில்லை . 59'உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை' என்பதற்கு அது முன்னடையாளமாயிருக்கிறது. நித்திரையடைந்தவர்கள் வயது சென்ற காரணத்தாலும் சரீர நிலையின் காரணத்தாலும் நித்திரையடைந்தனர். அவர்கள் அங்கே மரித்தார்கள்; ஆனால் அவர்கள் மரிக்கவில்லை. அவர்கள் நித்திரையடைந்திருக்கின்றனர். ஆமென். அவர்கள் நித்திரையடைந்திருக்கின்றனர்; அவர்கள் மரிக்க வில்லை. மணவாளன் வந்து அவர்களை நித்திரையினின்று எழுப்பவேண்டும். ஆம். 'உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில் தேவ எக்காளம் முழங்கும்போது கிறிஸ் துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். உயிரோடிருக் கிற நாம் அவர்களோடுகூட எடுக்கப்பட்டு கர்த்தரை ஆகாயத்தில் சந்திப்போம்.'' ''மரணமடைந்த மற்றவர்கள் ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.'' அவர்கள் நோவாவைப்போல் உபத்திரவகாலத்திற்குள் பிரவேசித்தனர். 60அது என்ன? ஏனோக்கைப் போல, நோவா ஏனோக்கை கவனித்துக் கொண்டேயிருந்தான் என்பதை நாம் அறிவோம். ஏனெனில் ஏனோக்கு காணப்படாமற்போனபடியால், நியாயத்தீர்ப்பின் சமயம் நெருங்கி விட்டது என்பதை அவன் அறிந்திருந்தான். நோவா பேழையின் அருகில் இருந்து கொண்டிருந்தான். ஆனால் நோவா வானத்திற்கு எடுக்கப்படவில்லை. அவன் ஒரு துண்டு மரத்தை உயர்த்தி, உபத்திரவத்தின் மேல் சவாரி செய்தான். உபத்திரவ காலத்தை அவன் கடந்து, பின்பு மரித்துப் போனான். பாருங்கள்? நோவா உபத்திரவ காலத்தைக் கடந்து போனான். ஆனால் ஏனோக்கு மரணமின்றி எடுக்கப்பட்டான். சபையானது நித்திரையடைந்தவர்களுடன்கூட எடுக்கப்பட்டு கர்த்தரை ஆகாயத்தில் சந்திப்பதற்கு, ஏனோக்கின் சம்பவம் ஒரு முன்னடையாளமாக அமைந் துள்ளது. ஆனால் கைவிடப்பட்ட சபையோ உபத்திரவ காலத்திற்குள்பிரவேசித்தது. எனக்கு இதைத்தவிர வேறான்றும் செய்யத் தெரியவில்லை. ஏனோக்கு, மரணமடையாமல் எடுத்துக்கொள்ளப்பட்டான். 61இப்பொழுது நாம் முத்திரையைக் குறித்து சற்று ஆராய்வோம். நாம் மற்றவைகளை சொல்லிக்கொண்டே போனால் முத்திரைகளைச் சிந்திப்பதற்கு நமக்கு சமயமிராது. இப்பொழுது கவனியுங்கள். முத்திரைகள் நீண்ட நேரம்... அவ்வப்போது நாம் எக்காளத்தைக் குறித்தும் ஆராய்வோம். ஏனெனில் முத்திரைகள் உடைக்கப்படும் அதேசமயத்தில் எக்காளமும் முழங்குகின்றது. அவையிரண்டும் ஒன்றாகும். சபையின் காலம் தொடங்குகின்றது. அவையிரண்டும் ஒன்றாகும். பாருங்கள்? 62கவனியுங்கள், இப்பொழுது எக்காளம் எப்பொழுதும் போரை அல்லது அரசியல் சம்பந்தமாக நேரிடும் தகராறைக் குறிக்கிறது. எக்காளம் அரசியல் தகராறை உண்டாக்கும். அது போருக்குக் காரணமாயிருக்கும். இப்பொழுது நம்மிடையில் உள்ளது போன்று, அரசியலில் குழப்பம் உண்டானால் யுத்தம் நெருங்கிவிட்டது என்பது அதன் அர்த்தம். இராஜ்யம் இப்பொழுதும் சாத்தானுக்குத்தான் சொந்தமா யிருக்கிறது. அவன் இன்றும் இப்பங்கை தன் கரத்தில் வைத்திருக்கிறான். ஏன்? கிறிஸ்து அதை மீட்டுக்கொண்டார். ஆனாலும் அவர் மத்தியஸ்த ஊழியத்தைச் செய்து. தம் பிரஜைகளை சேர்த்துக்கொண்டு வருகிறார். புத்தகத்தில் பெயர் எழுதப்பட்ட கடைசி நபர் அவரை ஏற்றுக் கொண்டு முத்திரிக்கப்படும்வரை அவர் அவ்வூழியத்தில் நிலைகொள்ள வேண்டும். இப்பொழுது உங்களுக்குப் புரிகிறதா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர்-ஆசி). அதன் பின்பு அவர் அவருடைய சிங்காசனத்திலிருந்து, தம் முடைய பிதாவின் சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வந்து சிங்காசனத்தில் வீற்றிருக்கிற தேவனுடைய வலது கரத்திலிருந்து புத்தகத்தை எடுத்து, தம் உடமைகளைப் பெற்றுக்கொள்ளுகிறார். அவர் செய்யும் முதலாவது செயல் மணவாட்டியை அழைத்துக் கொள்வதாகும். ஆமென்! அதன் பின்னர் அவர் என்ன செய்கிறார்? அதன் பின்னர் அவர் தம்முடைய எதிரியாகிய சாத்தானைக் கட்டி, அவனையும் அவனைப் பின்பற்றின அனைவரையும் அக்கினியில் தள்ளுகிறார். இப்பொழுது நீங்கள் நினைவுகொள்ளுங்கள். ருஷியா அந்திக் கிறிஸ்துவல்ல, இல்லை. அந்திகிறிஸ்து மிகவும் மிருதுவானவன். அவன் எவ்வளவு மிருதுவானவன் என்பதைக் கவனித்துப் பாருங்கள். அவன் தந்திரமுள்ள ஒருவன். வெளிப்புறம் நல்லவனைப் போல் காணப்படுவான். ஆம் ஐயா. பரிசுத்த ஆவி மாத்திரமே அவனை மேற்கொள்ள முடி யும். 63கவனியுங்கள், எக்காளம் அரசியல் தகராறை எடுத்துக் காட்டுகிறது. யுத்தம், மத்தேயு 24-ம் அதிகாரத்தில் இயேசு ''நீங்கள் யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது...'' அது கடைசி வரையிலும் கேட்கும்...'' என்கிறார். உங்களுக்கு அது நினைவிலிருக்கின்றதா... இயேசு அதைக் கூறுகின்றார், ''யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும், யுத்தங்களின் செய்திகளும் யுத்தங்களும்,'' கடைசி வரையில் அது இருக்கும். அது ஒரு எக்காள முழக்கமாகும். தொடர்ந்து ஒவ்வொரு காலங்களிலும் சம்பவிக்கின்றது. நாம் எக்காளத்தைக் குறித்து சிந்திக்கும்போது, கடந்தகாலங்களில் நிகழ்ந்துள்ள யுத்தங்கள் ஒவ்வொன்றும் அந்தந்த சபையின் காலங்களைப் பின் தொடர்ந்தன என்று பார்க்கலாம். அவை முத்திரைகளையும் பின் தொடர்ந்தன. 'யுத்தங்களும்.... யுத்தங்களின் செய்திகளும்'' எக்காளம் என்பது அரசியல் தகராறைக் குறிக்கிறது. ஆனால் முத்திரை என்பது மதசம்பந்தமாக நேரிடும் குழப்பத்திற்கு எடுத்துக்காட்டாயிருக்கிறது. பாருங்கள்? ஒரு முத்திரை திறக்கப்படும்போது ஒரு செய்தி அளிக்கப்படுகிறது. சபையானது தன் சொந்த அரசியல் முறைகளைக் கையாடி, கெளரவம் கொண்ட அநேகர்களை அங்கத்தினர்களாய்க் கொண்டதாய் குழப்பமுற்றிருக்கும் நிலையில், தூதன் அங்கு தோன்றி உண்மையான செய்தியை அறிவித்து, அவர்களை சின்னாபின்னப்படுத்துகிறான். அது சரி, முத்திரை திறக்கப்படுதல் மதசம்பந்தமான தகராறுக்கு அறிகுறியாகும். சம்பவித்ததும் அதுவே ஆகும். ஆம், ஆம். 64அவர்கள் அனைவரும் சீயோனைக் குறித்து அசட்டை கொண்டனர். சபையானது அமைதிகொண்டது. ''நாங்கள் ஸ்தாபிக்கப்பட்டு அமைதி கொண்டிருக்கிறோம்'' என்று கூறிக்கொண்ட இங்கிலாந்து சபையைப் போல, சபை அமைதி கொண்டது. கத்தோலிக்க சபை இவ்விதம் நினைத் துக்கொண்டிருந்தபோது, லூத்தர் அங்கு தோன்றினார். அப்பொழுது மத சம்பந்தமான தகராறு நேரிட்டது. ஆம், ஐயா. நிச்சயமாக! நல்லது. அவ்வாறே இங்கிலாந்து சபையானது ஸ்விங்லி (Zwingli) கால்வின் (Calvin) போன்ற சுவிசேஷகர்களைக் கொண்டதாய் விளங்கி, பின்னர் அமைதி கொண்டிருந்தபோது, வெஸ்லி அங்கு தோன்றினார். அதன் விளைவால் மதசம்பந்தமான தகராறு நேரிடுகிறது. அது சரி, பாருங்கள். முத்திரை எப்பொழுதுமே மதசம்பந்தமான தகராறுக்கு அறிகுறியாகும். 65இப்பொழுது, முத்திரையைக் குறித்து... நாம் சற்று அதைச் சிறிது படிப்போம். நான் இந்தப் பொருளை எடுக்க விரும்புவதால், நாம் அதைப் படிப்போம். நான் பேசிக்கொண்டே இருந்துவிடுகிறேன். நான்... ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். (என்ன நேர்ந்தது?) அப்பொழுது.... இடி முழக்கம் போன்ற சத்தமாய் சொல்லக் கேட்டேன். ஓ! அதைக் குறித்து சில நிமிடங்கள் தியானிக்க எவ்வளவு ஆவல் கொண்டுள்ளேன்! கர்த்தருடைய ஆறுதலுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் மக்கள் இவையாவும் அறிந்து நன்கு ஆராய முற்படுவார்கள் என்று நம்புகிறேன். ஒலி நாடாக்களைக் கேட்பவரும்கூட இதனை நன்கு சிந்தியுங்கள். ஆட்டுக்குட்டியானவர் முதலாம் முத்திரையை உடைத்தபோது, ஒரு இடிமுழக்கம் உண்டானது. இப்பொழுது அதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அது முக்கியத்துவமானது. இதற்கு ஒரு அர்த்தம் உண்டு. இதுதான் அர்த்தம். அர்த்தமில்லாமல் எதுவும் நேரிடுவதில்லை. சரி. ஒரு இடிமுழக்கம் உண்டானது. இடிமுழக்கம் என்ன என்பதைக் குறித்து நான் ஆலோசிக்கலானேன். 66இப்பொழுது நாம் சிறிது படிப்போம். மத்தேயுவிற்கு திருப்பு வோம்... இல்லை. நாம் பரிசுத்த யோவான் முதலாவதற்குத் திருப்புவோம்... நாம் யோவான் 12-ம் அதிகாரத்தை எடுத்து, அங்கு ஒரு நிமிடம் நிறுத்திக்கொள்வோம். யோவான் 12-ம் அதிகாரத்தை நாம் எடுத்து 23-ம் வசனத்திலிருந்து வாசிப்போம். இப்பொழுது நீங்கள் உன்னிப்பாய்க் கவனியுங்கள். அதன்பின் அது என்ன என்று நீங்கள் அதிசயிக்க வேண்டியதில்லை. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது. பாருங்கள், இங்கு ஒருயுகம் முடிவடையும் ஒரு தருணத்தைக் காண்கிறோம். இயேசுவின் ஊழியம் முடிவடைந்து கொண்டிருக்கிறது. பாருங்கள்? “மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது.'' அப்படியானால் ''மணவாட்டி எடுக்கப்படும்படியான சமயம் வரும்போது, '' அல்லது “இனி காலம் செல்லாது'' என்று சொல்லப்பட வேண்டிய சமயம் வரும்போது என்ன நேரிடும்? பலமுள்ள தூதன் ஒரு பாதத்தைச் சமுத்திரத்தின் மேலும் ஒரு பாதத்தை பூமியின் மேலும் வைத்து சிரசின்மேல் வானவில் கொண்டவனாய் கைகளை வானத்துக்கு நேராக உயர்த்தி, காலம் கடந்து விட்டது என்கிறான். (வெளி 10:1-6). அது மட்டுமல்லாமல் இது சம்பவித்தபொழுது, அவன் தன் கரங்களை உயர்த்தி, ''இனி காலம் செல்லாது'' என்று ஆணையிட்டான். சபைக்கு அளிக்கப்பட்ட ஒரு சத்திய வாக்குமூலம், எவ்வளவு பரிபூரணமாய் உள்ளது. ''மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது” மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லு கிறேன். கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகா விட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும். தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்து போவான்: இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ, அவன் அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான். ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் 'என்னைப்பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான். ஒருவன் எனக்கு ஊழியஞ் செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது.... 67“அவர் தம் பாதையின் முடிவை அடைந்ததால் அவர் கலங்குகிறார் என்று நீங்கள் கூறலாம். அவ்விதமாகவே, ஆவிக்குரிய ஏதோ ஒன்று நிகழ்ந்து உங்களைக் கலக்கும்போது உங்களுக்கு எப்படி தோன்று கிறது? ஓ... என்னே ! ஊம்! இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன்? பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும் இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன். பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப் படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று. அங்கே நின்றுகொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள் இடி முழக்கமுண்டாயிற்று என்றார்கள்.... 68ஆட்டுக்குட்டியானவர் புஸ்தகத்தை வாங்கி முதலாம் முத் திரையை உடைத்தபோது, தேவன் தம் நித்திய சிங்காசனத்திலிருந்து பேசி, அம்முத்திரையில் அடங்கியுள்ள இரகசியங்களை வெளிப்படுத்து கிறார். ஆனால் அது யோவானுடைய முன்னிலையில் ஒரு அடையாளமா கவே (Symbol) இருந்தது. யோவான் அதைக் கண்டபோது, அது இன் னும் இரகசியமாகவே இருந்தது. ஏன்? ஏனெனில் அச்சமயம் அந்த இரக சியம் வெளிப்படவில்லை. ''கடைசி காலத்தில்'' என்று அவர் சொன்ன இந்தக் கடைசி காலம் வரும்வரை அது வெளிப்பட முடியாது. அது ஒரு அடையாளமாக அளிக்கப்பட்டது. ''இடிமுழக்கம் உண்டானபொழுது... பலத்த இடிமுழக்கம் தேவனுடைய சத்தமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வேதம் அவ்வாறே கூறுகின்றது. நின்றுகொண்டிருந்த ஜனங்கள் “இடிமுழக்க முண்டானது'' என்று நினைத்தனர். ஆனால் அது தேவனாகும். அவருக்கு (இயேசுவுக்கு - தமிழாக்கியோன்) அது வெளிப்பட்டதனால், அவர் அதைப் புரிந்து கொண்டார். பாருங்கள் அது இடிமுழக்கமாகும். முதலாம் முத்திரை திறக்கப்பட்டதை கவனியுங்கள். முதலாம் முத்திரை அடையாள ரூபமாக திறக்கப்பட்டபோது இடிமுழக்கமுண்டாயிற்று. அப்படியானால் அதன் உண்மையான இரகசியம் வெளிப்படுவதற்கென அது திறக்கப்படும்போது எவ்வாறிருக்கும். ஆட்டுக் குட்டியானவர் முத்திரையை உடைத்த மாத்திரத்தில் இடி முழக்கமுண்டானது. அது எதை வெளிப்படுத்தினது? அதன் அர்த்தம் எல்லாமே அப்பொழுது வெளிப்படவில்லை. முதலாவது, அது தேவனிடத்திலிருந்தது; பின்பு அது அடையாளமாக அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் அதனுள் அடங்கிய இரகசியம் வெளிப்படுகிறது- மூன்று காரியங்கள். பாருங்கள்? அது சிங்காசனத்திலிருந்து கிடைக்கப் பெறுகிறது. 69முதலாவதாக, அதைக் காணவோ, கேட்கவோ முடிகிறதில்லை. அது முத்திரிக்கப்பட்டுள்ளது. அதைப் பெற்றுக்கொள்ள ஆட்டுக்குட்டி யானவரின் இரத்தம் கிரயமாக செலுத்தப்பட்டது. அவர் பேசினபோது, இடிமுழக்கம் உண்டாயிற்று. ஆகவே அவர் அவ்வாறே செய்தபோது, வெள்ளைக் குதிரையின் மேல் வீற்றிருக்கிறவன் புறப்பட்டுச் செல்கிறான். அப்பொழுதும் அது அடையாள மாகவே அமைந்துள்ளது. இப்பொழுது கவனியுங்கள். அதன் அர்த்தம் கடைசி காலத்தில் வெளிப்படும் என்பதாய் அவர் கூறியுள்ளார். அது ஒரு சபையின் அடையாளத்தில் வருகின்றது. சபையே, உனக்குப் புரிகிறதா? (சபையோர் ''ஆமென்“ என்கின்றனர்- ஆசி) அங்கு ஒரு முத் திரை உண்டென்றும், அது சபையின் அடையாளத்தில் வருகின்ற தென்றும் அவர்கள் அறிந்திருந்தனர். அதன் அர்த்தம் என்னவென்பதை அவர்களால் இதுவரை அறிந்துகொள்ள முடியவில்லை. வெள்ளைக் குதிரையின்மேல் வீற்றிருக்கிறவன் புறப்பட்டுச் செல்கிறான் என்று மாத்திரம் அவர்கள் அறிவார்கள். 70இக்கடைசி காலத்தில் முத்திரை உண்மையாக உடைக்கப் படும்போது அது வெளியாகும். அந்த முத்திரை யாருக்கு உடைக்கப் படுகின்றது? கிறிஸ்துவுக்கல்ல, சபைக்கு. இப்பொழுது, இதைக் கவனியுங்கள்... ஓ! என்னே, அது எனக்கு நடுக்கத்தையளிக்கிறது. நான்நான்-நான் கூறுவதன் அர்த்தத்தை சபை உண்மையாக புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன். நீங்கள் அதைப் புரிந்து கொள்வீர்கள் என்பதால், நான் உங்களை மணவாட்டி என்று அழைக்கப் போகிறேன். பாருங்கள். தேவனுடைய சத்தம் இடிமுழக்கம் போன்றதாகும். அச்சத்தம் எங்கிருந்து வந்தது? ஆட்டுக்குட்டியானவர் மத்தியஸ்த ஊழியத்தைச் செய்து முடித்து, புறப்பட்ட அதே சிங்காசனத்திலிருந்து. இப்பொழுது, அவர் தம் ஸ்தானத்தை வகித்து. உடைமைகளைப் பெற்றுகொள்ள அங்கு நின்றுகொண்டிருக்கிறார். ஆனால் இடிமுழக்கமோ சிங்காசனத்தினுள்ளிருந்து புறப்பட்டு வெளி வந்து முழங்கினது. ஆட்டுக்குட்டியானவர் இங்கு நின்று கொண்டிருக்கிறார். அந்த இடிமுழக்கமானது அவர் விட்டுவந்த ஸ்தலத்திலிருந்து புறப்பட்டு வருகிறது. அவர் தம் சொந்த சிங்காசனத்தில் அமருவதற்கென்று பிதாவின் சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறார். மகிமை! இப்பொழுது, இப்பொழுது நண்பர்களே, அதை இழந்து போகவேண்டாம். 71தேவன் கிறிஸ்துவை எழுப்பி, தம் சிங்காசனத்தில் அவரை அமரச்செய்து, நித்தியமான இராஜ்யத்தை பூமியில் அவருக்களிப்பதாக அவர் தாவீதுக்குச் செய்த வாக்குத்தத்தத்தை கிறிஸ்தவர்களாகிய நாமெல்லாரும் அறிவோம். அவர் தம் வாக்குத்தத்தத்தின்படியே செய்தார். இயேசுவும், அந்திக்கிறிஸ்துவையும் உலகத்திலுள்ளவைகளையும் ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ, நான் ஜெயங்கொண்டு என் பிதாவின் சிங்காசனத்தில் அவரோடேகூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன்' என்றார் (வெளி. 3:21). பாருங்கள்? என்றாவது ஒருநாள் அவர் பிதாவின் சிங்காசனத்தை விட்டு எழுந்து, தம் சொந்த சிங்காசனத்தில் வீற்றிருக்க வருவார். 72இப்பொழுது தம் பிரஜைகளை அழைத்துக்கொள்ள அவர் வருகிறார். எங்ஙனம் அவர்களைப் பெற்றுக்கொள்வார்? அவர் ஏற்கனவே மீட்பின் புத்தகத்தை தம் கையில் கொண்டிருக்கிறார். மகிமை! ஓ, எனக்கு பாடவேண்டுமென்று தோன்றுகிறது. “விரைவில் ஆட்டுக்குட்டியானவர் மணவாட்டியைக்கொண்டு செல்வார் அவள் எப்பொழுதும் தமது பக்கத்தில் இருக்க வானத்தின் சேனைகள் அனைத்தும் அங்கு கூடியிருப்பர் (அதைக் காண) ஓ, அது மகத்தான காட்சியாயிருக்கும். எல்லா பரிசுத்தவான்களும் கரையற்ற வெண்மையுடன் இருப்பர். நாம் இயேசுவுடன் நித்தியமாக விருந்துண்போம்“ ஓ! என்னே! “இப்பொழுது நாம் உன்னதங்களில் வீற்றிருப் பதை” குறித்துப் பேசுகிறோமே? அது எவ்விதம் இருக்கும்? எடுக்கப் படுதல் நிகழும் முன்பு, பூமியில் நாம் இருந்து கொண்டு சுவர்களில் சாய்ந்து கொண்டு, மழையில் நனைந்து இவ்வளவாக அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியுமானால், அவர் அங்கு உட்கார்ந்திருப்பதை நாம் கண்கூடாகக் காணும்போது, இதைக் காட்டிலும் எவ்வளவாக நாம் மகிழ்ச்சிகொள்வோம் என்பதை ஊகித்துப் பாருங்கள். ஓ! என்னே ! ஓ... அது ஓர் மகத்தான தருணமாயிருக்கும். 73குமாரன் பிதாவின் சிங்காசனத்தை விட்டுப் புறப்பட்டு தாவி தின் குமாரனாகிறார். அவர் அப்பொழுதே தாவீதின் குமாரனாக வருவாரென்று இஸ்ரவேல் ஜனங்கள் எதிர்பார்த்திருந்தனர். சீரோபோனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயும், குருடனான பர்த்திமேயுவும் அவரைத் 'தாவீதின் குமாரனே!' என்று அழைத்தது நினைவிருக்கிறதா? ஊம்! இயேசு அவரைக் குறித்த திட்டம் என்னவென்பதை அறிந்திருந்தார். அவர்களோ அதை அறிந்து கொள்ளவில்லை. அவரை இராஜாவாக்க அவர்கள் பலவந்தப்படுத்தினர். பிலாத்துவும்கூட அவரை 'இதோ உங்கள் ராஜா' என்று அறிமுகப்படுத்தினான். ஆனால் இயேசுவோ, 'என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால், என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே! என் ராஜ்யம் பரலோகத்தி லுள்ளது' என்றார் அவர். 'நீங்கள் ஜெபம் பண்ணும்போது, உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்தில் செய்யப்படு வது போல் பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று ஜெபியுங்கள்' என்று கற்பித்தார், ஆமென்! ஊம். இந்தக் காரியம் எத்தனை மகத்துவமுள்ள தாயிருக்கிறது! 74அவர் பிதாவின் சிங்காசனத்தை விட்டு தம் சொந்த சிங்காசனத்தில் வீற்றிருக்க வருகிறார். இப்பொழுது அவர் தம் மத்தியஸ்த ஊழியத்தை விட்டுவிட்டு, தம் சொந்த சிங்காசனத்தையும் அவர் மீட்ட பிரஜைகளையும் உரிமையாக்கிக்கொள்ள வருகிறார். அவர் அதைச் செய்யவே சிங்காசனத்தை விட்டு முன்னே வருகிறார். அப்பொழுது தான் சிங்கம் போன்ற முகத்தையுடைய ஜீவன் யோவானிடத்தில் வந்து பார்' என்றது. கவனியுங்கள். உங்களால் இதை வாசிக்க முடிகின்றதா? ... முத்திரைகளில் ஒன்று... அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி வந்து பார் என்று.... இடிமுழக்கம் போன்ற சத்தமாய்... அந்த நான்கு ஜீவன்கள் யாரென்று உங்களுக்குத் தெரியும். அந்தச் செய்தியை நான் முன்பு அளித்துள்ளேன். “ஒன்று சிங்கத்திற் கொப்பாகவும், வேறொன்று காளைக்கொப்பாகவும், வேறொன்று மனுஷ முகம் கொண்டதாயும், மற்றொன்று கழுகுக்கு ஒப்பாகவும் இருந்தன'' இப்பொழுது... முதலாம் ஜீவன் சொல்லிற்று... ஒவ்வொரு முறையும் வெவ்வேறு ஜீவன் வந்து வெவ்வேறு குதிரைகளின் மேல் சவாரி செய்பவர்களைக் காண அழைப்பதை நாம் காணலாம். ஆகமொத்தம் நான்கு ஜீவன்களும், வெவ்வேறு குதிரைகளின் மேல் சவாரி செய்யும் நால்வரும் உள்ளனர். கவனியுங்கள். அவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறை அறிவிக்கின்றன. அவைகள் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பவைகளாகும். நாம் மறுபடியுமாய் அவைகளைக் கண்டு, அவைகள் ஒவ்வொன்றும் அறிவித்தபோது அவைகளில் மத்தேயு எதுவென்றும், மாற்கு எதுவென்றும், யோவான் எதுவென்றும் நிரூபிப்போம்... ஜீவன்களில் ஒன்று “வந்து... பார்...' என்றது. 75யோவான் இடிமுழக்கம் போன்ற சத்தத்தைக் கேட்டான். அப் பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று அவனிடம், “வந்து பார்'' என்றது. நாம் வேறுவிதமாக (விளக்கி -தமிழாக்கியோன்) கூறுவோ மானால், இப்பொழுது இங்கே ஆட்டுக்குட்டியானவர் நிற்கிறார். என்ன சம்பவிக்கின்றது என்பதை யோவான் அங்கே நின்று கவனித்துக் கொண்டிருக்கிறான். ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்ட வண்ணமாய் இரத்தம் தோய்ந்தவராய் சிங்காசனத்திலிருந்து முன்னே வருகிறார். அவர் ஒருவர்தான் பாத்திரவானாகக் காணப்பட்டார். அவர் அங்கு சென்று புஸ்தகத்தை எடுத்தபொழுது, மீட்பின் கிரயம் செலுத்தப்பட்டு விட்டதை யாவரும், அங்கு யாவும் சத்தமிட்டு களிகூர ஆரம்பித்தனர். நீங்கள் பாருங்கள். 76இப்பொழுது அவர் தமக்குச் சொந்தமானவைகளைப் பெற்றுக்கொள்ள வந்துவிட்டார். ஆகையால், அவர் புஸ்தகத்தை எடுத்து, யோவான் முன்பாக நின்று, புஸ்தகத்தை இழுத்து, முத்திரையை உடைக்கிறார். அவர் முத்திரையை உடைக்கிறார். அவர் முத்திரையை உடைத்தபோது, இடிமுழக்கம் உண்டாயிற்று. இடிமுழக்கம் (கர்ஜனை) உண்டானபோது யோவான் ஆகாயத்தில் (air) குதித்திருப்பான் என்பதில் சந்தேகம் இல்லை. அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று யோவானை நோக்கி, 'முத்திரையின் கீழ் என்ன அடங்கியுள்ளது என்பதைக் காண வா' என்று அழைக்கிறது. ஓ, என்னே, 'யோவானே, நீ காண்பவைகளை ஒரு புஸ்தகத்தில் எழுது. அது என்னவென்பதைக் காண யோவான் அங்கு செல்கிறான். இடிமுழக்கம் கூறினதென்ன என்பதை அறிய யோவான் அங்கு செல்லும்போதுதான் அந்த ஜீவன், முதலாம் முத்திரையின் கீழ் அடங்கியுள்ள இரகசியத்தை 'வந்து பார்' என்று அவனை அழைக்கிறது. (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை நான்கு முறை தட்டுகிறார்ஆசி) அந்த இடிமுழக்கம், அந்த சிருஷ்டிகரின் சத்தம் அதைச் சொன்னது. இப்பொழுது, அது என்னவென்பதை அவன் அறிந்தாக வேண்டும். பாருங்கள்? ஓ! என்ன ஆச்சரியம்! யோவான் இதை எழுதினான் என்பதை இப்பொழுது சிந்தியுங்கள். 77ஆனால் அவன் மற்ற ஏழு இடிகளைப் பற்றி எழுத ஆரம்பித்த பொழுது, அவர், ''அதை எழுதாதே'' என்றார். அவன் கண்டவை யாவும் எழுதவேண்டுமென்ற கட்டளை அவனுக்கு உண்டாயிருந்தது. ஆனால் வெளிப்படுத்தின விசேஷம் 10-ம் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை “எழுதவேண்டாம்'' என்று அவர் கூறினார். அவை யாவும் பரமரகசியம். அவையென்னவென்பதை நாம் இதுவரை அறியோம். ஆனால் சரியாக இப்பொழுதே அது வெளிப்படும் என்பது என்னுடைய கருத்து. அது வெளிப்படும்போது அந்தச் சபையானது அசைந்து செல்லும்படியாக, அந்த எடுக்கப்படும் கிருபைக்கான விசுவாசத்தை அது அளிக்கும். பாருங்கள்? நாம் இதுவரை அறிந்த எல்லாவற்றையும் ஆராய்ந்திருக்கிறோம். ஒவ்வொரு சபையின் காலங்களிலும் நிகழ்ந்தவைகளை நாம் கவனித்துக் கொண்டு வந்துள்ளோம். தேவனுடைய ரகசியங்களை நாம் கண்டிருக்கிறோம். கடைசி நாட்களில் மணவாட்டியின் மகத்தான ஒன்று கூடுவதின் தோன்றுதலை குறித்து நாம் அறிந்திருக்கிறோம். ஆயினும் நம்மை தெளிவுபடுத்திக்கொள்ள அவசியமான ஏதோ ஒன்று இன்னமும் வெளிப்படாமல் உள்ளது. அந்த இரகசியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக யோவான் காலத்தில் வெளிப்பட்டபோது தேவன் அவனிடம், “யோவானே, அதை மறைத்துவை. சற்று பொறுத்துக்கொள். நான் அந்த நாளிலே அதை வெளிப் படுத்துவேன். அதை எழுதவேண்டாம். ஏனெனில் அதைபடிப்பவர்கள் தடுமாறி விழுவார்கள். அவர்கள் அதைப் புரிந்து கொள்ளும் தன்மை யைப் பெற்றிருக்கும் நாளில் நான் அவர்களுக்கு அதை வெளிப்படுத்துவேன்'' என்று சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். அவ்விடி முழக்கங்கள் காரணமின்றி உரைக்கவில்லை. அந்த துளிமையைப் போன்று, எல்லாவற்றிற்கும் ஒரு நோக்கமுண்டு என்பதை ஞாபகங்கொள்ளுங்கள். ஆனால், கவனியுங்கள். சிருஷ்டி கர்த்தர் மொழிந்தார். யோவான் இந்த சத்தத்தைக் கேட்டு காணச்சென்றான். 78ஆட்டுக்குட்டியானவர் யோவானுக்கு அடையாளங்களில் காண்பித்துக் கொண்டு... சபையானது அறிந்து கொள்ளும்படியாக, சபைக்காக எழுதவேண்டிய வசனம் என்ன என்பதை அவர் யோவானுக்குக் காண்பிக்கிறார். அவர் யோவானிடம், ''இது என்னவென்று யாருக்கும் அறிவிக்க வேண்டாம். நீ கீழே இறங்கிச் சென்று, ஏழாம் முத்திரையின் கீழ் அடங்கியுள்ள இரகசியம் இதுதான் என்று சொல்லவேண்டாம். நீ கீழேச்சென்று, அதைச் சொல்லாதே.'' நான் உனக்கு (யோவானுக்கு) அப்படிக் கூறினால் காலங்கள்தோறும் வைத்திருக்கும் என் திட்டம் வெளியரங்கமாகிவிடும். அது ஓர் இரகசியமாக இருக்கவேண்டும்'' என்றார். பாருங்கள்? அவர் மேலும்... ''என் வருகையின் நேரத்தை யாரும் அறிய முடியாது. நான் வருகிறேன் என்று மாத்திரம் அவர்கள் அறிந்தால் போதுமானது'' என்றார். பாருங்கள்? பாருங்கள்? அவ்வளவு தான். அவர் எப்பொழுது வருகிறார் என்று நான் அறிய வேண்டிய அவசியம் இல்லை. அவர் எந்நேரம்வரினும் நான் அதற்கு ஆயத்தமாயிருக்கவேண்டும். நீங்கள் பாருங்கள். யோவான் அதைச் காண முன் சென்று ''நான் அதை இப்பொழுது பார்க்கப் போகிறேன்“ என்று நினைத்தான். 79அவன் சென்ற போது என்ன செய்தான்? அவன் இப்பொழுது, என்ன செய்ய வேண்டும்? அவன் காண்பதை அவன் சபையின் காலங்களுக்கென்று எழுதவேண்டும். முதலில் 'நீ கண்ட ஏழு குத்து விளக்குகளின் விவரணத்தை எழுதி சபைகளுக்குத் தெரியப்படுத்து' என்று அவனுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது. அது சரி. ஒரு இடிமுழக்கம் உண்டானது. அது தேவனுடைய சத்தம் என் பதை யோவான் அறிந்திருந்தான். சிங்கத்திற்கொத்த ஜீவன், ''நீ வந்து அது என்னவென்று பார்“ என்று சொல்ல, யோவானும் அதைக் கண்டு எழுதுவதற்கென்று தன் எழுதுகோலுடன் புறப்பட்டுச் செல்கிறான். 80இப்பொழுது, அவன் கண்ட காட்சியின் அர்த்தத்தை அவனால் ஒருபோதும் சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. அவன் கண்டது, தேவன் சபைகளுக்கு “ஒரு குறிப்பிட்ட காலம்'' வரைக்கும் அனுப்பிய காட்சிகளாம். அதன் அர்த்தத்தை வெளிப்படுத்த வேண்டிய தருணம் வரும்போது, அவர் அதை வெளிப்படுத்துவார். ஆனால் அப்பொழுது அதை அவர் வெளிப்படுத்தவில்லை. ஏன்? ஏனெனில் அவர் அதை கடைசி காலம் வரைக்கும் ஒரு இரகசியமாக வைத்திருந்தார். ஆனால் கடைசி சபை தூதனின் செய்தி-முழக்கமானது, இந்த இரகசியங்களை ஒன்று சேர்ப்பதாகும். பாருங்கள்? அவர் யோவானுக்கு அதை தெளிவுபடுத்தவில்லை. யோவான் “ஒரு வெள்ளைக் குதிரை செல்வதையும், அதன் மேல் ஒருவன் வீற்றிருக்கிறதையும் காண்கிறான்.'' அவன் என்ன செய்தானோ அதையே அவன் எழுதி வைத்தான். பாருங்கள். நான்கு ஜீவன்களில் ஒன்று அவனிடம் “வந்து பார்'' என்றது. 81ஆகவே, அவன் சென்று இந்தக் காட்சியைக் கண்டு அதை சபைக்கு எழுதி வைக்கிறான். அவன் “ஒரு வெள்ளைக் குதிரையைக் காண்கிறான். அதன் மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான். அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது. அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான். ஆகவே, அப்பொழுது அவர் கூறினார். இதை மாத்திரமே யோவான் கண்டு, அதை எழுதிவைத்தான். இப்பொழுது பாருங்கள், அது ஒரு அடையாளமாக இருக்கிறது. சபைக்கு அது அவ்விதமாகவே அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடைசி காலத்தில் அவர் அதை வெளிப்படுத்துவார் என்றும், அது என்ன என்று காண்பிப்பார் என்றும் வாக்களிக்கப்பட்டுள்ளது. ஞாபகங்கொள்ளுங்கள். அவன் ஆரம்பிக்கவில்லை... இல்லை. இந்த கடைசி சபைக் காலத்தின் ஏழாவது செய்தி வரைக்கும், சபையின் காலங்களில் அது முற்றிலுமாக தெரிவிக்கப்படவில்லை. கவனியுங்கள். அவன் ஆரம்பிக்கிறான். நாம் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள தேவன் உதவி செய்வாராக. 82இந்த ஏழாம் சபையின் செய்தியாளனை நீங்கள் கூர்ந்து கவனித்தால், அவன் மற்றவர்கள் செய்தது போல, அவன் ஒரு ஸ்தாபனம் உண்டாக்கவில்லையென்பதை அறியலாம். அவன் ஸ்தாபனங்களை எதிர்ப்பவன் என்பதை நீங்கள் காணலாம். எலியா ஸ்தாபனங்களின் விரோதியா? ஆம். எலியாவின் ஆவியைக் கொண்ட யோவான் ஸ்நானன் ஸ்தாபனங்களை எதிர்த்தவனா? எலியா எவ்விதமான ஆவியை தன்மேல் கொண்டிருந்தான்? அவனைக் குறித்து யாருமே அதிகம் அறியவில்லை, அவன் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் அவன் ஒரு தீர்க்கதரிசி, அவனை எல்லோரும் வெறுத்தனர். என்னே! அவன் எப்பொழுது தோன்றினான்? இஸ்ரவேல் ஜனங்களின் செல்வாக்கு ஓங்கி, அவர்கள் தேவனை விட்டு அகன்று உலகப்பிரகாரமாக இருந்த சமயத்தில் அவன் தோன்றினான். அவன் அதை வெளிக்கொணர்ந்தான். அவன் ஸ்திரீகளை வெறுத்தான், ஊஊம் ஆம் ஐயா, நிச்சயமாக. அவன் வனாந்திரத்தை விரும்பினான். அது தான் அவன் இயல்பு. 83எலியா பெற்றிருந்த அதே ஆவியைக் கொண்டவனாக யோவான் தோன்றினதை அந்த மக்கள் அறிந்திருக்க வேண்டும். நான் நேற்று இரவு கூறினதுபோல, ஒரு முக்கியஸ்தனைப்போல் அவன் ஆடை. உடுத்தியிருக்கவில்லை. அவன் அவர்களைப்போல (மேட்டுக்குடியினர் போல) குழந்தைகளை முத்தமிடுவதும், விவாக, அடக்க ஆராதனைகளையும், மற்றவையும் செய்யவில்லை. அவன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டு வந்த ஒரு மனிதனாயிருந்தான். அவன் என்ன செய்தான்? அவன் செய்த வேறொன்று, ஸ்தாபனங்களை வெறுத்தலாகும். அவன், 'நீங்கள் இதைச் சார்ந்தவர், அதைச் சார்ந்தவர் என்று கூறிக்கொள்ள வேண்டாம். தேவன் இந்த கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்' என்றான். அவன் சத்தியத்தை விட்டுக்கொடுக்காத ஒருவன். இயேசு அவனைக் குறித்து, 'காற்றினால் அசையும் நாணலைப் பார்க்கவா வனாந்திரத்திற்குச் சென்றீர்கள்? யோவான் அப்படிப்பட்டவன் அல்ல.' என்றார். இல்லை, ஐயா. 84யோவானும் என்ன செய்தான்? எலியா யேசபேலிடம் தவறுகளை எடுத்துரைத்தது போன்று, (யோவான் ஸ்நானன்) ஏரோதியாளின் தவறை உணர்த்திக் காண்பித்தான். அவன் ஏரோதின் முகத்தை நோக்கி, ''நீர் அவளை வைத்துக் கொள்வது நியாயமல்ல'' என்று தைரியமாய்க் கண்டித்தான். அதற்காக அவன் சிரச்சேதம் செய்யப்பட்டான். பாருங்கள்? அவள் எலிசாவைப் பிடிக்க முயற்சித்தாள். யேசபேலுக்குள்ளிருந்த அதே ஆவிதான் ஏரோதியாளுக்குள்ளும் இருந்தது. அதே ஆவிதான் இன்றைய யேசபேல் சபைகளிலும் காணப் படுகின்றது. இப்பொழுது அதைக் கவனியுங்கள். இதில் இங்கே நாம் கற்க வேண்டிய ஒரு பெரிய பாடமுண்டு. இப்பொழுது அக்காலத்து ஜனங்கள் அந்த ஆவியை அறிந்து கொண்டிருக்கவேண்டும். யோவான் அங்கு நின்று ஜனங்களைக் கண்டித்தபோது, அது எலிசாவின் ஆவி என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருக்க வேண்டும். அவன் அந்த ஆவியாய் இருந்தான். இப்பொழுது, நாம் சபை காலங்கள் முழுவதும் வைத்துள்ளோம். அந்த எலியாவின் ஆவி முடிவு காலத்திற்கு சற்று முன்பு திரும்பவும் வருமென்று வேதம் வாக்களித்துள்ளது என்பதை நாம் இப்பொழுது காணலாம். அது உண்மையல்லவா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்-ஆசி) 85இப்பொழுது கவனியுங்கள். அந்த ஆவியின் இயல்பை நீங்கள் அறிந்துகொள்ளலாம். இப்பொழுது, எலியாவின் ஆவியைக் கொண்டவன், லூத்தர், வெஸ்லி மற்றவர் செய்ததைப் போன்று வேறொரு சபை காலத்தை உண்டாக்க மாட்டான். அவன் வேறொரு சபையை உண்டாக்க மாட்டான். ஏனெனில் வேறொரு சபை காலம் வரப்போவதில்லை. பாருங்கள்? வேறொரு சபை என்பது இனிமேல் இராது. ஆகையால் ஸ்தாபனத்தை அவன் எதிர்க்க வேண்டும். ஏனெனில், அவனுடைய ஆவி, அங்கே முன்பு அவர்களிடமிருந்த அதே ஆவியாயிருக்கும். அதே ஆவி, நான் கடந்த இரவு உங்களிடம் கூறினவாறு, அந்த ஆவியை மூன்று வித்தியாசமான சமயங்களில் உபயோகிக்க தேவன் பிரியம் கொண்டார்.' மூன்று என்பது தேவனுடைய எண்ணிக்கையாகும். இரண்டல்ல, மூன்று. அவர் ஏற்கனவே அதை இருமுறை உபயோகித்துவிட்டார். இப்பொழுது அதை மறுபடியும் உபயோகிக்கப் போகிறார். அவ்விதம் செய்யப்போவதாக அவர் வாக்களித்துள்ளார். இப்பொழுது கவனியுங்கள், அவன்... 86அவர் செய்தபொழுது, இப்பொழுது கவனியுங்கள். அவன் வேறொரு ஸ்தாபனத்தை உண்டாக்கப் போவதில்லை. ஏனெனில் லவோதிக்கேயா சபையின் காலம்தான் கடைசி சபையின் காலம். ஏழாம் சபைக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஏழாம் செய்தியாளனை பரிசுத்த ஆவி யின் உதவியைக் கொண்டு சகல இரகசியங்களையும் வெளிப்படுத்து வான். அது செய்யப் போவது... சென்ற இரவு உங்களில் எத்தனை பேர் கூட்டத்திற்கு வந்தீர்கள்? கைகளை உயர்த்துங்கள். அது வேதத்தில் எங்கு காணப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். (வெளிப்படுத் தின விசேஷம் 10-ம் அதிகாரம்) ஆகையால் அதைப் படிக்கவேண்டிய அவசியமில்லை . பாருங்கள். அது சரி, அது சரி. சீர்திருத்தகாரர் வந்து தங்களுக்கு முன்பிருந்த நிலைகுலைந்த சபையைச் சீர்படுத்தின பிறகு, அவர்கள் மறுபடியும் உலக வழிகளில் சென்று ஒரு சபையின் காலத்தை உண்டாக்கிக்கொண்டனர் என்பதை நாம் முன்னமே பார்த்திருக்கிறோம். அவர்கள் எப்பொழுதுமே அதைச் செய்தனர் எப்பொழுதும். பாருங்கள்? 87உதாரணமாக ரோமன் கத்தோலிக்க சபையினுடைய கத் தோலிக்க சபைக் காலம் இங்கிருந்தது. அப்பொழுது சீர்திருத்தக் காரராகிய லூத்தர் தோன்றினார். அவர் சீர்திருத்தக்காரர் என்று அழைக் கப்பட்டார். அவர் என்ன செய்தார்? அதை அப்பொழுதே ஆணித்தரமாக எதிர்க்க ஆரம்பித்தார். அவர் சபையின் முறைமைகளை ஆட்சேபித்தார். அதன்பின் அவர் செய்த முதற்காரியம் என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா? அவர் எவைகளை ஆட்சேபித்தாரோ, அவைகளின் மேலேயே வேறொரு சபையைக் கட்டினார். அதன் விளைவாக வேறொரு சபையின் காலம் தோன்றியது. சபை மறுபடியும் குழப்பமுற்ற நிலையில் இருந்தபோது, மற்றொரு சீர்திருத்தக்காரராகிய ஜான் வெஸ்லி தோன்றி அவ்வாறே வேறொரு சபையின் காலத்தை உண்டாக்கினார். பாருங்கள்? நான் கூறுவதன் அர்த்தம் உங்களுக்கு விளங்குகின்றதா? சபைக்காலம் உண்டாகிறது. அவர்களெல்லாரும் சீர்திருத்தக்காரர். கவனியுங்கள், ஆனால் கடைசி சபையின் காலத்து கடைசிகால செய்தி ஒரு சீர்திருத்தம் அல்ல. அவர் ஒரு தீர்க்கதரிசி. சீர்திருத்தக்காரர் அல்ல. எந்த ஒரு தீர்க்கதரிசியாகிலும் ஒரு சபையின் காலத்தை உண்டாக்கியதாக நீங்கள் காண்பியுங்கள்! அவன் ஒரு சீர்திருத்தக் காரன் அல்ல; அவர் ஒரு தீர்க்கதரிசி. 88மற்றவரெல்லாம் சீர்திருத்தக்காரர். அவர்கள் தீர்க்கதரிசிகளல்ல. தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியினிடத்தில் மாத்திரமே வருகிறது. அவர்கள் தீர்க்கதரிசிகளாயிருந்தால், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்கள் தொடர்ச்சியாக ஞானஸ்நானம் கொடுத்திருக்க மாட்டார்கள். ஆயினும் அவர்கள் மகத்தான தேவனுடைய ஊழியக்காரர். அவர்கள் வாழ்ந்த காலத்தின் தேவைகளை அவர்கள் அறிந்திருந்தனர். தேவன் அவர்களை அபிஷேகித்திருந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று தவறான முறைகளுக்கு விரோதமாய்ப் பிரசங்கித்து அவைகளைச் சின்னாபின்னப்படுத்தினர். ஆனால் தேவனுடைய வார்த்தையின் முழுமை, முழுவதுமாக அவர்களிடத்தில் வரவில்லை. ஏனெனில் அவர்கள் தீர்க்கதரிசிகளல்ல; அவர்கள் சீர்திருத்தக்காரர். தீர்க்கதரிசிகளால் மட்டுமே இரகசியங்கள் அறியப்படுவதால், இக்கடைசி நாட்களில், தேவனுடைய இரகசியங்களை ஒன்று சேர்த்துக் கொண்டுவர தீர்க்கதரிசியே இருக்கவேண்டும். ஆகவே, இவன்தான் அந்த நபராயிருக்க வேண்டும். நான் இப்பொழுது என்ன கருதுகிறேன் என்பதை நீங்கள் காண்கிறீர்களா? அவன் சீர்திருத்தக்காரனாய் இருக்க முடியாது. தேவனுடைய வார்த்தையை கிரகித்துக்கொள்ள அவன் வரம் பெற்ற ஒரு தீர்க்கதரிசியாய் இருக்கவேண்டும். 89இப்பொழுது சீர்திருத்தக்காரர், அவர்கள் காலத்தில் உண்டா யிருந்த தவறுகளை அறிந்திருந்தனர். நற்கருணையில் கொடுக்கப்படும் அப்பம் கிறிஸ்துவின் சரீரமல்ல என்பதை லூத்தர் நன்கு அறிந்திருந்தார். ஆகவே, அவர் ''விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்'' என்று பிரசங்கித்தார். அதுதான் அவருடைய செய்தி. அவ்வாறே, ஜான் வெஸ்லியும் தோன்றி பரிசுத்தமாகுதலைப் பிரசங்கித்தார். அவருடைய செய்தி அதுவாக இருந்தது. பாருங்கள்? பெந்தெகொஸ்தேகாரர் பரிசுத்த ஆவி யைக் குறித்த செய்தியைக் கொணர்ந்தனர். ஆனால் கடைசி நாட்களில், இந்தக் கடைசி காலத்தில், இந்த செய்தியாளன் ஒரு சீர்திருத்தத்தை உண்டாக்குவதில்லை. சீர்திருத்தக்காரர் விட்டு விட்ட எல்லா தேவரகசியங்களையும் அவன் ஒன்று சேர்த்து, ஜனங்களுக்கு அதை வெளிப்படுத்துவான். நான் அதை மறுபடியும் படிக்கட்டும். அது எனக்கு மிகவும் நல்லதாய் தொனிக்கிறது. நான் அதைப் படிக்க விரும்புகிறேன். .... பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம்.... அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின் மேல்... வானவில்... இருந்தது. அவனுடைய முகம்... சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது. 90இப்பொழுது அவர் கிறிஸ்து என்பதை நாம் ஏற்கனவே கண் டோம். கிறிஸ்துதான் எப்பொழுதுமே சபைக்குரிய செய்தியாளனாக இருக்கின்றார் என்பதை நாம் அறிந்துள்ளோம். சரி. அவர் அக்கினி ஸ்தம்பம் என்றும் உடன்படிக்கையின் தூதன் என்றும் அழைக்கப் படுகிறார். திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது. இப்பொழுது, இங்கே முத்திரைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன (திறக்கப்பட்டிருக்கிறது). நாம் இப்பொழுது அவைகளை உடைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது, அந்த முத்திரை (Thing) திறக்கப் பட்டிருக்கின்றது. .... அவன் தன் வலது பாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடது பாதத்தைப் பூமியின் மேலும் வைத்து, சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல ... மகா சத்தமாய் ஆர்ப் பரித்தான். அவன்... ஆர்ப்பரித்தபோது, ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின. (என்னே ! அந்த முழுமை!) (Complete). அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் யோவான், எழுத வேண்டுமென்றிருந்தேன் (எதை எழுதுவது? அவைகள் சொன்னவைகளை) அப்பொழுது ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரை போடு என்று வானத்திலிருந்து (தேவன்) ஒரு சத்தம் உண்டாக நான் கேட்டேன். அவைகளை எழுதவேண்டாம். (பாருங்கள்?) சமுத்திரத்தின் மேலும்... பூமியின் மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி (வெளி. 10:5) வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவை களையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோ டிருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டு.... (வெளி.10:6 (ஆங்கிலத்தில்) தமிழில் வெளி.10.7) 91கவனியுங்கள்! நாம் படிக்கும் இந்நேரத்தில், இதை நீங்கள் மறக்கவேண்டாம். ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களில் (நாட்கள்) அந்தக் கடைசி தூதன், பூமியிலுள்ள தூதன் ஆவான். இந்த தூதன் வானத்திலிருந்து இறங்கி வருகிறார். அது (கடைசி தூதன்) அவரல்ல; அவர் வானத்திலிருந்து இறங்கி வருகிறார். ஆனால் அவர் இங்கே ஏழாம் தூதனின் சத்தத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார். அது... 'தூதன்' என்பவன் “செய்தியாளன்'' என்றும், சபைக் காலத்திற்குச் செய்தியைக் கொண்டு வருபவன் என்பதை அனைவரும் அறிவர். இனி காலம் செல்லாது; தேவன் தம்முடைய ஊழியக்கார ராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்கா ளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் யாவும் (ஏழு முத்திரைகள், எல்லாம், எல்லா இரகசியங்களும்) நிறைவேறும். (ஆங்கிலத்தில் வெளி:10.7) 92எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்துவதே இந்த தூதனின் ஊழியமாயிருக்கும். பாருங்கள்? அது எளிமையாய் இருப்பதால், ஜனங்கள் குப்புறவிழுவார்கள். ஆனால் அந்த ஊழியம் அடையாளங்களினால் முற்றிலும் உறுதிப்படுத்தப்படும். அது பரிபூரணமாக அறியப்படும். பாருங்கள்? காண விரும்புவர்யாவரும் அதைக்காணலாம். பாருங்கள். அது சரி. ஆனால் அவர்கள்... ஆனால் இயேசு, “கண்களிலிருந்தும் காணாதவர்களாகவும், காதுகளிலிருந்தும் கேளாதவர்களாயும் இவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது என்று ஏசாயா உங்களைக் குறித்து நன்றாய் சொன்னான்” என்பதாய் அவர் வந்தபோது கூறியுள்ளார். பாருங்கள்? இப்பொழுது, நாம் காண்கிறோம்... நான் அந்த கடிகாரத்தை நோக்கியபொழுது, பத்து மணி ஆயிற்று என்று நினைத்தேன். அது என்னை திடுக்கிடச் செய்தது. ஆனால்... இன்னும் ஒன்பது மணியே ஆகவில்லை. பாருங்கள்? அது சரி, ஓ, என்னே! இப்பொழுது நாம் இதைப் பெற்றுக்கொள்வோம். கவனியுங்கள். நான் இதை விரும்புகிறேன். 93மற்றவர் சீர்திருத்தக்காரர். அவர்கள் தேவனுடைய மகத்தான மனிதராயிருந்து காலத்தின் தேவைகளை அறிந்து சீர்திருத்தம் உண்டாக்கினர். ஆனால் கடைசி காலத்து தூதன் சீர்திருத்தம் உண்டாக்கு பவனல்ல, அவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான் என்பதாக வெளி. 10:6 உரைக்கிறது. அது அம்மனிதனுக்குள் இருக்கும் வார்த்தையாகும். தேவனுடைய வார்த்தையானது இருபுறமும்கருக்குள்ள எந்தப்பட்டயத்திலும் கருக்கானதாயும், உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருப்பதாய் எபிரெயர் 4:12 கூறுகிறது. பாருங்கள்? இந்த மனிதன் சீர்திருத்தக்காரன் அல்ல. அவன் வெளிப்படுத்துகிறவனாய் இருக்கிறான். அவன் எதை வெளிப்படுத்துகிறான்? தேவனுடைய இரகசியங்களை வெளிப்படுத்துகிறான். சபைகள் அதையும் (வார்த்தை) மற்றவற்றையும் தேக்க நிலைக்கு கொண்டு வந்த நேரத்தில், அவன் தேவனுடைய வார்த்தையுடன் வந்து, அந்த காரியத்தை வெளியாக்குவான். 94அது ஏனெனில், அவன், “பிள்ளைகளுடைய விசுவாசத்தைப் பிதாக்களின் விசுவாசத்திற்கு திரும்பக்கொண்டுவர'' (Restore) வேண்டியவனாய் இருக்கிறான். மூலவேத விசுவாசமானது ஏழாம் தூதனால் திரும்பக் கொண்டு வரப்பட வேண்டியதாயுள்ளது. ஓ! இது எனக்கு எவ்வளவு பிரியம்! சீர்திருத்தக்காரர் முழுவதும் புரிந்துகொள்ள முடியாத முத்திரைகளின் இரகசியங்கள் வெளியரங்கமாகவேண்டும். பாருங்கள்? மல்கியா 4-ம் அதிகாரத்தை சற்று நோக்குவோம். நல்லது. அதைக் குறித்து வைத்துக்கொள்ளவும். அதில் கூறப்பட்டவன் ஒரு தீர்க்கதரிசி. அவன் ஜனங்களை ”பிதாக்களின் மூல விசுவாசத்திற்குத் திரும்ப கொண்டு வருவான்.'' இப்பொழுது அந்த மனிதன் காட்சியில் தோன்றுவதற்காக நாம் காத்துக்கொண்டிருக்கிறோம். அவன் தாழ்மையுள்ளவனாய் இருப்பதன் காரணத்தால், லட்சக்கணக்கானபேர் அவனை அறிந்து கொள்ளமாட்டார்கள். நல்லது, ஒரு சிறு குழு மாத்திரமே அவன் யாரென்பதைப் புரிந்துகொள்வர். கிறிஸ்துவுக்கு முன்பாக ஒரு செய்தியாளன் வருவானென்றும் அவன் “வனாந்திரத்திலிருந்து புறப்படுகிற சத்தமாயிருப்பானென்றும்” யோவானின் வருகை முன்னறிவிக்கப்பட்டது என்பதை நீங்கள் ஞாபகங்கொள்ளுங்கள். மல்கியா அவனைக் கண்டான். கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக வரும் எலியாவைக் குறித்து மல்கியா 3-ம் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ளதைப் பாருங்கள். “ஓ, இல்லை , இல்லை , சகோதரன் பிரான்ஹாம். அது 4-ம் அதிகாரம்” என்று நீங்கள் கூறலாம். நான் உங்களுடைய மன்னிப்பை வேண்டுகிறேன். 95இயேசுவே அது 3-ம் அதிகாரத்தில் உள்ளதாகக் கூறுகிறார். இப்பொழுது பரிசுத்த... நீங்கள் இப்பொழுது பரிசுத்த மத்தேயு 11-ம் அதிகாரம் 6 வசனத்தை எடுங்கள். அவர்-அவர் இதை அங்கே கூறுகிறார். அது 11-ம் அதிகாரம் 6-ம் வசனம் என்று நான் நம்புகிறேன். 4-வது, 5வது அல்லது 6-வது...சரியாக அவ்விடத்திலே...அங்கே உள்ளது. அவர் யோவானைக் குறித்து பேசும் போது, “நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதிருந்தால்... 'இதோ நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்,'' என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்” என்றார். இப்பொழுது மல்கியா 3-ம் அதிகாரத்தைப் படித்துப் பாருங்கள், சிலர் அதை மல்கியா 4-ம் அதிகாரத்தில் கூறப்பட்டதுடன் பொருந்துகின்றனர். இல்லை ஐயா, அதுவல்ல அது. கவனியுங்கள், மல்கியா 4-ல் கூறப்பட்ட தூதன் சென்றவுடன், உலகம் முழுவதும் எரிந்து விடுகிறது. அப்பொழுது ஆயிர வருட அரசாட்சியில் நீதிமான்கள் துன்மார்க்கரின் சாம்பலின் மேல் நடப்பார்கள். ஆகவே, நீங்கள் பாருங்கள், இதை நீங்கள் யோவான் ஸ்நானனுடைய வருகையுடன் பொருந்தினால், அக்காலத்தில் நடவாத ஒன்றை வேதம் கூறியிருப்பதாக அர்த்தமாகிறது. இரண்டாயிரம் வருடம் கடந்தபோதும், இவ்வுலகம் இன்னும் எரிந்து சாம்பலாகவில்லை. நீதிமான்கள் அதில் வாழ்கின்றனர். ஆகையால் அது எதிர்காலத்தில், இனிமேல் நிகழவிருப்பதை உரைக்கிறது. ஓ... என்னே! (சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை ஒருமுறை கொட்டுகிறார்-ஆசி.]. நீங்கள் இங்கே வெளிப்படுத்தின விசேஷத்தில் கடைசிகாலச் செய்தியாளன் செய்ய வேண்டியது என்ன என்பதைக் காண்பீர்களேயானால், அப்பொழுது அவன் யார் என்பதை நீங்கள் காணமுடியும். அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். இந்த சீர்திருத்தக்காரர் காணமுடியாத முனைகளை அவன் கிரகித்து, அதை அங்கே பொருத்துகிறான். 96தேவனுடைய ஆவிக்குரிய வெளிப்பாடின்றி மத்தேயு 28:19-ம், அப்போஸ்தலர் 2:38-ம் ஒன்று என்று எங்ஙனம் அறியமுடியும்? அற் புதங்களின் காலம் முடிவடைந்து விட்டது என்று கூறுபவர் வெளிப் பாடில்லாதவர்கள். வெளிப்பாடு இருந்தால் மாத்திரமே எது தவறு, எது சரியென்று அறிந்துகொள்ள முடியும். பாருங்கள்? அவர்கள் வேத பள் ளியில் படித்ததனால் வெளிப்பாடின்றி உள்ளனர். அந்தப் பொருளுக் குள் வர நமக்கு நேரம் உள்ளது என்று நான் நம்புகிறேன். நான் துரிதப்பட விரும்புகிறேன். ஏனெனில் இந்த முத்திரைகள் திறக்கப்பட, நான் உங்களை ஒரு வாரத்திற்கு மேலாக வைத்திருக்க விரும்பவில்லை. நான் என்ன கருதுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனக்கு ஒரு நாள் மட்டுமே உண்டு. என்னால் முடிந்தால் நான் அந்த நாளில் பிணியாளிகளுக்காக ஜெபிக்கவே விரும்புகிறேன் 97மல்கியா 4-ம் அதிகாரத்தை சற்று நோக்குவோம். அவன் தீர்க்க தரிசியாயிருந்து, ''பிதாக்களின் மூல விசுவாசத்திற்குத் திரும்பக் கொண்டு வருவான்.'' கடைசி காலத்தில், உபத்திரவ காலம் தொடங்கும்போது, இப் பொழுது அந்த மூன்றரை வருடங்கள் எங்குள்ளது என்பதை, நாம் ஒரு நிமிடம், திரும்பிக் காண்போம்... மூன்றரை வருடகாலம்... அல்லது தானியேலின் எழுபது வாரங்கள் தானியேல் மொழிந்த எழுபது வாரங் களின் பிற்பகுதி மூன்றரை வருடங்கள். சபையின் காலங்களிலிருந்து எத்தனை பேருக்கு இது ஞாபகமிருக்கிறது? (சபையார் “ஆமென்'' என் கின்றனர்- ஆசி) பாருங்கள்? ''எழுபது வாரங்கள் நியமிக்கப்பட்டுள் ளன.'' எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது. பாருங்கள். ”மேசியா வந்து அப்பொழுது சங்கரிக்கப்படுவார். அவர் வாரத்தின் பாதியில் பலி யையும், காணிக்கையையும் ஒழியப் பண்ணுவார். ஆகவே, யூதர் களுக்காக மேசியாவின் போதகத்திற்காக, இன்னும் மூன்றரை வரு டங்கள் அங்கே உள்ளன. (தானியேலின் எழுபதாவது வாரத்தின் பிற் பகுதி - தமிழாக்கியோன்) 98தேவன் ஒரே சமயத்தில் யூதர்களிடமும், புற ஜாதிகளிடமும் ஈடு படுதில்லை. அவர் இஸ்ரவேலரை ஒரு நாடாக நடத்துகிறார். ஆனால் புற ஜாதியாரிடம் தனிப்பட்ட நபராக ஈடுபடுகிறார். அவர் புறஜாதியார் அனைவரையும் மணவாட்டியாக எடுத்துக்கொள்வதில்லை. புறஜாதியார் மத்தியிலிருந்து ஒரு கூட்ட ஜனத்தை அவர் மணவாட்டியாக எடுத்துக்கொள்கிறார். பாருங்கள்? இப்பொழுது இஸ்ரவேலரை ஒரு நாடாக வழி நடத்திக்கொண்டு வருகிறார், அவள் இப்பொழுது ஒரு நாடாக ஆகி விட்டாள். பால் பாயிட் (Paul Boyd) எனக்கு இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் “சகோ. பிரான்ஹாமே, என்ன நேரிட்டபோதிலும் யூதர்களுக்கு இன்னமும் புறஜாதியாரிடம் ஒரு வெறுப்பு உணர்ச்சி காணப்படுகின்றது'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அது அவ்விதம் தான் அமைந்திருக்கவேண்டும். நிச்சயமாக. 99மார்டின் லூத்தர் யூதர்கள் அந்திக்கிறிஸ்துவென்றும், அவர்கள் விரட்டியடிக்கப்பட்டு அவர்கள் வீடுகள் எரிக்கப்பட வேண்டுமென்றும் அறிக்கை விடுத்தது தெரியுமா? பாருங்கள்? லூத்தர் தானே அதை எழுத்து மூலம் அறிவித்தார். மார்டின் லூத்தர் கூறியதை ஹிட்லர் நிறை வேற்றினார். மார்டின் லூத்தர் ஏன் இவ்வாறு கூறினார்? ஏனெனில் அவர் ஒரு சீர்திருத்தக்காரர், தீர்க்கதரிசியல்ல. கர்த்தர் தீர்க்கதரிசியாகிய மோசேயுடன் தொடர்பு கொண்டு இஸ்ரவேலரை ஆசீர்வதித்தார். அவன், “உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பான். உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்ட வனாயிருப்பான்'' என்றான். ஒரு தீர்க்கதரிசி கூறியுள்ளதை எங்ஙனம் மற்றொரு தீர்க்கதரிசி மறுக்க முடியும்? அது முடியவே முடியாது. அவை ஒன்றுகொன்று இசைந்திருக்க வேண்டும். பாருங்கள்? 100அந்த காரணத்தினால்தான் அவர்கள். பாருங்கள், ஜெர்மானிய தேசம் ஒரு கிறிஸ்தவ நாடாகக் கருதப்படுகிறது. ஆனால் அவர்கள் யூதர்களுக்கு இழைத்த தீங்கிற்குப் பிரதிபலன் அவர்களுக்குக் கிடைக்கும். ஆனால் நீங்கள் அவர்களை குறைகூற முடியாது. சற்று ஞாபகங்கொள்ளுங்கள். இக்கூட்டத்தில் யூதர்கள் யாராவது இருப்பார்களாயின், நீங்கள் எதற்கும் கவலை கொள்ளவேண்டாம். உங்களுக்கு நல்ல சமயம் வரப்போகின்றது. தேவன் உங்களை ஒருபோதும் மறப்பதில்லை. அவர்கள் நமக்காக குருடாக்கப்பட்டனர். அவர் தீர்க்கதரிசியிடம் கூறினார். நீங்கள் அறிவீர்கள். தீர்க்கதரிசி ஒருவன் ஆண்டவரிடம், 'நீர் இஸ்ரவேலரை மறப்பீரோ?' என்று கதறினான். அவர் அவனிடம், 'உன் அளவுகோலை எடுத்து வானம் எவ்வளவு உயரமென்றும், சமுத்திரம் எவ்வளவு ஆழமாயிருக்கிறது என்றும் அளந்து சொல்' என்றார். அவன் “அவைகளை அளக்க இயலாது'' என்றான். 'அவ்வாறே நானும் இஸ்ரவேலை மறக்க முடியாது' என்று ஆண்டவர் பதிலளித்தார். ஆம், இஸ்ரவேலர் அவர் ஜனங்கள், அவர் பணியாட்கள். ஆனால் ஒரு சிலர் மாத்திரமே புறஜாதியாரிலிருந்து அவருடைய மணவாட்டியாகத் தெரிந்து கொள்ளப்பட்டுள்ளனர். அது முற்றிலும் சரி. அது மணவாட்டியாகும். 101இப்பொழுது, இந்த எழுபது வாரங்கள் பரிபூரணமாய் நியமிக்கப்பட்டுள்ளன. தானியேல் கூறியவண்ணம், மேசியா வந்து வாரத்தின் பாதியில் சங்கரிக்கப்படுவார். இயேசு மூன்றரை வருடகாலமாக தீர்க்க தரிசனம் உரைத்தார். இப்பொழுது தானியேலின் இந்த வாரத்தின் பாதி யில்தான் மேசியா சங்கரிக்கப்பட்டார். இந்த வாரத்தின் பிற்பகுதிதான் உபத்திரவ காலம். அப்பொழுது மணவாட்டி சபை...ஓ! இது மிகவும் மகத்தானது! இதை இழந்து போகவேண்டாம். மணவாட்டி மணவாளனுடன் செல்கின்றாள். ஆயிர வருஷ அரசாட்சிக்குப் பிறகு, அவர்கள் துன்மார்க்கரின் சாம்பலை மிதிப்பார்கள். 102நாம் இப்பொழுது இதை மனதில் கொண்டிருக்கும் இந்நேரத்தில், நான் ஒன்றை இங்கே உங்களுக்கு காண்பிக்கட்டும். அது என்ன கூறுகின்றது, வேதம் என்ன கூறுகின்றது என்பதை நான் உங்களுக்கு சற்று காண்பிக்கட்டும். இது தேவனுடைய வார்த்தையென்பது மறுக்க முடியாத உண்மை . நாம் அதை மறுத்தால் அவிசுவாசியாகக் கருதப் படவேண்டும். பாருங்கள்? அதை நாம் விசுவாசித்தே ஆகவேண்டும். 'என்னால் அதைப் புரிந்து கொள்ளமுடியவில்லை' என்று நீங்கள் கூற லாம். எனக்கும் அது புரியவில்லை. அவர் அதை வெளிப்படுத்த நான் அவரை நோக்கிக் கொண்டிருக்கிறேன். பாருங்கள்! இதோ சூளையைப் போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் (அமெரிக்கர்களைப் போன்றவர் யாவரும்) ஆம்... அக்கிரமஞ் செய்கிற யாவரும் துரும்பா யிருப்பார்கள்: (இங்கே சகோ.பிரான்ஹாம் துரும்புகளாயிருப் பார்கள் (stabbles) என்று படிக்கிறார் - தமிழாக்கியோன்) வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்! நான் அவர்களை சுட்டெரிப்பேன் (I shall burn them) என்று சகோ. பிரான்ஹாம் வாசிக்கிறார் - தமிழாக்கியோன்) (அவர்கள் எரிந்து விடபோகின்றனர்) அது அவர்களுக்கு வேரையும் கொப்பை யும் வைக்காமற் போகும். (மல். 4:1). 103அப்படியானால் நித்தியமான நரகம் எங்கிருக்கிறது? பாருங்கள்? இந்தக் கடைசி நாட்களில் இவை யாவும் வெளிப்படுகின்றன. பாருங்கள்? நரகம் நித்தியமானதென்று வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. நரகத்தில் நித்தியமாக வாசம் செய்யவேண்டுமானால் அதற்கு நித்திய ஜீவன் அவசியமாயிருக்குமே! ஒரே வகை நித்திய ஜீவன்தான் உண்டு. அதைப்பெற்றுக்கொள்ள வேண்டுமென நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம். தொடக்கம் உண்டாயிருக்கும் எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு. நரகம் எனப்படுவது “பிசாசுக்காகவும் அவனுடைய தூதர் களுக்காகவும் சிருஷ்டிக்கப்பட்டது.'' ஆகையால் அது எரிந்து சாம்ப லாகிவிடும். அது உண்மை . பாருங்கள்? ஆனால் அது நிகழும்போது, அது வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும். ஆனாலும் என் நாமத்திற்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய், கொழுத்த கன்றுகளைப் போல வளருவீர்கள். துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும் நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின் கீழ் சாம்பலாயிருப் பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (மல். 4:2-3). உபத்திரவ காலத்திற்குப் பின்பு துன்மார்க்கர் எங்கிருப்பார்கள்? சாம்பலாய்ப் போவார்கள். ஓரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளை களையும் நியாயங்களையும் நினையுங்கள். இதோ கர்த்தருடைய (சகோதரன் பிரான்ஹாம் அந்த (that) என்று வாசிக்கிறார் - தமிழாக்கியோன்) பெரிதும் பயங்கரமு மான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்தில் எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன் (மல். 4,5). 104ஆமென்! பழைய ஏற்பாடு இதைக் கூறிவிட்டு முடிவு பெறுகிறது. புதிய ஏற்பாடு அது போன்றே முடிவு பெறுகிறது. அங்ஙனமாயின், இதை நீங்கள் எப்படித் தள்ளிவிடமுடியும்? அவ்விதம் முடியாது. பாருங்கள், 'அந்த நாள்' வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்தில் எலியா தீர்க்கதரியை அனுப்புகிறேன். நான் வந்து பூமியை சங்காரத்தால் அடிக்காதப்படிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக் களிடத்திற்கும் திருப்புவான் (மல். 4:6). (ஹும்). 105அது கர்த்தருடைய வார்த்தையாகும். அவர் அனுப்புவதாக வாக்களித்துள்ளார். அது வந்தாக வேண்டும். அது இப்பொழுது எவ்விதம் சம்பவிக்கிறது என்பதை நீங்கள் கவனியுங்கள். தேவன் அதை எவ்விதம் செய்யப்போகிறார் என்பதைக் காண மிகவும் அழகாயிருக்கிறது. முதலாவதாக மணவாட்டி மணவாளனுடன் செல்கிறாள். அதன் பின்னர் துன்மார்க்கர் அவியாத அக்கினியில் எரிந்து போவார்கள். உலகம் சுத்தி கரிக்கப்பட்ட பின்னர், அது மறுபடியும் உண்டாகிறது. உலகிலுள்ள அனைத்தும் அப்பொழுது சுத்திகரிக்கப்படும். மகத்தான அந்த கடைசி தருணத்தில் எரிமலைகள் குழம்பைக்கக்கும்; உலகமே பிளந்து போகும். பாவமென்னும் சாக்கடைக் குழியும், பூமியின் மேல் காணப்படும் யாவும் ஒன்றுமில்லாமல் உருகிப்போகும். அவை தேவனால் அனுப்பப்பட்ட தீயினால் எரிந்து போகும் போது, ஒரு துளி மையின் நிறம் வெண்மையாக்கும் திரவத்தில் விழும் போது எவ்வாறு மறைந்து மூல நிலைக்குத் திரும்புகிறதோ, அவ்வாறே அசுத்தமாயிருக்கும் எல்லா பொருட்களும் எரிந்துபோய் அதனதன் மூல நிலைக்குத் திரும்பும். அப்பொழுது சாத்தானும் பாவத்துடன் கூட எரிந்து போவான். இவ்வுலகம் புதுபிக்கப்பட்டு, ஏதேன் தோட்டத்தின் அழகைப் போன்று விளங்கும். சரி, ஓ! அந்த மகத்தான நேரம் நம் முன்னால் காத்திருக்கிறது. 106இப்பொழுது கூறப்போவதை நீங்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும். மணவாட்டி எடுக்கப்பட்ட பின்பு, சபையானது உபத்திரவகாலத்திற்குள் பிரவேசிக்கும் சமயத்தில், வெளி. 11-ல் கூறப்பட்ட இரண்டு சாட்சிகள் 1,44,000 பேரை அழைப்பார்கள். இப்பொழுது கவனியுங்கள். இவ்விரண்டு சாட்சிகளும் இரட்டுடுத்தி, ஆயிரத்து இருநூற்று அறுபது நாட்கள் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள். 107ரோமரால் உண்டாக்கப்பட்ட கால அட்டவணையில் (Calendar) 28,30,31 நாட்கள் மாறி மாறி வருகின்றன. ஆனால் உண்மையான கால அட்டவணையில் ஒவ்வொரு மாதத்திற்கும் முப்பது நாட்கள் மாத்திரமே உண்டு. சரி. ஆயிரத்து இருநூற்று அறுபது நாட்களை முப்பதால் வகுத்தால் சரியாக மூன்றரை வருடம் கிடைக்கின்றது. மேசியாவின் செய்தி இஸ்ரவேலுக்குப் பிரசங்கிக்கப்பட அளிக்கப்பட்ட சமயம் அது தான். முன்பு இருந்தது போல. அவர் வந்து தம்மை வெளிப்படுத்தும் போது நிகழும் காரியம். அடையாள... 108யோசேப்பு ஒரு ஆவிக்குரிய மனிதன் என்னும் காரணத்தால், தன் சகோதரரால் புறக்கணிக்கப்பட்டு வேறு தேசத்திற்குக் கொண்டு செல்லப்பட்டான். அவன் தரிசனம் கண்டு, சொப்பனத்தின் அர்த்தத்தை விவரிப்பதுண்டு. அவன் அவ்வாறு செய்தபடியால், ஏறக்குறைய முப்பது வெள்ளிக் காசுக்கு விற்கப்பட்டு வேறு தேசத்திற்குக் கொண்டு செல்லப்பட்டான். கிறிஸ்துவின் ஆவி அவனுக்குள் வாசம் செய்ததால், அவன் கிறிஸ்துவுக்கு சரியான முன்னடையாளமாயிருந்தான். அதன்பின் என்ன நிகழ்ந்தது என்பதைக் கவனியுங்கள். அவன் சிறையிலிடப்பட்டான். அங்கு ஒருவன் இரட்சிக்கப்பட்டான். மற்றவன் கைவிடப்பட்டான். அவ்வாறே இயேசுவும் சிலுவையாகிய சிறையில் இருந்தபோது, ஒரு கள்ளன் இரட்சிக்கப்பட்டான், மற்றவன் கைவிடப் பட்டான், சரியாக. அவர் மரித்து, கல்லறையில் வைக்கப்பட்டார். அவர் உயிரோடெழுந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்தார். யோசேப்பும் பார்வோனின் வலது பாரிசத்தில் வீற்றிருந்தான். எவரும் யோசேப்பை முதலில் காணாமல் பார்வோனைக் காணமுடியாது. அவ்வாறே, குமாரனின் மூலமேயன்றி எந்த மனிதனும் பிதாவினிடத்தில் வரமுடியாது. சரி. 109யோசேப்பு சிங்காசனத்தின் வலதுபுறத்தை விட்டு எழுந்த ஒவ்வொரு முறையும்... கவனியுங்கள், மகிமை! யோசேப்பு பார்வோனின் வலது பாரிசத்தில் வீற்றிருந்தான். அவன் சிங்காசனத்தைவிட்டு எழுந்த போது, “யோசேப்பு வருகிறார், எல்லோருடைய முழங்கால்களும் முடங்கட்டும்” என்று எக்காளம் முழங்கினது. ஆட்டுக்குட்டியானவரும் மத்தியஸ்த ஊழியத்தை முடித்து, சிங்காசனத்தை விட்டுப் புறப்பட்டு மீட்பின் புஸ்தகத்தை எடுத்துக் கொண்டு வரும்போது, முழங்கால் யாவும் அவருக்கு முன்பாக முடங்கும். அதோ அவர் அங்கே இருக்கிறார். கவனியுங்கள். 110தன்னுடைய சகோதரரால் புறக்கணிக்கப்பட்ட யோசேப்புக்குப் புறஜாதி மனைவி அளிக்கப்பட்டாள். போத்திபிரா அளித்தான்... அல்லது பார்வோன் அளித்தான். யோசேப்பு பாதி புறஜாதியும், பாதி யூதனு மாகிய இரண்டு புறஜாதிப் பிள்ளைகளைப் பெற்றான். அவர்கள் ஒரு பெரிய அடையாளத்தை அளிக்கின்றனர். யோசேப்பின் குமாரராகிய எப்பிராயீம், மனாசே இவர்கள் யாக்கோபினிடத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது, அவன் கைகளைக் குறுக்கிட்டு இளையவனுக்கு ஆசீர்வாதத்தை அளித்தான். இவ்விருவரும் பன்னிரண்டு கோத்திரத்தில் சேர்க்கப்பட்டனர். ஏனெனில் அப்பொழுது பத்து கோத்திரங்கள் மட்டுமே இருந்தன. யாக்கோபு தன்னிலே அவர்களை ஆசீர்வதித்தான். யோசேப்பு அங்கு நின்றுகொண்டு 'தகப்பனே, நீர் தவறு செய்துவிட்டீர். உம் வலது கர ஆசீர்வாதத்தை மூத்தவனுக்கு அளிப்பதற்குப் பதிலாக இளையவனுக்கு அளித்துவிட்டீர்' என்றான். அதற்கு யாக்கோபு, ''என் கைகள் குறுக்கிடப்பட்டதை (Crossed) நான் அறிவேன். தேவன் தாம் அவ்விதம் செய்தார்'' என்றான். ஏன்? இஸ்ரவேலர் மணவாட்டியாகும் உரிமையைப் பெற்றிருந்தபோது அதை அவர்கள் நிராகரித்து தங்கள் சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுபோட்ட னர். ஆசீர்வாதம் மூத்தவனான இஸ்ரவேலரை விட்டு, சிலுவையின் மூலம் (Cross - தமிழாக்கியோன்) இளையவனான புறஜாதிக்கு வந்தது. 111அவன் மணவாட்டியைப் பெற்றுக் கொண்ட பின்பு, நடந்த தென்ன என்று கவனியுங்கள், பாருங்கள்? யோசேப்பின் சகோதரர் தானியம் வாங்க அவனிடத்தில் வந்தபோது; ஓ... இது மிகவும் ஒரு அழகான காட்சியாய் உள்ளது. முத்திரைகளை விட்டு சிறிது விலகுகிறேன். நீங்கள் இதன் காட்சியை மிக நன்றாகப் பெற்றுக் கொள்வீர்கள் என்று நான் நம்புவதால் நான் அதைக் குறித்து உங்களிடம் கூறியே ஆகவேண்டும். பாருங்கள் கவனியுங்கள். இப்பொழுது, யோசேப்பின் சகோதரர் தானியம் வாங்க அவனிடம் வந்தபோது, யோசேப்பு அவர்களை உடனே கண்டு கொண்டான் என்று நீங்கள் அறிவீர்கள். யோசேப்பு செழிப்பின் மகனாய் இருந்தான். அவன் எங்கு சென்றாலும் அங்கு செழிப்பு உண்டானது. நம் யோசேப்பாகிய இயேசு பூமிக்கு மறுபடியும் வரும்வரை காத்திருங்கள். பாருங்கள்? “அப்பொழுது வனாந்திரம் ரோஜாக்களைப் போன்று செழிப்படையும். நீதியின் சூரியன் தம் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் கொண்டவராய் உதிப்பார்'' ஓ, என்னே! அரிஸோனாவில் (Arizona) காணப்படும் முட்செடிகளும் அழகான மரங்களாக மாறும். அது ஓர் அழகான காட்சியாயிருக்கும். 112கவனியுங்கள். யோசேப்பு அங்கு வந்து, அவர்களிடம் ஒரு தந்திரத்தைக் (Trick) கையாண்டு “உங்கள் தகப்பனார் இன்னும் உயிரோடிருக்கிறாரா?'' என்று வினவினான். பாருங்கள்? அவன் தகப்பனார் உயிரோடு இருக்கிறாரா என்று அறிய அவன் ஆவல் கொண்டான். அவர்கள் 'ஆம்'' என்றனர். அவர்கள் அவனுடைய சகோதரர் என்று யோசேப்பு அறிந்து கொண்டான். ஆனால் அவன் தன்னுடைய சகோதர ருக்குத் தன்னை வெளிப்படுத்த எப்பொழுது ஆயத்தமானான் என்று நீங்கள் கவனித்தீர்களா? யோசேப்பு சிறிய பென்யமீனைக் (Little Benjamin)கண்டான். யோசேப்பு புறஜாதி யாரிடத்தில் விற்கப்பட்டுச் சென்ற பிறகு பென்யமீன் பிறந்தான். இயேசு சென்ற பிறகு 1,44,000 பேர் ஒன்று கூடுவதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு. அவர் திரும்பி வந்தபொழுது... அவன் பென்யமீனைக் கண்டபோது அவன் இருதயம் வெடித்துவிடும் போலிருந்தது. நினைவில் கொள்ளுங்கள். அவர்கள். அவன்... யோசேப்புக்கு எபிரெய மொழி தெரியும் என்பதை அவர்கள் அறியாதிருந்தனர். அவன் ஒரு மொழிபெயர்ப்பாளனை வைத்துக்கொண்டு எகிப்தியனைப் போல் பாவனை செய்தான். பாருங்கள்? யோசேப்பு அவன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்த விரும்பினபோது, அவன் சிறிய பென்யமீனையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனைவியை அனுப்பிவிட்டான் என்பதை ஞாபகங் கொள்ளுங்கள். அவன் தன் சகோதரருக்கு தன்னை வெளிப்படுத்தினபோது அவள் மாளிகையில் இருந்தாள். இயேசுவும் தம் சொந்த ஜனங்களால் புறக்கணிக்கப்பட்டு, புற ஜாதி மணவாட்டியை, மனைவியை தெரிந்து கொண்டார். அவர் அவளை இங்கிருந்து கலியாண விருந்துக்காக மகிமையிலுள்ள தம் பிதாவின் மாளிகைக்குக் கூட்டிச்சென்று திரும்பவும் வந்து தம் சகோதரராகிய 1,44,000 பேருக்குத் தம்மை வெளிப்படுத்துவார். ....?... அந்த நேரம். 113அவர் அங்கே நிற்கிறார். எவ்வளவு அழகான பொருத்தம் பாருங்கள். இவ்விதமாக யோசேப்பு திரும்பி வந்து, தன் சகோதரரை நோக்க ஆரம்பித்தான். அவர்கள், “இப்பொழுது, ரூபன், நமக்கு இது வேண்டியதாயிருக்கிறது. பாருங்கள். ஏனெனில், நாம் என்ன செய்தோம் என்பதை அறிந்திருக்கிறோம். நாமும் அந்த இளைஞனை (யோசேப்பை) அவ்விதம் நடத்தினோம். நாம் நம் சகோதரனை விற்றுப் போட்டிருக்கக் கூடாது,'' என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். அவர்கள் சகோதரனாகிய யோசேப்பு அங்கு வல்லமையுள்ள அரசகுமாரனாக நின்று கொண்டிருந்தபோது, அவன் சகோதரர் அவனை அறிந்து கொள்ள வில்லை . 114அந்த காரணத்தினால் தான் இஸ்ரவேலரால் அவரை இன்றைக்கு அறிந்துகொள்ள முடியவில்லை. அவரை அறிந்துகொள்ள வேண்டிய சமயம் இன்னும் வரவில்லை. அப்பொழுது யோசேப்பிற்கு எபிரெய மொழி புரியாது என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் அவனோ அவர்கள் பேச்சை சரியாய் கவனித்துக் கொண்டிருந்தான். “நமக்கு இது வேண்டியதாயுள்ளது”, என்று அவர்கள் கூறினர். யோசேப்போ அவர்களை நோக்கினபோது, அவனால் அடக்கிக் கொள்ள முடியாதிருந்தது. இப்பொழுது அவனுடைய மனைவியும், பிள்ளைகளும் அந்த நேரத்தில் அரண்மனையில் இருந்தனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதுபோல பரிசுத்தவான்கள் அவருடைய பிரசன்னத்திலிருந்து சென்றுவிட்டிருப்பர். 115யோசேப்பு, “நான் தான் யோசேப்பு, உங்கள் சகோதரன்” என்று கூறினான். அவன் பென்யமீனின் கழுத்தில் விழுந்து கதறி, அழத்துவங்கினான். பாருங்கள். அவன் தன்னை அவர்களுக்குத் தெரியப்படுத்தினான். அப்பொழுது அவன் சகோதரர், “இப்பொழுது நாம் அவனை விற்றுப்போட்டதால், நமக்கு இது வருகிறது என்பதை அறிவோம். நாம் தான் அவனை விற்றுப்போட்டோம். நாம் அவனைக் கொல்ல முயன்றோம். ஆனால் அவனோ இப்பொழுது நம்மைக் கொல்லுவான் என்பதை நாம் அறிந்துள்ளோம்” என்றான். ஆனால் யோசேப்பு, “நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். உங்கள் ஜீவனைக் காப்பதற்கென தேவன் என்னை முன்கூட்டி அனுப்பினார்” என்றான். நாம் கண்டவிதமாக, வேதம் கூறுகின்றபடி அவர் தம்மை அவர்களுக்குத் தெரியப்படுத்தும்போது, இயேசு 1,44,000 பேரான இன்றுள்ள சிறிய பென்யமீனுக்கு அங்கு விடப்பட்ட மீதியான யூதர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும்போது, அவர்கள், “உம் கைகளில் இருக்கிற இந்த வடுக்களை எங்கிருந்து பெற்றுக் கொண்டீர்? ஏன் அவைகள் உங்கள் உங்கள் கைகளில் உள்ளது?” என்று கேட்பார்கள். 116அப்பொழுது அவரோ, “ஓ, இவை என் சிநேகிதரின் வீட்டில் உண்டானவை” என்பார். பாருங்கள்? அப்பொழுது அவர்கள் மேசியாவை தாங்கள் கொன்றதை உணருவார்கள். ஆனால் அவர் என்னக் கூறுவார்? யோசேப்பு கூறியது போன்று கூறுவார். “ஊழியஞ் செய்யவே இதைச் செய்தீர்கள், அல்ல... ஜீவனை இரட்சிக்கவே இதைச் செய்தீர்கள். உங்களுக்குள்ளே வேதனை அடையவேண்டாம்'' என்பார். ஏனெனில் யூதர்கள் குருடராக்கப்படாம லிருந்தால், புறஜாதிகள் காணியாட்சிக்குள் பிரவேசித்திருக்க இயலாது. ஆகவே, அவர்களது கிரியைகளின் மூலம் அவர் சபையின் ஜீவனைக் காத்தார். அதன் காரணத்தினாலேயே இன்று அவர்கள் அவரை அறிந்து கொள்ள முடியாது. அதற்கேற்ற தருணம் இன்னும் வரவில்லை. 117நாமும் ஏற்ற தருணம் வரும்போது வேதத்தில் அடங்கிய இரகசியங்களை அறிந்து கொள்வதற்கு இது ஓர் உவமானமாகும். ஓ... என்னே! வெளிப்படுத்தின விசேஷத்தின் ஏழு இடிமுழக்கங்கள் மறுரூபமடைவதற்கு ஏற்ற ஆயத்தமாகும் பெரிய விசுவாசத்தை மணவாட்டிக்கு அளிக்க தேவன் தாமே வழிகாட்டுவாராக! இப்பொழுது, நமக்கு இன்னும் பதினைந்து அல்லது இருபது நிமி டங்கள்கூட இராததால், நாம் துரிதமாகச் செல்வோம். இப்பொழுது, இந்த 'வெள்ளைக் குதிரை'யின் அர்த்தமென்ன? அதை நான் மறுபடியும் படிக்கட்டும். என் பொருளுக்கு அப்பாற்பட்ட காரியங்களை பிரசங்கித்ததற்கு மன்னிக்கவும். நான் மறுபடியும் அந்த இரண்டு வசனங்களை வாசிக்கட்டும். ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக் கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம் போன்ற சத்தமாய்ச் சொல்லக் கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ ஒரு வெள்ளைக் குதிரை... நாம் இப்பொழுது இரண்டாம் வசனத்தை வாசிக்கப் போகிறோம். இதோ, ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன்; அதின் மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது. (அதற்கு முன்பு அவனுக்குக் கிரீடம் இல்லாதிருந்தது) அவன் ஜெயிக்கிறவனா கவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான். (வெளி. 6:1-2) - அவ்வளவுதான், அது ஒரு முத்திரை. இந்த அடையாளச்சின்னம் என்னவென்பதைப் பார்ப்போம். இடிமுழக்கம் எதைக் குறிக்கிறது என்று நாம் ஆராய்ந்து அறிந் தோம். நாம் பரிபூரணமாய் அறிவோம், பாருங்கள். முத்திரை திறக்கப் பட்டபோது உண்டான அந்த இடிமுழக்கம் தேவனுடைய சத்தமாகும் (Voice of God). இப்பொழுது வெள்ளைக்குதிரையின் அர்த்தமென்ன? இப்பொழுது, இங்குதான் நமக்கு வெளிப்பாடு அவசியம். இதுதான் வார்த்தை என்பதை அறிந்தவனாய் நான் இப்பொழுது இங்கு நின்று கொண்டிருப்பது எவ்வளவு உறுதியோ, அவ்வாறே நான் கூறப்போவதும் சத்தியமென்பது உறுதி. 118அதைக் குறித்து எனக்குக் கிடைத்த எல்லாப் புத்தகங்களையும் நான் படித்திருக்கிறேன்... நான்... முப்பது வருடங்களுக்கு முன்னால், ஏழாம் நாளை ஆசரிக்கும் கூட்டத்தாருக்கு இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி மற்றவர்களைக் காட்டிலும் அதிக வெளிப்பாடு உண்டு என்று ஒருவர் என்னிடம் கூறினார். ஆகையால் அவர்களிடமிருந்த சில நல்ல புத்தகங்களைப் படிக்கத்தொடங்கினேன். ஸ்மித் (Smith) என்பவர் எழுதிய 'தானியேலின் வெளிப்பாடு' என்னும் புத்தகத்தைப் படித்தேன். அதில் வெள்ளைக் குதிரையைப் பற்றி ஒரு நல்ல விவரணம் கொடுக்கப்பட்டிருந்தது. வெள்ளைக் குதிரையானது ஜெயங்கொள்ளுகிறவனுக்கு அடையாளமாய் இருந்தது என்று அவர் அந்தப் புஸ்தகத்தில் கூறியிருந்தார். இந்த ஜெயங்கொள்ளுதலில்... ஏழாம் நாளை ஆசரிக்கும் கூட்டத்திலுள்ள சகோதரர்களில் அநேகர் அந்தப் புஸ்தகத்தைப் படித்துள்ளதால் அதை (ஜெயங் கொள்ளுகிறவனை-தமிழாக்கியோன்) அறிந்துள்ளனர். நான் இன்னும் இருவர் எழுதிய புஸ்தகங்களைப் படித்துள் ளேன். அவர்கள் இருவருமே இதுவே சரி என்று ஒத்துப்போயினர். (சகோ.பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை ஐந்து முறை தட்டுகிறார் - ஆசி) அவர்கள் அன்றிருந்த சிறந்த வெளிச்சத்தையுடைய சிறந்த போதகர்களாக (வேத பாடம்) கருதப்பட்டனர். எனக்கு ஒன்றும் அப்பொழுது தெரியாததால், அவர்கள் சொல்வதையே நானும் சொல்வதென்று தீர்மானித்தேன். 119அவர்கள் அதைக் குறித்து ஒரு அழகான ஆர்தெழுந்துரைத்த சொற்களால் நிறைந்த வியாக்கியானத்தை அளித்திருந்தனர். அவர்கள் இவ்வாறு கூறியிருந்தனர், “இப்பொழுது, இங்கே ஒரு வெள்ளைக் குதிரை இருக்கின்றது. ஆகவே, வெள்ளைக் குதிரை என்பது வல்லமைக்கு அடையாளமாகும்; ஊக்கத்தால் செறிவூட்டி நிரப்புவதற்கு (Charger) அடையாளமாகும். அந்த வெள்ளைக் குதிரையின் மேல் வீற்றிருக்கும் மனிதன், ஆதிகாலத்தில் (early age) தேவனுடைய ராஜ்யத்திற்கென்று அந்த காலத்தை (that age) ஜெயித்த பரிசுத்த ஆவியானவர். அவர் தன் கையில் க்யூபிட் (Cupid)யைப் போன்று (க்யூபிட் - Cupid) என்பது ரோமரின் காதல் தெய்வம், ரோம புராணத் தின்படி அவன் யார் மீது காதல் அம்புகளை எய்கின்றானோ அவர்கள் உடனே காதல் வயப்படுவர் - தமிழாக்கியோன்) வில்லை வைத்துக் கொண்டு அன்பின் அம்புகளை (arrows of love), தேவ அன்பின் அம்புகளை அவர்கள் இருதயங்களில் எய்து அவர்களை தன் வசப்படுத்தி ஜெயித்தார்' என்ற ஒரு நல்ல விளக்கத்தை அளித்திருந்தனர். இப்பொழுது கேட்பதற்கு இவ்விவரணம் மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் அது உண்மையன்று. அது சத்தியம் அல்ல. இல்லை, ஐயா. ஆம் அது அதுவல்ல. வெள்ளை நிறம் நீதிக்கு அறிகுறியாயிருக்கிறது என்பதை நாமறிவோம். முதலாவது காலத்தில் (சபை) ஜெயிக்கும்படி சென்றவர் பரிசுத்த ஆவியானவர் என்றே போதகர்கள் போதித்திருந்தனர். ஆனால் பரிசுத்த ஆவியானவரால் அளிக்கப்பட்ட என்னுடைய வெளிப்பாடு, அவ்விதமாக இல்லை. 120பரிசுத்த ஆவியினால் என்னுடைய வெளிப்பாடு என்ன வெனில், கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியானவரும் ஒருவரே. ஆனால் வித்தியாசமான ரூபங்களில் காணப்படுகிறார். ஆகவே, இங்கு கிறிஸ்து, ஆட்டுக்குட்டியானவர் நிற்கிறார் - அவர்தான் ஆட்டுக்குட்டியானவர் என்று நாம் அறிவோம். அவர் கையில் புஸ்தகத்தை வைத்துக்கொண்டு இங்கே நின்று கொண்டிருக்கிறார். அங்கே வெள்ளைக்குதிரையின் மேலி ருக்கிறவன் புறப்பட்டுச் செல்கிறான். ஆகையால் அது பரிசுத்த ஆவியானவராய் இருக்கமுடியாது. பாருங்கள்? இப்பொழுது, கிறிஸ்து ஒருவரில் மூவராக எப்படியிருக்க முடியும் என்னும் இரகசியம் இக்கடைசி நாட்களில் வெளிப்படவேண்டும், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னப்படுவதை திரித்துவக்காரர் கூறு வது போன்று மூன்று ஆட்கள் அல்லது மூன்று தேவர்கள் அல்ல. ஒரே ஆள் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் அல்லது மூன்று உத்தியோகங்களில் காணப்படுகிறார். நீங்கள் போதகர்களிடம் பேசும்போது, 'உத்தியோகம்' என்ற பதத்தை உபயோகிக்க முடியாது. ஏனெனில், சரி... இது ஒலி நாடாவில் பதிவாகிறது என்பதை நான் அறிவேன். ஆகவே நான் உங்களுக்குச் சொல்வேன். கிறிஸ்துவும், “என் உத்தியோ கத்தினிடத்தில் வேண்டிக்கொள்வேன். அப்பொழுது அவர் வேறொரு உத்தியோகத்தை அனுப்புவார்” என்று கூறியிருக்க முடியாது என்பதனை நாம் அறிவோம். உங்களுக்கு விருப்பமானால் ஒரே தேவனின் மூன்று தன்மைகள் (attributes) என்று கூறலாம். பாருங்கள்? மூன்று தேவர்கள் அல்ல. மூன்று தன்மைகள் உள்ள ஒரு தேவன்! பாருங்கள்? 121ஆகையால் கிறிஸ்து எவ்வாறு புத்தகத்தைக் கையில் வைத்து இங்கே நின்றுகொண்டு அதே சமயத்தில் அங்கே வெள்ளைக் குதிரை யின் மேலேறி சென்று ஜெயிக்க முடியும்? அது முடியாது. ஆகவே, வெள்ளைக் குதிரையின் மேலுள்ளவன் கிறிஸ்துவல்ல. இப்பொழுது கவனியுங்கள், (வெளிப்படுத்தின விசேஷத்தில்) கிறிஸ்துவின் வேறொரு ரூபம் தான் பரிசுத்த ஆவியானவர், சரி. கவனியுங்கள். ஆட்டுக்குட்டியானவர்தான் புஸ்தகத்தைத் திறந்தார். ஆட்டுக்குட்டியானவர் கிறிஸ்துவே. அதோடு கிறிஸ்துகாணப் படவில்லை. மறுபடியும் வெளிப்படுத்தின விசேஷம் 19 - ம் அதிகாரத்தில் அவர் வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்து கொண்டு வருகிறார். நாம் துரிதமாக வெளி 19:11-16 படிப்போம். 11-ம் வசனத்தி லிருந்து தொடங்குவோம். நமக்குப் போதிய நேரம் உண்டென்றே நான் நம்புகிறேன். அது நமக்கு இன்னும் அதிக நன்மையளிக்கும். பின்பு பரலோகம் திறந்திருக்கக் கண்டேன்; இதோ ஒரு வெள்ளைக் குதிரை காணப்பட்டது; (அது பூமியல்ல; பரலோகத்தில், பாருங்கள்) அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும். சத்தியமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம் பண்ணுகிறார். அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தன. அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; (அந்த கிரீடங்களைப் பாருங்கள், அவருக்கேயன்றி வேறொருவருக்குத் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது. 274. இதைக் குறித்து சற்று நேரம் தியானிக்க எனக்கு எத்தனை விருப்பம்! (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை ஒருமுறை தட்டி, சிறிது நேரம் அமைதியுடன் இருக்கிறார் - ஆசி) ஓ, என்னே ! எனக்கு ஒரு எண்ணம் உதித்திருக்கிறது. ஒருக்கால்.... (சபையார் 'தொடர்ந்து செல்லுங்கள்' என்கின்றனர்). 122பாருங்கள்? யாரும் அதை அறியார்கள், ''யேகோவா'' என்னும் நாமம் சரியல்ல என்பதை நீங்கள் அறிவீர்களா? யாராவது அறிவீர்களா? டாக்டர் வேயில் (Dr. Vayle) அது உண்மை என்பது உமக்குத் தெரியும். மொழிபெயர்ப்பாளர்கள் அதை சரிவர மொழி பெயர்க்க இயலவில்லை, அது ஆங்கிலத்தில் (J-V-H-U) என்று எழுத்து கூட்டப்பட்டுள்ளது. அது 'யேகோவா' அல்ல. அதை யாராலும் தொட (touch) முடியவில்லை. அது என்னவென்பதை யாராலும் அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் 'யேகோவா' என்று அழைத்தனர். ஆனால் அது அவரது நாமமல்ல. 123வெற்றி உண்டான ஒவ்வொரு முறையும் அல்லது வேறொன்று நிகழும்போது ஒரு பெயரானது மாற்றப்படுகிறது. ஆபிரகாமின் நாட்களைப் பாருங்கள். அவன் முதலில் ஆபிராம் என்று அழைக்கப்பட்டான். அவன் ஆபிரகாம் என்று அழைக்கப்படும் வரை, அவனுக்கு குமாரன் பிறக்கவில்லை . சாராவின் (S-a-r-r-a) பெயர் சாராள் (S-a-r-a-h) என்று மாற்றப்படும்வரை அவளுடைய கர்ப்பம் செத்திருந்தது. 'யாக்கோபு என்பதற்கு எத்தன்' ஏமாற்றுபவர் என்று அர்த்தம். அவன் செய்ததும் அதுவே. அவன் ஆட்டுத்தோலைப் போர்த்துக் கொண்டு தீர்க்கதரிசியாகிய தன் தகப்பனை ஏமாற்றி சேஷ்ட புத்திரபாகத்தைப் பெற்றுக்கொண்டான். அவன் புன்னை கொப்புகளை வெட்டி இடையிடையே வெண்மை தோன்றும்படி பட்டையை உரித்து தண்ணீரில் போட்டு, ஆடுகள் பொலிந்தபோது அவைகளை பயமுறுத்தி புள்ளியுள்ள குட்டிகளை ஈனும்படி செய்தான். அவன் எத்தனன்றி வேறொருவனுமல்ல. ஆனால் ஒரு இரவில் அவன் உண்மையான ஒருவரை இறுகப் பிடித்துக்கொண்டான். அது உண்மையென்று அவன் அறிந்து, அவன் மேற்கொள்ளும்வரை அதில் நிலைத்திருந்தான். அவன் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்பட்டது. அதற்கு, 'தேவனுக்கு முன்பாக வல்லமையுள்ள அரசகுமாரன்' என்று அர்த்தமாம். அது உண்மை அல்லவா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர்ஆசி) வெற்றி கொண்ட ஒவ்வொருவரும்! (அவர்கள் பெயர்கள் மாற்றப்பட்டதைக் குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்). சீமோன் மீன் பிடிக்கும் செம்படவனாயிருந்தான், அவர் அவனிடம் தாமே மேசியா என்றும், அவனுடைய பெயர் என்னவென்றும், அவனுடைய தந்தையின் பெயர் என்னவென்றும் பகுத்தறிந்துகூறிய பொழுது, அவனுடைய விசுவாசம் (அதை) கண்டு, அவர் இயேசு என்று அறிந்தபோது, அவன் மேற்கொள்ளப்பட்டு, சீமோன் என்ற பெயரிலிருந்து பேதுரு என்னும் பெயருடையவனானான். 124சவுல் என்பது ஒரு நல்ல பெயர். சவுல் என்பவன் ஒரு காலத்தில் இஸ்ரவேலின் ராஜாவாயிருந்தான். ஆனால் அது ஒரு அப்போஸ்தலனுக்குப் பொருந்தும் பெயரல்ல. அது ஒரு ராஜாவிற்கு ஏற்ற பெயராய் இருக்கலாம். ஆனால் ஒரு அப்போஸ்தலனுக்கும் பொருந்தும் பெயரல்ல. ஆகையால் இயேசு அந்த அப்போஸ்தலனின் பெயரை (எதினின்று) சவுல் என்பதிலிருந்து பவுல் என்பதாக மாற்றினார். யாக்கோபு, யோவான் இவ்விருவரும் 'இடிமுழக்கத்தின் மக்கள்' என்று அழைக்கப்பட்டனர். 125இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, 'மீட்பர்' என்னும் நாம் முடையவராயிருந்தார். அவர் பூமியில் வாழ்ந்தபோது அந்த மீட்பர் என்ற பெயருடையவராயிருந்தது உண்மைதான். அவர் மரணத்தையும் பாதாளத்தையும் ஜெயித்து, அவைகளை மேற்கொண்டு, உன்னதத்திற்கு ஏறிச்சென்றபோது, ஒரு புதிய நாமத்தைப் பெற்றுக்கொண்டார். ஆகையால் தான் அவர்கள் எவ்வளவாக கூக்குரலிட்டாலும், ஒன்றும் பெற்றுக் கொள்வதில்லை. அது இடிமுழக்கங்களில் வெளிப்படும். ஊஊம். பாருங்கள்? ஹும்! இங்கு இரகசியங்களைப் பாருங்கள்? பாருங்கள். அவர் வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்து கொண்டு வருகிறார். இச்சபையை மறுரூபப்படுத்த ஏதோ ஒன்று அவசியமாயிருக்கிறது. அதை நீங்கள் அறிவீர்கள். ஏதோ ஒன்று இருக்க வேண்டும். கவனியுங்கள், “அவரைத் தவிர வேறு எந்த மனிதனும் அறியான்.'' கவனியுங்கள், ”அவரைத் தவிர வேறு எந்த மனிதனும் அறியான்.'' இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார். அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. ஓ, என்னே, கவனியுங்கள். பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர் களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள். புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக் கிறார். ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவரு டைய வஸ்திரத்தின் மேலும் அவருடைய தொடையின் மேலும் எழுதப்பட்டிருந்தது. (வெளி:19-13:16). 126அதோ, மேசியா அங்கு வருகிறார்! அவர் அங்கே இருக்கிறார்; வில்லைக் கையிலேந்தி வெள்ளைக் குதிரையில் மேலேறி வருபவன் அல்ல. இவ்விருவருக்குமுள்ள வேறுபாட்டைக் கவனியுங்கள். அவர் புஸ்தகத்தைக் கையில் ஏந்தியவராய் அங்கு நின்று கொண்டிருக்கிறார். மீட்பின் ஊழியம் அப்பொழுதுதான் முடிவடைந்துள்ளது. இன்னமும் அவர் தம் ஸ்தானத்தை வகிக்கவில்லை. ஆகையால். வில்லைக் கையிலேந்தி வெள்ளைக் குதிரையின் மேல் சென்றவன் கிறிஸ்துவாகிய பரிசுத்த ஆவி யானவரல்ல. பெரிய மனிதர்களுடன் நான் இணங்காதிருக்க வேண்டும் என்பது என் எண்ணமல்ல. இல்லை ஐயா, நான் அதைச் செய்வதில்லை. நான் அவ்விதம் செய்ய விரும்பவில்லை. ஆனால் அதைக் குறித்த என்னுடைய வெளிப்பாடு இதுவே. பாருங்கள்? நீங்கள் வித்தியாசமான கருத்து கொண்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் அது எனக்கு உடன்பாடல்ல. நீங்கள் பாருங்கள். இவ்விதம்தான் நான் அதை விசுவாசிக்கிறேன். இப்பொழுது பாருங்கள், அது என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள். பாருங்கள்? 127அதன் பின்னர் கிறிஸ்து காணப்படவில்லை என்பதை கவனிக்கவும். பாருங்கள்? ஆனால் அவர் வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருக்கிறார். ஆகவே இந்த மனிதன் வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தால், அவன் கிறிஸ்துவைப்போல் நடித்து ஆள்மாறாட்டம் செய்கிறான் என்று அர்த்தமாகிறது. பாருங்கள்? நீங்கள் அதை கிரகித்துக் கொண்டீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் -ஆசி) கவனியுங்கள், வெள்ளைக்குதிரையில் மேல் சவாரி செய்ப வனுக்கு, எவ்வித பெயருமில்லை. அவன் இரண்டு அல்லது மூன்று பட்டங்களை உபயோகித்துக் கொள்ளலாம். பாருங்கள், ஆனால் அவ னுக்குப் பெயர் கிடையாது. 128கிறிஸ்துவுக்கோ ஒரு நாமம் உண்டு! அது என்ன? அதுவே அவருடைய பெயராகும். 'தேவனுடைய வார்த்தை ' ''ஆதியிலே வார்த்தையிருந்தது அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது“ அந்த வார்த்தை மாம்சமானார். (யோவான் 1:1,14). பாருங்கள்? குதிரை மேல் சவாரி செய்பவனுக்கு பெயர் எதுவும் இல்லை. ஆனால் கிறிஸ்துவோ தேவனுடைய வார்த்தை என்று அழைக் கப்படுகின்றார். அவர் வார்த்தையாகவே இருக்கிறார். அவர் அவ்வாறு அழைக்கப்படுகிறார். இப்பொழுது ஒரு மனிதனும் அறியாத ஒரு பெயரை உடையவராயிருக்கிறார்; ஆனால், அவர் ”தேவனுடைய வார்த்தை“ என்று அழைக்கப்படுகிறார். இவனோ எந்தப் பெயரினாலும் அழைக்கப்படவில்லை. பாருங்கள், ஆனால் இவன் வெள்ளைக் குதிரையின்மேல் சவாரி செய்கிறான். குதிரையின் மேல் சவாரி செய்கிறவனுக்கு அவன் வில்லில் அம்பு இல்லை. அதை கவனித்தீர்களா? அவன் கையில் ஒரு வில் இருந்தது. ஆனால் அம்புகளைக் குறித்து ஒன்றும் சொல்லப்படவில்லை. ஆகவே, அவன் ஒரு பொய்க்காரனாயிருக்க வேண்டும். சரி. ஒருக்கால் அவனிடம் அநேக இடிகள் இருக்கலாம். ஆனால் மின்னல் இல்லை. ஆனால் கிறிஸ்துவினிடம் இடியும் மின்னலும் ஆகிய இரண்டுமுண்டாயிருந்தன. அவருடைய வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள கூர்மையான பட்டயம் புறப்பட்டது. அதனைக் கொண்டு அவர் தேசங்களை வெட்டுகிறார். ஆனால் இந்த நபரிடம் வெட்டுவதற்கு ஒன்றுமில்லை. பாருங்கள். அவன் மாய்மாலக்காரனின் பாகத்தை ஏற்றிருக்கிறான். அவன் வெள்ளைக் குதிரையின் மேலேறி ஜெயிப்பதற்குப் புறப்படுகிறான். 129கிறிஸ்துவினிடம் கூர்மையான பட்டயம் உள்ளது. கவனியுங்கள்! அது அவர் வாயிலிருந்து புறப்படுகிறது.- ஜீவனுள்ள வார்த்தை . அது தான் தம் ஊழியக்காரருக்கு வெளிப்படும் தேவனுடைய வார்த்தை யாகும். அவர் மோசேயிடம், “உன் கையிலுள்ள தடியை நீட்டி வண்டு களை வரவழைப்பாயாக'' என்றார். அப்பொழுது வண்டுகள் பறந்து வந் தன. நிச்சயமாக அவன் சொன்ன யாவற்றையும், அவர் செய்தார்; (Whatever he said, He done it). அப்பொழுது அது சம்பவித்தது. அவரே ஜீவனுள்ள வார்த்தை. தேவனும் வார்த்தையும் ஒருவரே. தேவனே வார்த்தையாயிருக்கிறார். முதலாம் சபையின் காலத்தில் காணப்படும் இந்த மர்மமான குதிரை சவாரிக்காரன் யார்? அவன் யார்? அதை நாம் யோசிப்போம். முதலாம் சபையின் காலத்தில் சவாரி செய்யத் தொடங்கி கடைசிவரை சவாரி செய்யும் இந்த மர்ம மனிதன் யார்?. இரண்டாம் முத்திரை தொடங்கி கடைசிவரை செல்கின்றது. அவ்வாறே மூன்றாம் முத்திரை, நான்காம் முத்திரை, ஐந்தாம், ஆறாம், ஏழாம் முத்திரைகள் அனைத்தும் கடைசிவரை செல்கின்றன. இதுவரை சுருட்டப்பட்டு இரகசியங்களைக் கொண்ட இப்புஸ்தகம் கடைசி கால த்தில் உடைக்கப்படுகின்றது. அப்பொழுது இரகசியங்கள் வெளிப்பட்டு அது என்னவென்பது நமக்கு புரியும். உண்மையில் இது முதலாம் சபையின் காலத்திலேயே தொடங்கினது. ஏனெனில் முதலாம் சபை, முதலாம் சபைக்காலம் இதைப் போன்று செய்தியைப் பெற்றுக் கொண்டது. (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை மூன்று முறை தட்டு கிறார் - ஆசி) 130“வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருக்கிறவன் புறப்பட்டுச் செல்கிறான்.'' பாருங்கள்? அவன் யார்? அவன் ஜெயிக்கும் வல்லமை கொண்டவன். அவன் ஜெயிக்கும் வல்லமையில் பெரியவன். அவன் யாரென்று நான் கூறிட விரும்புகிறீர்களா? அவன்தான் அந்திக்கிறிஸ்து. நிச்சயமாக அவன் அந்திக்கிறிஸ்துதான். இவ்விரண்டும் வித்தியாசம் அறியக்கூடாதபடி ஒன்றுக்கொன்று மிக அருகாமையில் இருக்குமென்றும், கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய மணவாட்டியும் வஞ்சிக்கப்படலாம் என்று இயேசு சொன்னார் - அந்திக் கிறிஸ்து! அது அந்திக்கிறிஸ்துவின் ஆவியாகும். 131நினைவில் கொள்ளுங்கள். நாம் முதலாம் சபையைக் குறித்து பேசும்போது, அச்சபையின் காலத்தில் ஆரம்பமான ஒரு செயலுக்குப் பரிசுத்த ஆவியானவர் விரோதமாயிருந்தாரென்று நாம் கண்டோம். அது 'நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள்' என்று அழைக்கப்பட்டது. உங்களுக்கு நினைவிருக்கிறதா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் -ஆசி) நிக்கொலாய் என்னும் பதம் 'சபையின் மேல் ஜெயங்கொள்ளுதல்' என்று பொருள்படும். (Nico-Laitane: Nickao - ஜெயித்தல் என்றும் Laity - சபை என்றும் பொருள்படும் - தமிழாக்கியோன்) அதாவது பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலை நிராகரித்து, அப்பொறுப்பை பரிசுத்த மனிதன் என்று அழைக்கப்படும் ஒருவனுக்கு அளித்தல். அவன் எல்லா வற்றிற்கும் தலைவனானான். நீங்கள் அதைக் கடந்து வந்திருக்கிறீர்கள் (அறிந்திருக்கிறீர்கள்) பாருங்கள். ஒரு சபையின் காலத்தில் கவனியுங்கள், பேச்சாக - (saying) அது, வேறொரு சபையின் காலத்தில் ''போதகமாக” மாறினது. மூன்றாம் சபையின் காலத்தில், நிசாயாவில் மகாநாடு ஒன்று கூட்டப்பட்டு அது சபையின் “போதகமாக திணிக்கப் பட்டது.'' அப்பொழுது முதலாவதாக என்ன நேர்ந்தது? அதன் விளைவாக அதிலிருந்து ஒரு ஸ்தாபனம், இப்பொழுது, உண்டானது. நான் கூறு வது சரியா? (ஆமென்). 132ஸ்தாபிக்கப்பட்ட முதலாம் சபை எங்கிருந்து தோன்றினது என்று எனக்குச் சொல்லுங்கள். ரோமன் கத்தோலிக்க சபை! வெளிப்படுத்தல் 17-ம் அதிகாரத்தில் ''அவள் வேசியென்றும், அவள் குமாரத்திகள் வேசிகளென்றும் அழைக்கப்படவில்லையா?'' அவளுடன் ஸ்தாபனங்கள் உண்டாக்கிக்கொண்ட அனைவரும் “வேசிகள்தாம்!'' ”அவர்கள் தங்கள் வேசித்தனத்தின் அருவருப்புகளை போதகமாக ஆக்கிக்கொண்டனர். மனிதருடைய பாரம்பரியங்களைக் கற்பனைகளாகப் போதித்தனர்.'' கவனியுங்கள். 133கவனியுங்கள். அவன் ஜெயிப்பதற்குப் புறப்படுகின்றான். கவனியுங்கள், அவனுக்கு கிரீடம் இல்லை என்பதை கவனியுங்கள். வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்தவனைக் குறித்து நான் இங்கு பேசுகிறேன். பாருங்கள்? “ஒரு வில்; பின்னர் அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது.'' பாருங்கள்? ஆரம்பத்தில் அவனுக்கு கிரீடம் இல்லை. பின்னர் அவனுக்குக் கிரீடம் அளிக்கப்படுகிறது. கவனியுங்கள், 300 வருடங்கள் கழித்து நிசாயா மாநாட்டில் அவனுக்கு கிரீடம் அளிக்கப்பட்டது. மூன்று கிரீடங்கள் - ஒருவன் மேல் மூன்று கிரீடங்கள்... ஆம். அவன் நிக்கொலாய் கொள்கையின் ஆவியாகத் தொடங்கி, ஜனங்களிடையே ஸ்தாபனம் உண்டு பண்ணினான். அது தொடர்ந்து சென்று, நிக்கொலாய் ”கொள்கையிலிருந்து பின்னர் “போதகமாக” மாறினது. 134கிறிஸ்து முதலாம் சபையின் காலத்தில், ''நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய்'' என்று சொன்னது நினைவிருக்கிறதா? (வெளி. 2:6). அவன் ஜெயிக்கிறவனாகப் புறப்பட்டு, பரிசுத்த வேதாகமத்தை அகற்றி, ஆதிக்கத்தை ஒரு மனித னுக்களித்தான். பாவங்களை மன்னிக்க அம்மனிதன் அதிகாரத்தை இவ னிடமிருந்து பெற்றுக்கொள்ளுகிறான். பவுலும் இதைக் குறித்து, “கேட்டின் மகனாகிய பாவ மனுஷன்; தேவன் போல் உட்கார்ந்து கடைசி நாளில் வெளிப்படுவான்'' என்று கூறியிருக்கிறான். சற்று முன்பு நாம் படித்தோம். ''தடை செய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்பட்டு பரிசுத்த ஆவி எடுபடும்போது, அவன் தன்னை வெளிப்படுத்துவான்.'' இன்றைக்கு அவன் மாறுவேடத்தில் வெள்ளைக் குதிரையின் மேல் இருக்கிறான். அவன் வெள்ளைக் குதிரையிலிருந்து மாறுவதை சில நிமிடங்களில் நாம் காணலாம். அதுமட்டுமல்ல, அவன் அநேக தலைகளும் கொம்புகளுமுள்ள மிருகமாகவும் மாறுகிறான். பாருங்கள்? பாருங்கள்? வெள்ளைக் குதிரை - இப்பொழுது அவன் ஜனங்களை ஏமாற்றுபவனாயிருக்கிறான். அதன் காரணத்தினால்தான், இதுவரை ஜனங்கள் இந்த உண்மையை அறிந்து கொள்ளவில்லை. அதைக்குறித்து அவர்கள் சிந்தித்தனர். இப்பொழுது அது இங்குள்ளது. அது வேத வாக்கியங்களின் மூலம் வெளிப்பட இருக்கின்றது. கவனியுங்கள். 135முடிவில் நிக்கொலாய், அந்திக்கிறிஸ்து ஒரு மனிதனுக்குள் வாசம் செய்கிறான். (incarnate). பாருங்கள், அப்பொழுது அவனுக்குக் கிரீடம் சூட்டப்படுகின்றது. ஆரம்பத்தில் நிக்கொலாய் சபையில், ஆவியாக அவன் இருந்தான். ஒரு ஆவிக்கு நாம் கிரீடம் சூட்டமுடியாது. ஆனால் 300 வருடங்கள் கழித்து அவன் போப்பாண்டவராகிறான். அப்பொழுது ஜனங்கள் அவனுக்கு முடிசூட்டுகின்றனர். தொடக்கத்தில் அவனுக்குக் கிரீடம் இல்லை. ஆனால் அந்த ஆவி மனிதனுக்குள் வாசம் செய்யும்போது, அவனுக்குக் கிரீடம் சூட்டப்படுகின்றது. பாருங்கள்? அவன் மனிதனாக வருகிறான். நிக்கொலாய் போதகமே ஒரு மனித உருவை அடையும்போது, ஜனங்கள் அதற்கு முடிசூட்டுகின்றனர். ஆனால் அது ஒரு போதகமாக மாத்திரம் திகழ்ந்தபோது, அவர்கள் அதற்கு முடிசூட்ட முடியாது. மகிமை! கவனியுங்கள்! நாம் பெற்றுள்ள இந்த பரிசுத்த ஆவி, இப்பொழுது நம் மத்தியில் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் உள்ள அவர், இயேசு கிறிஸ்து என்ற நபராக நமக்கு மாம்சத்தில் வரும்போது, அவரை நாம் ராஜாதி ராஜாவாக முடிசூட்டுவோம். அது சரி. பாருங்கள். 136இப்பொழுது ஞாபகங்கொள்ளுங்கள்; கிறிஸ்து சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் சமயம் அந்திக்கிறிஸ்துவும் சிம்மாசனத்திலிருக்கிறான்யூதாஸ். கிறிஸ்து உலகத்தை விட்டுச் சென்றபோது, யூதாஸும் உலகை விட்டுச் சென்றான். பரிசுத்த ஆவியானவர் மறுபடியும் வந்த போது, அந்திக்கிறிஸ்துவும் மறுபடியும் வருகிறான். அப்போஸ்தலனாகிய யோவான், “பிள்ளைகளே அந்திக்கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை. அவன் ஏற்கெனவே உலகில் தோன்றி கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் கிரியைகளை நடப்பிக்கிறான்'' என்றான் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆம், அந்திக்கிறிஸ்து அங்கே நிக்கொலாய் ஆவியாக ஸ்தாபனத்தை உண்டாக்குகிறான். நான் ஸ்தாபனங்களின் பேரில் வெறுப்புக் கொண்டுள்ளதில் வியப்பு எதுவுமில்லை. பாருங்கள்? பாருங்கள்? நானாகவே அதை வெறுக்கவில்லை. எனக்குள் இருக்கிறவர் அதை வெறுக்கிறார். நீங்கள் அதைக் காண்கிறீர்களா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). அவர் என் மூலம் வெறுப்பைத் தெரிவிக்கிறார், நான் ஸ்தாபனங்களால் சூழப்பட்டிருப்பினும், இதுவரை நான் அவைகளை வெறுக்கும் காரணத்தை என்னால் சரிவர அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. அந்த நிக்கொலாய் ஆவியை தேவன் வெறுத்தார். இப்பொழுது, நிக்கொலாய் ஆவி மனிதனுக்குள் வாசம் செய்யும்போது, ஜனங்கள் அதற்கு முடிசூட்டுகின்றனர். அவர்கள் அவ்விதம் செய்வார்கள் என்று வேதம் எவ்வளவு சரியாக எடுத்துரைக்கின்றது! ஓ, என்னே ! மனிதனுக்குள் வாசம் செய்தல். அவன் மனிதனானான். அப்பொழுது அவர்கள் அவனுக்கு முடிசூட்டினர். 137அந்திக்கிறிஸ்து சபையின் ராஜ்யங்களைக் கைப்பற்றுவான் என்று தானியேலும் கூறியுள்ளான் என்பதை நீங்கள் வாசியுங்கள். நீங்கள் அதை வாசிக்க விரும்புகிறீர்களா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர்ஆசி). நாம் அதை வாசிக்கும்படி நமக்கு போதிய நேரம் உண்டல்லவா? (“ஆமென்'',) அது சரி. கவனியுங்கள். நாம் இப்பொழுது சிறிது நேரத் திற்கு தானியேல் புஸ்தகத்தைத் திருப்புவோம். நாம் தானியேலுக்குத் திருப்பி, சிறிது நேரம் அதைப் படிப்போம். நாம் இன்னும் பதினைந்து, இருபது அல்லது முப்பது நிமிடங்களுக்கு மேல் இங்கே காத்திரோம். அது சரி! (”ஆமென்''). நாம் தானியேல் 11-ம் அதிகாரம் 21-ம் வசனத்தை எடுத்துக்கொள்வோம். இதோ தானியேல், தானியேல் இப்பொழுது இந்த நபர் எப்படி கைப்பற்றப் போகிறான் என்பதைக் குறித்து தானியேல் சொல்கிறான். அவன் ஸ்தானத்தில் அவமதிக்கப்பட்டவன் ஒருவன் எழும்புவான்; (ரோமாபுரியைக் குறித்து சொல்லுகிறான்), இவனுக்கு ராஜ்யபாரத்தின் மேன்மையைக் கொடாதிருப்பார்கள்; (இப்பொழுது கவனியுங்கள்) ஆனாலும் இவன் சமாதானமாய்... சமாதானமாய் நுழைந்து, இச்சகம் பேசி, ராஜ்யத்தைக் கட்டிக்கொள்ளுவான். 138அந்திக்கிறிஸ்து என்ன செய்வான் என்று தானியேல் கூறினது சரியாக அப்படியே நடந்தது. அவனைச் சார்ந்த ஜனங்களிடையே அவன் சரியாக பொருந்துவான். ஆம். அவன் அளிக்கும் ஆகாரம் இக்காலத்து சபைகளுக்கு அருசுவையாயிருக்கும். ஏனெனில் இச்சபையின் காலத்தில், ஜனங்களுக்கு வார்த்தையாகிய கிறிஸ்து அவசியமில்லை. அவர்களுக்கு சபைதான் வேண்டியதாயிருக்கிறது. முதல் காரியமாக, நீங்கள் கிறிஸ்தவரா? என்று உங்களை யாரும் விசாரிப்பதைல்லை. எடுத்தவுடன் “நீங்கள் எந்தச் சபையைச் சேர்ந்தவர்கள்? எந்த சபை?” என்று கேட்கின்றனர். அவர்களுக்குக் கிறிஸ்து, வார்த்தை அவசியமில்லை. நீங்கள் போய், அவர்கள் திருத்தப்பட வேண்டுமென்று தேவனுடைய வார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்தால், அவர்கள் அதை ஏற்கமறுக்கின்றனர். அவர்கள் தங்கள் விருப்பம்போல் வாழ்க்கையை நடத்தி அதே சமயத்தில் சபையின் அங்கத்தினராயிருந்து அதன் நற்சாட்சி பெறவேண்டுமென்ற ஒன்றை விரும்புகின்றனர். பாருங்கள்? பாருங்கள்? ஆகையால் அந்திக்கிறிஸ்து அளிக்கும் ஆகாரம் அவர்கள் விருப்பத்திற்கேற்ப சரியாக அமைந்துள்ளது. முடிவில் அந்திக் கிறிஸ்து “அவள்” என்று வேதத்தில் அழைக்கப்படுவதைப் பாருங்கள், அவள் வேசியாயிருந்தாள், அவளுக்குக் குமாரத்திகள் இருந்தனர். அது இக்காலத்து ஜனங்களிடையே சரிவர பொருந்துகிறது. அதுதான் அவர்களும் விரும்புகின்றனர். அது இங்கே இருக்கின்றது. 139தேவன் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். வார்த்தை புறக்கணிக்கப்படும்போது, அவர்கள் தங்களுடைய இருதயத்தின் வாஞ்சைகளுக்குத் திரும்புவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். நாம் தெசலோனிக்கேயர் நிரூபத்தை மறுபடியும் படிப்போம். இருக்கட்டும்... நீங்கள் ஒரு நிமிடம் இங்கே கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஆம், நாம் அதை சற்று முன் வாசித்தோம். 2 தெசலோனிக்கேயர் 2:9-11. அவர்கள் செய்யப்போவது அதில் கூறப்பட்டுள்ளது. “அவர்கள் சத்தியத்தைப் புறக்கணித்த காரணத்தால், அவர்கள் பொய்யை விசுவாசிக்கும்படி செய்து ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவர்”, இப்பொழுது அதைத்தான்-அதைத்தான் பரிசுத்த ஆவியானவரே உரைத்திருக்கிறார் இப்பொழுது இன்றைய சபையின் (ஸ்தாபனத்தின்) விருப்ப மும் அதுவல்லவா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் -ஆசி) நீங்கள் இதைச் செய்யவேண்டும், அதைச் செய்யவேண்டுமென்று வேதம் கூறுவதை நாம் எடுத்துக் கூறினோமானால், உடனே அவர்கள், தாங்கள் மெதோடிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள் என்று சொல்லி, 'நீங்கள் கூறுவதைக் கேட்டு அதன்படி நடக்க அவசியமில்லை' என்பார்கள். பாருங்கள்? நிச்சயமாக, அவர்கள் அதை விரும்புகின்றனர். 140ஆகையால் தேவன், ''அவர்கள் அதை விரும்பினால், அதை நான் அனுமதிப்பேன். அது சத்தியம் என்று அவர்களை விசுவாசிக்கச் செய்வேன். ஏனெனில் நான் சத்தியத்தை குறித்து கேடான சிந்தையை அவர்களுக்குக் கொடுப்பேன்“ என்கிறார். வேதம் என்ன சொல்லுகிற தென்பதைக் கவனியுங்கள். ”யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல..... இவர்களும் இக்கடைசி காலத்தில் சத்தியத்தைக் குறித்து கேடான சிந்தையுடையவர்களாய், நமது தேவனுடைய கிருபை யைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, நம் கர்த்தராகிய தேவனை மறுதலிப்பார்கள்.'' அது எங்குள்ளது என்பதை நீங்கள் இப்பொழுது காணலாம்; கத்தோலிக்கர்கள் மாத்திரமல்ல, பிராடெஸ்டெண்டுகளும்கூட இவ்விதம் செய்வார்கள் - இவ்வனைவரும்..... ஸ்தாபனங்கள் அனைத்தும். அந்திக்கிறிஸ்து முதலாம் சபையின் காலத்தில் புறப்பட்டான். அவன் வெள்ளைக் குதிரையின் போர்வையில், (வெள்ளை-நீதிக்கு அடையாளம், சபை-சவாரி) செய்தான். அது காண்பதற்கு ஒன்றைப் போலவே தோன்றினது. கிறிஸ்து குதிரையின்மேல் (வெள்ளை) வருவதைப் போலவே அவனும் வருகை புரிந்தான். பாருங்கள்? ஓ, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக எதிராயிருந்தான். அவன் இங்குள்ளான். அவன்தான் அந்த அந்திக்கிறிஸ்து. 141அவன் முதலாவது சபையில் சவாரி செய்ய ஆரம்பித்து, அவன் ஒவ்வொரு சபையின் காலத்திலும் சவாரி செய்து கொண்டே செல்கிறான். அவனை உற்று நோக்குங்கள். 'அப்போஸ்தலர் காலத்தில் கூடவா?' என்று நீங்கள் வினவலாம். அப்பொழுது அவன் 'நிக்கொலாய்'' என்று அழைக்கப்பட்டான். அடுத்த சபையின் காலத்தில் அவன் நிக்கொலாய் மதஸ்தரின் போதகமானான். முதலாவது அவன் ஒரு வழக்காக (பேச்சாக - தமிழாக்கியோன்) இருந்தான். அதன்பின் அவன் போதகமானான். அழகான ஆடைகள் அணிந்து அதிக கல்வி கற்று, நாகரீகம் பொருந்திய முக்கியஸ்தர்கள் தங்கள் சபைகளில் பரிசுத்த ஆவியின் போதகத்தை விரும்பவில்லை. இல்லை. அவர்கள் ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்திருப்பதற்கு மாத்திரம் விரும்பினர். நிசாயாவின் மகாநாட்டில் சபை அஞ்ஞான மார்க்கத்தைக் கிரகித்துக் கொண்டது. ரோமன் கத்தோலிக்க சபை அஞ்ஞான முறைகளைக் கையாண்டு, பரலோகத்தின் ராணி என்று அழைக்கப்பட்ட அஸ்தரோத்தை இயேசுவின் தாயாகிய மரியாள் என்ற பெயரினால் சபையில் புகுத்தி, மரித்தவர்களை மத்தியஸ்தர்களாக்கி இன்று வரையிலும் உள்ள வட்ட வடிவில் அமைந்த ரொட்டியை, அது பரலோக மாதாவிற்கு பிரதிநிதித்துவம் அளிப்பதால் (water) கிறிஸ்து வின் சரீரமென அழைத்தது. ஒரு கத்தோலிக்கன் அவன் ஆலயத்தைக் கடந்து செல்லும்போது, சிலுவை அடையாளத்தைப் போட்டுக் கொள் கிறான். ஏனெனில் அங்கு பீடத்தில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கு குருவானவரின் வல்லமையினால் தேவனாக மாற்றப்படுகின்றதாம். இவையெல்லாம் வெறும் அஞ்ஞான பழக்க வழக்கங்களேயன்றி வேறல்ல. பாருங்கள்? அது சரி. 142அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. நல்லது. இப்பொழுது நான் அதைப் புரிந்து கொண்டுள்ளேன். ஆம், ஆம் ஐயா, தேவனுடைய கிருபையால் அதை நான் புரிந்து கொள்கிறேன். நிச்சயமாக. இப்பொழுது கவனியுங்கள். ஓ... என்னே, அவர்களால் அதை எப்படிச் செய்ய முடிகின்றது? பாருங்கள்? அவர்களின் இருதயத்தின் விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்ள தேவன் அனுமதித்துள்ளார். இல்லை, அது உண்மை . நீ (அதை (That) தமிழாக்கியோன்) வார்த்தையின்படி செய்ய வேண்டிய அவசியம் உனக்கில்லை. (அப்பொழுது - தமிழாக் கியோன்) அது உண்மை . இல்லை, ஐயா. உனக்கு அதைச் செய்ய (வார்த்தை -It -தமிழாக்கியோன்) விருப்பமில்லாவிடில், அதைச் செய்யும் படி (வார்த்தையின்படி - It) யாரும் திணிக்கப் போவதுமில்லை. தேவன் அமைத்திருக்கும் வழியைப் பின்பற்றி அவரை ஆராதிக்க நீ விருப்பங்கொள்ளாவிடில், தேவன் உன்னை நிர்ப்பந்தம் செய்யவில்லை. உன் விருப்பத்திற்கு அவர் உன்னை விட்டுக் கொடுக்கிறார். 143ஆனால் ஒன்றை மாத்திரம் கூற விரும்புகிறேன். உன் பெயர் உலகத் தோற்றத்துக்கு முன்னே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவப்புஸ் தகத்தில் எழுதப்பட்டிருக்குமானால், தேவன் அமைத்த முறைகளை அனு சரிப்பதற்கு நீ பெருமகிழ்ச்சி கொள்வாய். ஒரு நொடிப்பொழுதும்கூட நீ அதற்குத் தாமதிப்பதில்லை. 'நான் உங்களைப் போலவே பக்தியுள்ளவனாயிருக்கிறேன்' என்று நீ சொல்லலாம், சரி, அது உண்மையாயிருக்கலாம். கர்த்தராகிய இயேசுவின் காலத்திலிருந்த ஆசாரியர்கள் பக்தி கொண்டவராயில்லை என்று யார் கூற முடியும்? அவ்வாறே வனாந்தரத் திலிருந்த இஸ்ரவேல் ஜனங்கள் பக்தி கொண்டவராயில்லையா? 'கர்த்தர் என்னை அதிகமாய் ஆசீர்வதிக்கிறார்' என்று நீ ஒருக்கால் பெருமிதம் கொள்ளலாம். ஆம், அவர்களையும்தான் அவர் ஆசீர்வதித்தார். இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் ஜீவனத்திற்கு உழைக்க வேண்டிய அவசியம்கூட இருக்கவில்லை. கர்த்தர் அவர்களை வானத்தின் மன்னாவால் போஷித்தார். ஆனால் “அவர்கள் ஒவ்வொருவரும் அழிந்து மாண்டு போனார்களென்று” இயேசு கூறினார். அவர்கள், ''எங்கள் பிதாக்கள் வனாந்திரத்திலே நாற்பது வருஷம் மன்னாவைப் புசித்தார்கள்,'' என்றனர். இயேசுவோ, “அவர்கள் ஒவ்வொருவரும் மரித்துவிட்டனர். நித்திய பிரிவினையை அடைந்தனர்,'' என்றார். பாருங்கள்? ”தேவனி டத்திலிருந்து பரலோகத்தை விட்டு வந்திருக்கின்ற ஜீவ அப்பம் நானே. இந்த அப்பத்தை ஒருவன் புசித்தால், அவன் ஒருபோதும் மரிப்பதில்லை'' என்றார். பாருங்கள்? அவர்தான் ஜீவ விருட்சமாயிருக்கிறார். 144இயேசு எவ்விதமாக, எப்பொழுது வந்தார் என்பதைக் கவனியுங்கள். இயேசுவின் காலத்திலிருந்த ஆசாரியர்கள் பக்தி வைராக்கியம் கொண்டிருந்தனர். அவர்கள் நல்லவரல்ல என்று யாரும் குறைகூற முடியாது. என்னே! அவர்கள் பிரமாணத்தின்படி சரியாக நடந்தனர். அவர்களுடைய சபை செய்யக் கூறின யாவையும் அவர்கள் செய்தனர். அவர்கள் அதைச் செய்யாவிடில், அவர்கள் கல்லெறியுண்டனர்;. அவர் வெளிநடந்தார். இயேசு அவர்களை என்ன கூறினார் என்று நீங்கள் அறிவீர்களா? யோவான் அவர்களை, “புல்லின் கீழ் பதுங்கிக் கொண்டிருக்கும் பாம்பின் கூட்டமே, அந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்திருக்கும் காரணத்தால் நீங்கள் தேவனுடையவர்கள் என்று உங்களை எண்ணிக் கொள்ள வேண்டாம்'' என்றான். இயேசுவும் அவர்களை நோக்கி, ''நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டாயிருக்கிறீர்கள்'' என்று கூறினார். மேலும் அவர், ''ஒவ்வொரு முறையும் தேவன் தீர்க்கதரிசியை அனுப்பினபோது, அவர்களை நீங்கள் கல்லெறிந்து கொன்று கல்லறைகளில் அடக்கம் செய்தீர்கள். இப்பொழுது கல்லறைகளைச் சுத்தம் செய்து மெருகேற்றுகிறீர்கள்'' என்றார். 145கத்தோலிக்க சபையும் அதையல்லவா செய்தது! ஜோன் ஆப் ஆர்க் (Joan of Arc), பரி. பாட்ரிக் (St. Patrick) இன்னும் மற்றவர்களை அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் தாம் இவர்களைக் கல்லறைகளில் அடக்கம் செய்தனர். ஆனால் சில நூற்றாண்டுகள் கழித்து அவர்கள் ஜோன் ஆப் ஆர்க்கின் உடலைத் தோண்டியெடுத்து, நதியில் எறிந்து, அவளை மந்திரவாதியென்றழைத்து சுட்டெரித்தனர். 'நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டாயிருக்கிறீர்கள். அவனுடைய கிரியைகளை நீங்களும் செய்கின்றீர்கள்'. அது சரி யாகவே இருக்கிறது. உலகம் பூராவும் இவ்வாறே சம்பவிக்கும். பாருங்கள்? சரி! இயேசு கூறினதும் அதுவே. அந்த வெள்ளைக் குதிரை காண்பதற்கு மிக அழகாகவும், அது உண்மையாகவும் இருப்பதாக நினைக்கிறீர்களா? ஆனால் நீங்கள் என்ன பெற்றிருக்கிறீர்கள் என்று கவனியுங்கள். குதிரையின் மேல் உண்மை யாகவே சவாரி செய்பவன் அவன்தான். இப்பொழுது அவர்கள் அதைச் செய்ய விரும்பினார்கள் என்று அவர் கூறினதினால், அவர் கொடிய வஞ் சகத்தை அவர்களுக்கு அனுப்புவார். 146நினைவில் கொள்ளுங்கள். வெளிப்படுத்தல் 17-ல் கூறப்பட்ட “வேசி, மகா பாபிலோன் இரகசியம், வேசிகளுக்குத் தாய்”. யோவான் அவளைக் கண்டு ஆச்சரியப்பட்டான். இந்த மனிதனைப் போலவே...பாருங்கள், பொறுத்திருங்கள். நாம் இங்கு வந்து, இங்குள்ள இந்த வெள்ளைக் குதிரையை கவனிக்கின்ற அந்த மனிதனை கவனிக்கிறோம். பாருங்கள்? ஆனால் நீங்கள் அதை கவனித்தீர்கள். அங்கு என்ன சம்பவித்ததென்றால், “அவன் மிகுந்த ஆச்சரியத்துடன் அவளைக் குறித்து வியப்படைந்தான்”, ஆனால் இரகசியம் என்னவெனில், “அவள் கிறிஸ்துவினுடைய பரிசுத்தவான்களின் இரத்தத்தால் வெறி கொண்டிருந்தாள்”, இரத்தாம்பரத்தினாலும் பொன்னினாலும் அலங்கரிக்கப்பட்ட அழகான சபை, “ஆனால் வேசித்தனமும் அருவருப்பும் நிறைந்த பாத்திரம் அவள் கையில் இருந்தது.” 147“வேசித்தனம்” என்பது என்ன? அது “அநீதியான வாழ்க்கை நடத்துவது” என்று பொருள்படும். அதுதான் அவள் அளித்த போதகம், தேவனுடைய வார்த்தையை அவள் அவமாக்கி, “மரியாளே வாழ்க” போன்ற முறைகளை சபைக்கு அளித்தாள். “பூமியின் ராஜாக்கள் அவளுடன் வேசித்தனம் பண்ணினர்.” நல்லது. “கத்தோலிக்க சபைதான் அவ்விதம் செய்கின்றது” என்று நீங்கள் கூறலாம், ஆனால், அவள் “வேசிகளுக்குத் தாய்” என்பது நினைவிருக்கட்டும் பாருங்கள்? அவள் இருந்த விதமாகவே இருக்கிறாள். அவ்விதமே. நடந்தது என்ன? சீர்திருத்தக்காரன் மரித்து அவன் செய்தியையும் மரித்துபோன பிறகு, நீங்கள் ஸ்தாபனத்தை ஏற்படுத்தி பழையபடி அங்கு சிக்கிகள் (Rickys) குழுக்களை வைத்தீர்கள். உங்கள் விருப்பப்படி வாழத் தொடங்கினீர்கள். தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருக்க நீங்கள் விருப்பங் கொள்ளவில்லை, வார்த்தையுடன் செல்வதற்குப் பதிலாக நீங்கள் ஸ்தாபனத்தில் நிலைத்து நின்று “இதுதான் அது” என்று கூறுகிறீகள். ஹூம்! நீங்கள் அதைச் செய்யாதீர்கள், அது அவர்தான், பாருங்கள், அங்கேயும் அவரே! கவனியுங்கள். இது ஒரு காரியம். ஆனால் நாம் முடிக்கும் முன்பாக இன்னும் சில இடங்களிலிருந்து விளக்கிட விரும்புகிறோம், 148அவன் தானியேலின் ஜனங்களை அழிக்கும் பிரபு என்பதை அறி வீர்களா? ஒரு சில நிமிடங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டிக்கொள் கிறேன். என்னால் முடிந்தவரை, நான் துரிதமாக முடிக்கிறேன். ஆனால் இது உண்மையென்று உங்களிடம் கூற விரும்புகிறேன். ஏனெனில் நான்... பரிசுத்த ஆவியானவர் தாமே இதை எனக்கு அளித்திருக்கிறார் என்பது நான் இங்கு நிற்பது போல உறுதியானதாகும். பாருங்கள்? பாருங்கள்? 149இப்பொழுது கவனியுங்கள். நாம் ஒரு நிமிடம் மறுபடியும் தானியேலுக்குத் திருப்புவோம். நான் உங்களுக்கு ஒன்றை வாசிக்க விரும்புகிறேன்... உங்களால் அதைத் திருப்ப முடியவில்லையெனில்... பரவாயில்லை. நான் தானியேல் 9, 26, 27-ம் வசனங்களை வாசிக்க விரும்புகிறேன். தானியேலின் ஜனங்களை அழிப்பவன் இவன்தானா, அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை நீங்கள் கவனியுங்கள். அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்... பாருங்கள், எழுபது வாரங்களில் அறுபத்திரண்டு வாரங்களுக் குப்பிறகு... ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத் தையும் வரப்போகிற (வரப் போகிற) பிரபுவின் ஜனங்கள் அழித்துப் போடுவார்கள் (இங்கே சகோ.பிரான்ஹாம் ஜனங் களும், பிரபுவும் (the people and the prince) என்று வாசிக்கிறார்தமிழாக்கியோன்) (அதுதான் அந்த குருக்களாட்சி - heirarchy) அதின் முடிவு ஜலப்பிரவாகம் போல் இருக்கும்; முடிவு பரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது. 150உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன், மூன்றரை வருட ஊழியத்திற்குப் பிறகு கிறிஸ்து சங்கரிக்கப்பட்டார். அதன் பின் 'ஆலயத்தை அழித்தவன் யார்? யார் அதை அழித்தது?' ரோமாபுரி! நிச்சயமாக. கான்ஸ்டான்ட்டின் அல்லது... இல்லை. மன்னிக்கவும். ரோம தளபதியாகிய தீத்து (Titus) என்பவன். அவன் பிரபுவை அழித்தான். இப்பொழுது கவனியுங்கள். இவனைச் சற்று கவனியுங்கள். அவன் இந்த சுவர் வரை வந்தான். 151இயேசு பிறந்தபோது... வானத்திலுள்ள சிவப்பான வலுசர்ப்பம் அந்த ஸ்திரீ பிள்ளை பெற்றவுடனே அவளுடைய பிள்ளையைப் பட்சித்து போடும்படிக்கு அவளுக்கு முன்பாக நின்றது. அது சரியா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர்- ஆசி) (இயேசுவாகிய) குழந்தை பிறந்தபோது அதைப் பட்சிக்க முயன்றது யார்? ('ரோமாபுரி'') ரோமபுரி! பாருங்கள்? அதுதான் அந்த சிவப்பான வலுசர்ப்பம்! இங்கே அந்தப் பிரபு. இங்கே அந்த மிருகம். பாருங்கள்? அவர்களனைவரும் ''பிள்ளையைப் பட்சித்துப் போட“ நின்று கொண்டிருக்கின்றனர். ஆனால் தேவன் பிள்ளையைப் பரலோகத்திற்கு எடுத்துக்கொண்டு, சிங்காசனத் தில் வீற்றிருக்கும்படி செய்தார். குறிப்பிட்ட காலம்வரை கிறிஸ்து அங்கு தான் இருப்பார். பாருங்கள்? இப்பொழுது, அவன் என்ன செய்வான் என்பதைக் கவனியுங்கள். 152இப்பொழுது, ஓ, இப்பொழுது, அன்றைக்கு நான் யாரோ ஒரு வரிடம் அமெரிக்காவின் பொருளாதார நிலையைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அது சகோ. ராபர்ஸன் (Bro. Roberson) என்று நினைக்கிறேன். அதைப் பற்றி நான் சிறிது காலம் முன்பு உங்களிடையே பிரசங்கித்திருக்கிறேன் என்று நம்புகிறேன். பாருங்கள்? நாம் நமது கடன்களை, வரிப்பணத்தைக் கொண்டு அடைத்து வருகிறோம். கடன் அடைத்துத் தீர்க்க இன்னும் நாற்பது வருடங்கள் செல்லும். நாம் அந்த அளவிற்கு பின் தங்கியுள்ளோம். நீங்கள் எப்போதாவது 'கெயர்' (KAIR) அல்லது 'லைப்லைன்' (Life Line) வானொலி நிலையங்களின் அறி விப்பை வாஷிங்டனிலிருந்து ரேடியோவில் கேட்டதுண்டா? நாம் பயங் கரமான நிலையில் உள்ளோம். அவ்வளவே. அதற்கு என்ன காரணம்? தங்கம் எல்லாம் வங்கியில் செலுத்தப்பட்டு, அதற்குரிய பாண்டு (Bonds) பத்திரங்களை யூதர்கள் வைத்துக் கொண்டிருக்கின்றனர். அது ரோமாபுரியாயிருக்கப் போகின்றது. இப்பொழுது கவனியுங்கள், இந்தப் பெரிய மாடிக் கடைகள் (apartment stores...) யாருக்குச் சொந்தம் என்பதை நாம் அறிவோம். ஆனால், பெரும்பான்மையான உலகத்தின் செல்வம் ரோமாபுரியின் வசமுள்ளது. எஞ்சினவை யூதர்களிடமிருக்கிறது. இப்பொழுது கவனியுங்கள். பரிசுத்த ஆவியானவர் இதை எனக்கு எவ்வாறு வெளிப்படுத்தினார் என்று பாருங்கள். அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி (இப்பொழுது கவனியுங்கள்) அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப் பண்ணுவார்... அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான். நிர்ணயிக்கப்பட்டி ருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன் மேல் தீருமட்டும் சொரியும், (தமிழ் வேதத்தில் சரியான மொழி பெயர்ப்பல்ல. ஆங்கில வேதத்தில் அவன் (அந்தப் பிரபு) உடன்படிக்கையை உறுதிப்படுத்தி அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழி யப்பண்ணுவான் என்றும், அரு வருப்பைப் பரப்ப அவன் முடிவு காலம்வரை பாழாக்குவான் என் றும், பாழாக்கப்படுகிறவர்களின் மேல் அவன் நிர்ணயித்தது ஊற்றப்படும் என்றும் அர்த்தங்கொண்டுள்ளது - தமிழாக் கியோன்). 153கவனியுங்கள்! ஓ! அது எவ்வளவு சாமார்த்தியமுள்ள காரியம்! அவன் இங்கே இருக்கிறான். இப்பொழுது அந்த காட்சி என்ன என்றும், இது ரோமாபுரிதான் என்று நாம் அறிந்துகொண்டோம். அவன் வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்பவன் என்று அறிந்தோம். அவன் ஒரு போதகமாகப் புறப்பட்டான் என்று நாம் அறிவோம். அஞ்ஞானரோம மார்க்கம், போப்பாண்டவரின் ரோமன் கத்தோலிக்க மார்க்கமாக மாறி, அதற்கு முடிசூடப்பட்டது. 154இப்பொழுது கவனியுங்கள்! “கடைசி காலத்தில்''- கிறிஸ்து பிரசங்கித்த காலத்திலல்ல - வாரத்தின் பிற்பகுதியில், நாம் இப்பொழுது தானியேலின் எழுபது வாரங்களைக் குறித்து சிந்தித்தோம். கிறிஸ்து மூன்றவரை வருடங்கள் தீர்க்கதரிசனம் உரைத்தார். இன்னமும் மூன்றரை வருடகாலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான் கூறுவது சரியா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் -ஆசி) அச்சமயம் இந்த பிரபு தானி யேலின் ஜனங்களுடன் அதாவது யூதர்களுடன் உடன்படிக்கை செய்வான். அது மணவாட்டி எடுக்கப்பட்ட பிறகு சம்பவிக்கும். அவள் அதைக் காணமாட்டாள். 155கவனியுங்கள், தானியேலின் வாரத்தின் பிற்பகுதியில், ஜனங்கள் அந்தப் பிரபுவுடன் உடன்படிக்கை செய்கின்றனர். யூதர்களுடைய செல்வத்தைப் பறிப்பதற்காக இந்த உடன்படிக்கை செய்யப்படுகிறது. ஏனெனில் கத்தோலிக்க மார்க்கத்தாரும், யூதர்களும் உலகத்தின் செல்வம் முழுமையுமே கைப்பற்றியுள்ளனர். நான் வாடிகனுக்குச் (Vatican) சென்றபோது, அங்குள்ள மூன்று கிரீடங்களையும் கண்டேன். நான் போப்பாண்டவரை ஒரு புதன்கிழமை பகல் 3.00 மணிக்குப் பேட்டிக்காண பாரன் பான் ப்ளும் பெர்க் (Baron Von Blumberg) ஒழுங்கு செய்திருந்தார். நான் ராஜாவிடம் அழைத்துச் செல்லப்பட்டபோது, என் கால் பட்டையிலுள்ள முன்கவசத்தை (cuffs) வெட்டி விட்டார்கள். அது பரவாயில்லை. ஆனால் நான் அவரைக் கண்டு திரும்பிவரும்போது, என் முதுகைக் காண்பித்து வரக்கூடாதாம். அதுவும் பரவாயில்லை. ''அந்த மனுஷனுக்கு முன்பாக நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டேன். அவர்கள், ''நல்லது, நீங்கள் உள்ளே சென்று முழங்காற்படி யிட்டு அவருடைய (போப்பாண்டவர் -தமிழாக்கியோன்) விரலை முத்தம் செய்யுங்கள்“ என்று கூறினார். நான், “ அது முடியாது. அது முடியாது. இல்லை , ஐயா ,'' என்றேன். 'சகோதரன்' என்று அழைக்கப்பட விரும்புகிறவர்களை நான் சகோதரன் என்று அழைப்பேன். 'சங்கை' (Reverend) என்னும் பட்டப் பெயரால் ஒருவன் அழைக்கப்பட விரும்பினாலும் நான் அவனை 'சங்கை' என்று அழைப்பேன். ஆனால் ஒரு மனிதனைப் பணிந்து ஆராதனை செய்யமாட்டேன். ஏனெனில் ஆராதனை யாவும் இயேசுகிறிஸ்துவுக்கே உரியது. பாருங்கள்? இல்லை, இல்லை, ஐயா. ஒரு மனிதனின் கரத்தை முத்தம் செய்வது என்பது என்றால் முடியாது. ஆகவே, நான் அதைச் செய்யவில்லை. 156ஆனால் வாடிகனை நான் சுற்றிப் பார்த்தேன். கோடி, கோடி, கோடிக்கணக்கான டாலர்கள் கொடுத்தாலும் அதை வாங்கமுடியாது. நல்லது... ''உலகத்தின் செல்வங்கள் அனைத்தும் அவளிடத்தில் காணப்பட்டதென்று'' வேதம் உரைக்கிறது. விலை மதிக்கமுடியாத அந்த ஸ்தலங்களைப் பாவனை செய்து பாருங்கள், ருஷியாவில் கம்யூனிஸ்ட் தலையெடுக்கக் காரணம் யாது? இன்று அநேக போதகர்கள் கம்யூனிஸத்துக்கு விரோதமாய் பிரசங்கிப்பதைக் கேட்கும்போது எனக்கு வயிறு குமட்டுகிறது. அவர்கள் எதைக் குறித்து காக்கையைப் போன்று கரைந்து கொண்டிருக்கின்றனர் (crowing) என்பதை அறியாமல் உள்ளனர். அது சரி. கம்யூனிஸம் என்பது ஒன்று மில்லை. அது இப்பூமியில் சிந்தப்பட்ட பரிசுத்தவான்களின் இரத்தத்திற்காக பழி வாங்குவதற்கென்று தேவன் உபயோகிக்கும் ஒரு கருவியாக உள்ளது. அது சரி. 157சபை எடுக்கப்பட்ட பின்னர், ரோமாபுரியும் யூதரும் ஒருவரோ டொருவர் உடன்படிக்கை செய்து கொள்வர். பரிசுத்த ஜனங்களோடு அவர்கள் உடன்படிக்கை செய்வார்களென்று வேதம் கூறுகிறது. ஏன்? அமெரிக்க தேசமும் ஏனைய நாடுகளும் பொருளாதார சீர்குலைவு அடையும் நிலை வந்துவிட்டது. அதை நீங்கள் அறிவீர்கள். நம் கடனைத் தீர்க்க இன்னும் நாற்பது வருடகாலம் நம் வரிப்பணத்திலிருந்து செலுத்தப்படவேண்டுமானால், நமது நிலையென்ன? நாணயங்களை வாங்கிக்கொண்டு பாண்டு பத்திரங்களைச் செலுத்துவதுதான் இதற்கு விமோசனம். நாம் அவ்வாறு செய்ய முடியாது. வால் ஸ்ட்ரீட் (Wall Street) தன் பணத்தையெல்லாம் சேமித்து வைத்துள்ளது. யூதர்கள்தான் வால் ஸ்ட்ரீட்டில் ஆதிக்கம் கொண்டுள்ளனர். அவர்கள் உலக வாணிபத்துறையில் ஈடுபட்டுள்ளனர். மீதியான செல்வம் அனைத்தும் வால் ஸ்ட்ரீட்டிலுள்ள யூதர்களிடம் உள்ளது. நாம் அவ்வாறு செய்ய முடியாது. 158ஆகவே அவர்கள் அதைச் செய்வார்களானால் நீங்கள் நினைக்கின்றீர்கள்... இப்படிப்பட்ட விஸ்கி மற்றும் புகையிலை வியாபாரிகள், வருடத்திற்கு கோடிக்கணக்கான டாலர்கள் சம்பாதித்து, பழைய ஆபாச புகைப்படங்களிலும், அதைப் போன்ற காரியங்களிலும் வருமான வரி ஏய்ப்பு செய்து விடுகிறார்கள். ஆகவே அங்கே அரிசோனாவிற்கு சென்று ஆயிரக்கணக்கான அல்லது இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கி ஐம்பதாயிரம் டாலர்களுக்கு பெரிய கிணறுகளை வெட்டி அதை வருமான வரியில் சேர்த்து கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்கின்றனர். நீங்கள் உங்கள் வரியை செலுத்தாவிட்டால் உங்களை சிறையில் தள்ளி விடுவார்கள். ஆனால் அவர்கள் வரி ஏய்ப்பு செய்து, கிணறுகளை வெட்டி, பிறகு நிலத்தை சமன்படுத்தும் கருவிகளை (bulldozers) கொண்டு வருகின்றனர். ஆகவே, அவர்கள் என்ன செய்வர்? தாங்கள் சம்பாதித்த பணத்தின் மூலம் அடுத்த காலக் கட்டத்தில் அங்கே வீடுகள் கட்டும் திட்டங்களைக் கொண்டு வருவர். அவர்கள் ஒரு முதலீட்டைச் செய்தாக வேண்டும். வீடுகள் கட்டும் திட்டங்களை அங்கே செயல்படுத்தி அவைகளை லட்சக்கணக்கான டாலர்களுக்கு விற்று விடுவார்கள். ஆகவே அப்படிப்பட்ட நபர்கள் பணத்தை மாற்றுவதற்கு உடன்படுவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 159இந்த நபர் செய்ததுபோல... அவன் பெயர் என்ன? காஸ்ட்ரோ (Castro) (க்யூபா தேசத்து ஜனாதிபதி) ஒரே ஒரு புத்தியுள்ள காரியத்தைச் செய்தான். அவன் பணத்தை திரும்பவும் அளித்து, பாண்டு பத்திரங்களைக் கிழித்துப்போட்டான். கவனியுங்கள், நாம் பணத்தை வாங்கி பாண்டு பத்திரங்கள் அளித்தால், மீண்டும் பணத்தைத் திரும்பக்கொடுத்து, பாண்டு பத்திரங்களை வாங்கிக்கொள்ள முடியாது. இந்தப் புள்ளிகள் (guys) அதை அனுமதிக்கமாட்டார்கள். உலகிலுள்ள ஐஸ்வர்யமுள்ள வியாபாரிகள் அதை வைத்துள்ளனர். அதைச் செய்ய ஒரே ஒரு வழியுண்டு. ஆனால் கத்தோலிக்க சபை அவ்வாறு செய்ய முடியும். அவளிடம் போதிய பணம் உண்டு. அவர்களால் அதைச் செய்ய முடியும். அவள் அதை கண்டிப்பாக செய்வாள். அதற்கென்று அவள் யூதருடன் தன்னை ஒப்புரவு செய்து கொள்வாள். இந்த உடன்படிக்கை அவள் யூதருடன் செய்யும்போது.... இப்பொழுது ஞாபகங்கொள்ளுங்கள் இதை நான் வேத ஆதாரம் கொண்டு சொல்லுகிறேன்.... இந்த உடன்படிக்கையை அவள் செய்யும் போது, அவன் உபாயத்தினால் கைக்கூடி வரப்பண்ணுவான்' என்று தானி 8: 23, 25 உரைக்கின்றது. அவன் யூதர்களுடன் இந்த உடன்படிக் கையைச் செய்கிறான். 160ஆனால் யூதர்களின் செல்வம் அவன் கையில் சிக்கிக் கொண்ட பிறகு அந்த மூன்றரை வருடகாலத்தின் மத்தியில் அவன் உடன்படிக் கையை முறிக்கிறான். அவ்வாறு செய்யும்போது... ஓ... என்னே! ஓ... என்னே ! அவன் அந்திக்கிறிஸ்துவென்று முடிவு காலம்வரை அழைக்கப் படுகிறான். ஏனெனில் அவனும் அவன் பிள்ளைகளும் கிறிஸ்துவுக்கும் அவர் வார்த்தைக்கும் விரோதமாய் இருப்பார்கள். அந்த மனிதன் அந்திக்கிறிஸ்து என்று அழைக்கப்படுகின்றான். இப்பொழுது, அவன் பணத்தை உடையவனாய் இருப்பான். அது அங்கிருந்துதான் வரும் என்று நான் நினைக்கிறேன். ஒரு நிமிடம் மட்டும்... நான் இதைக் கூறும்பொழுது, நான் இன்னும் ஒரு நிமிடத்தில் அதைக் குறித்து பின்நோக்கி செல்ல விரும்புகிறேன். அவன் அந்திக்கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறான். கடைசி காலம் வரையிலும் தேவனுடைய பார்வையில் அவன் அந்திக்கிறிஸ்து என்றே அழைக்கப்படுவான். இப்பொழுது, ஆனால் அவன் அப்பொழுது வேறொரு பெயரால் அழைக்கப்படுவான். 161இப்பொழுது, செல்வத்தின் ஆதிக்கம் அவன் கையில் வந்தவுடன் யூதர்களுடன் அவன் செய்த உடன்படிக்கையை அவன் எழுபதாவது வாரத்தின் பாதியின் மத்தியில் (கடைசி மூன்றரை வருஷத்தின் மத்தியில் - தமிழாக்கியோன்) முறிப்பானென்று தானியேல் கூறுகிறான். அதன்பின், சகோதரனே, அவன் என்ன செய்வான். அச்சமயம், உலகத் தின் செல்வமனைத்தும் அவன் தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுள்ளதால், உலகிலுள்ள வாணிபமெல்லாம் அவன் கைக்குள் இருக்கும். இந்த சமயத்தில்தான், இரண்டு தீர்க்கதரிசிகள் காட்சியில் எழும்பி 1,44,000 பேரை அழைப்பார்கள். அதன்பின்பு என்ன நேரிடும்? வெளி. 13-ல் கூறியுள்ள மிருகத்தின் முத்திரை போடப்படும். ஏனெனில் உலக வாணிபமெல்லாம் அவன் அதிகாரத்தில் இருக்கும். அதன்பின் என்ன சம்பவிக்கும்? ''அந்த முத்திரையிடப்பட்டவன் அல்லாது வேறு யாரும் விற்கவோ கொள்ளவோ முடியாது.'' என்ற மிருகத்தின் முத்திரை உள்ளே வரும். (சகோ.பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை மூன்று முறை தட்டினார் - ஆசி) கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவ்வமயம் சபையானது மகத்தான மூன்றரை வருடகாலம் மகிமையில் சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும். இது நிகழும்போது, நாம் இவ்வுலகில் இருக்கமாட் டோம். 162இப்பொழுது கவனியுங்கள்... சபைக் காலங்களின் கடைசியில் அவன். அவனும் அவள் பிள்ளைகளும் அந்திக்கிறிஸ்துவென அழைக் கப்படுகின்றனர். ஏனெனில் கிறிஸ்துவுக்கு விரோதமாயுள்ளவன் அந்திக்கிறிஸ்துவாவான். வார்த்தைக்கு விரோதமாயுள்ள எவனும் கிறிஸ்து வுக்கு விரோதமாயுள்ளான். ஏனெனில் கிறிஸ்துதான் வார்த்தை. இப் பொழுது அவன் அந்திக்கிறிஸ்துவாவான். வெளி. 12:7-9-ல் குற்றம் சாட்டுகிறவனாகிய சாத்தான் கீழே தள்ளப்படும்போது, நீங்கள் வேண்டுமானால் அதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதை படிக்க வேண்டுமென்று நான் விரும்பு கிறேன். இப்பொழுது நமக்கு நேரமில்லை. பத்து மணிக்கு இன்னும் 20 அல்லது 15 நிமிடங்கள் உள்ளதால்... நம் சகோதரர் மேல் குற்றஞ் சாட்டுகிறவனாகிய பிசாசாகிய அந்த ஆவி - சாத்தான், சபை எடுக்கப் பட்ட பின்னர் தாழத்தள்ளப்பட்டான் என்று வெளி. 12:7-9 கூறுகின் றது. அது சரி. சபை எடுக்கப்படும்போது, சாத்தான் தாழத்தள்ளப்படுகிறான். சபை மேலே போகும்போது, சாத்தான் கீழே வருகிறான். பின்பு அவன் அந்திக்கிறிஸ்துவுக்குள் வாசம் செய்து “மிருகம்'' என்று அழைக்கப்படு கிறான். வெளி. 13-ல் அவன் மிருகத்தின் முத்திரையைப் போடுகிறான் பாருங்கள்? 163''தடை செய்கிற அவனால் மட்டுமே“ (2 தெச. 2:7-சபை- தமிழாக் கியோன்) கிறிஸ்தவமானது தன் பரிசுத்தத்தில் இப்பொழுது பூமியின் மேல் விடப்பட்டுள்ளது. ''தேவனுடைய ஆலயத்தில் அவன் உட்கார்ந்து தேவன் போல் தன்னைக் காண்பித்து, உலகில் மனிதருடைய பாவங்களை மன்னிப்பான்'' என்று தெசலோனிக்கேயர் நிரூபத்தில் கூறப்பட்டுள்ளதை நினைவில் கொள்ளுங்கள். அவன் வெளிப்படும் சமயம் வரும்வரை இது தொடர்ச்சியாக நடைபெற்று, ''அக்கிரமம் உலகில் மிகுதியாகும்.'' காரணம் அதுவரை அது அறியப்படாது. அப்பொழுது சபையானது எடுக்கப்படும். அது எடுக்கப்பட்ட பின்னர், அவன் இப்பொழுதுள்ள அந்திக்கிறிஸ்துவிலிருந்து மாறுகிறான், ஓ, என்னே , “சபை, அந்த மகத்தான சபை”, அவன் அந்திக்கிறிஸ்துவினின்று மாறி “மிருகமென்று” அழைக்கப்படுகிறான், ஊ-ஊ இதை ஜனங்களுக்குப் புரிய வைக்க எனக்கு எத்தனை ஆவல்! 164அந்திக்கிறிஸ்து என்பதும், மிருகம் என்பதும் ஒரே ஆவிதான் என்பதை ஞாபகங்கொள்ளுங்கள். அங்கே திரித்துவம் காணப்படுகிறது. ஆம், ஐயா, பிசாசின் வல்லமை மூன்று கட்டங்களில் வெளிப்படுகின்றது. நிக்கொலாய் ஆவி கிரீடம் சூட்டப்படுவதற்குமுன் அது மனிதனுக்குள் வாசம் செய்ய வேண்டும் என்பது நினைவிருக்கட்டும், பாருங்கள்? இப்பொழுது இதைக் கவனியுங்கள்! மூன்று கட்டங்கள் முதலாவது கட்டத்தில் அவன் அந்திக்கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறான். இரண்டாவது கட்டத்தில் அவன் கள்ளத்தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுகிறான். மூன்றாவது கட்டத்தில் அவன் மிருகம் என்று அழைக்கப்படுகிறான். 165கவனியுங்கள், நிக்கொலாய் மதஸ்தரின் போதகம், அந்திக்கிறிஸ்துவின் போதகம், பவுலின் காலத்தில் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக எழும்பினது, அந்திக்கிறிஸ்து. பின்பு அந்த போதகம் மனிதனானபோது கத்தோலிக்க சபையின் குருக்களாட்சி (heirerchy) யைக் குறித்து பிரசங்கிக்கும் தீர்க்கதரிசியாக அவன் விளங்குகிறான்-கள்ளத்தீர்க்கதரிசி, போப்பாண்டவர்தான் தவறான போதகத்துக்குத் தீர்க்கதரிசி, ஆகவே அதன் காரணமாக அவன் கள்ளத் தீர்க்கதரிசியாகிறான், மூன்றாம் கட்டத்தில் அவன் மிருகம் என்னும் பெயர் கொள்கிறான். அஞ்ஞான ரோமமார்க்கம் பெற்றிருந்த எல்லா வல்லமையும் ஒரு மனிதன் பெற்று முடிசூட்டப்படுகிறான். ஏனென்றால் ஏழு தலைகளுள்ள மிருகம்-வலுசர்ப்பம், பரலோகத்திலிருந்து தாழதள்ளப்பட்டு, இந்த கள்ள தீர்க்கதரிசிக்குள் வாசம் செய்கிறது. அந்த வலுசர்ப்பம் ஏழு தலைகளில் ஏழு கிரீடங்களைச் சூடியிருந்தது அது பூமியிலும், சமுத்திரத்திலும் தள்ளப்படுகிறது. அது சரி, நாம் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறோம்? யார் இந்த வெள்ளைக் குதிரையின் மேல் இப்பொழுது சவாரி செய்பவன்? அது யார் என்று அறிகிறீர்களா? அவன்தான் சாத்தானின் பராக்கிரமசாலி (Superman). 166ஒரு இரவு நான் இங்கு உட்கார்ந்திருக்கும் சகோ. நார்மன் (Bro. Norman), சகோ. பிரட் (Bro. Fred) இவ்விருவருடன், ஒரு மனிதன் அந்திக் கிறிஸ்துவைக் குறித்துப் பிரசங்கிப்பதைக் கேட்கச் சென்றிருந் தேன். அவர் 'அசெம்பிளீஸ் ஆப் காட்' (Assemblies of God) என்னும் ஸ்தாபனத்தின் தலைசிறந்த போதகர். அவர் அந்திக் கிறிஸ்து யாரென் பதை இவ்விதம் விவரித்தார்: “அவர்கள் ஒருவிதமான வைட்டமினை மனிதனிலிருந்தெடுத்து அவனிலுள்ள அந்த ஜீவனை ஒரு பெரிய சொரூபத்திற்குள் மாற்றுவார்கள். அப்பொழுது அது ஒரு பட்டிணம் பூராவும் நிரப்பும் அளவிற்கு ஒரு பெரிய சொரூபமாக மாறும்.'' பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டதாக உரிமை பாராட்டும் ஒரு மனிதன் இவ்வித தவறான நம்பிக்கை கொண்டிருக்கலாமா? 167வேதம் அந்திக்கிறிஸ்து யாரென்பதை இங்கே தெளிவாக எடுத்துக் கூறுகின்றதே! அவன் ஒரு மனிதன். கவனியுங்கள். வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்பவன் சாத்தானின் பராக்கிரமசாலியல்லாமல் வேறு யாருமில்லை. பிசாசு அவனுக்குள் வாசம் செய்யும் ஒருவன். அவன் கல்வியறிவு படைத்த நிபுணன். இப்பொழுது உங்கள் செவிகள் திறக்கப்பட்டிருக்கின்றன என்று நான் நம்புகிறேன். அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவிருக்கின்ற, அந்தப் பதவிக்கு அந்த அடுத்த மனிதனைக் காட்டிலும், இந்த மனிதன் நுண்ணறிவு பெற்றவனா என்று காண்பதற்காக சில நாட்களுக்கு முன்பு பிசாசின் பிள்ளைகளில் ஒருவனை டெலிவிஷனில் சோதித்துக் கொண்டிருந்தார்கள். பாருங்கள்? ஆனால் அவனிடம் மிகுந்த ஞானமுண்டு. சாத்தானும் அப்படியே. அவன் ஞானத்தை விற்க முயல்கிறான். அதை ஏவாளுக்கு அவன் விற்றான். நமக்கும் அதை அவன் விற்றுப்போட்டான். அதன் விளைவாக நாம் விரும்பியிருந்த பராக்கிரமசாலியை நாம் பெற்றுக்கொண்டோம். சரி. முழு உலகமே ஒரு பராக்கிரமசாலி வேண்டுமென்று விரும்புகிறது. அவர்கள் அவனைப் பெற்றுக்கொள்வார்கள். சபை எடுக்கப்பட்டு சாத்தான் கீழே தள்ளப்படும்வரை சற்று காத்திருங்கள். சாத்தான் மனிதனுக்குள் வாசம் செய்வான். அது சரி. நன்கு பணிபுரிய அவர்களுக்கு ஒருவன் தேவைப்படுகிறது. அவர்கள் விருப்பப்படி அவன் செய்வான். 168கல்வியறிவு பெற்றவன்! சாத்தானின் பராக்கிரமசாலி கல்வி யறிவு படைத்த, ஞானமுள்ளவனாய், தனக்குச் சொந்தமான சபை தத்து வத்தை உண்டாக்கிக்கொண்டு ஸ்தாபனமாகிய வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்து மக்களை ஏமாற்றுகிறான். அவன் உலகிலுள்ள எல்லா மதங்களையும் ஜெயிப்பான். ஏனெனில் அவர்களெல்லாரும் உலக சபை மாநாட்டின் அங்கத்தினர்களாகி விடுவர். ஏற்கனவே அதற்கென்று கட்டிடங்கள் கட்டி, எல்லாம் ஆயத்தமாயிருக்கின்றது. இனி செய்ய வேண்டியது வேறொன்றுமில்லை. எல்லா ஸ்தாபனங்களுக்கும் அந்த மாநாட்டில் புகுந்து விட்டன. அதற்கு ஆதரவளிப்பது யார்? ரோமபுரி தான். இப்பொழுது போப்பாண்டவர், 'நாமெல்லாரும் ஒன்று. ஆகை யால் நாம் ஒன்றுபட்டு ஒன்றாக நடப்போம்' என்று அறை கூவுகிறார். 169முழு சுவிசேஷத்தைப் பின்பற்றுபவரும்கூட அதில் சேர்வதற்கென தங்கள் சுவிசேஷ போதகங்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் ஸ்தாபனத்தின் காரி யங்களைக் காணக் கூடாதவாறு குருடாராகி இருக்கின்றனர். அவர்கள் சத்தியத்தைப் புறக்கணித்து விட்டனர். சத்தியம் அவர்கள் முன்னிலை யில் வைக்கப்பட்டது. ஆனால் அவர்களோ அதை விட்டகன்றனர். இப்பொழுது “பொய்யை விசுவாசிக்கத்தக்கதாக அவர்கள் கொடிய வஞ்சகத்தால் பீடிக்கப்பட்டு ஆக்கினைக்குள்ளாகின்றனர்.'' அவர்கள் சரியாக அவ்விதமே உள்ளனர். அந்திக்கிறிஸ்து அவர்களெல்லாவற்றையும் தன் அதிகாரத்துக் குட்படுத்துகிறான். உலகத் தோற்றத்துக்கு முன்னால் இந்த முத்திரைகளின் புத்தகத்தில் பெயரெழுதப்படாத பூமியின் குடிகள் எல்லோரை யும் அவன் ஏமாற்றினான் என்று வேதம் கூறுகின்றது. (சகோ. பிரான்ஹாம் ஒருமுறை தன் கரங்களைக் கொட்டினார் - ஆசி) ஹும் 'அவன் ஏமாற்றினான்' என்று வேதம் கூறினால், அவன் நிச்சயமாக ஏமாற்றினான் என்பதாகும். 170நான் இன்னின்ன ஸ்தாபனத்தை சேர்ந்தவன் என்று அவர்கள் சொல்லுகின்றனர். ஆம் அது தான் சரியாக வேசியின் ஸ்தாபனம். அது தொடங்கப்பட்ட நாள் முதற்கொண்டு முழுவதும் அந்திக்கிறிஸ்துவின் ஆதிக்கத்தில் உள்ளது. நான் அதனின்று கேள்விப்படுவேன். ஆனால் அது... அது சத்தியமாயிருக்கின்றது. நான் எதிர்ப்பார்க்கிறேன். ஆமென். இப்பொழுது கவனியுங்கள். அவன் ஜெயிப்பான். அவன் மிருகமாக மாறுமுன்பே, இப்பொழுதே அவன் ஜெயித்து எல்லாவற்றையும் தன் ஆதிக்கத்தில் வைத்துள்ளான் என்பதைப் பாருங்கள். கொடூர தண்டனை என்னவென்பதைக் காணவேண்டுமானால் சற்றுப்பொறுங்கள். (சகோ.பிரான்ஹாம் பீடத்தை நான்கு முறை தட்டுகிறார் - ஆசி) பூமி யில் கைவிடப்பட்டவர்கள் என்னவிதமான கொடுரத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்பதை அப்பொழுது காணலாம். ஹூம். ''அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாகும். மணவாட்டி எடுக்கப்பட்ட பின்பு, வலுசர்ப்பம் (ரோமாபுரி) தன் வாயிலிருந்து வெள்ளத்தை கைவிடப்பட்ட ஸ்திரீயின் சந்ததியின் மேல் ஊற்றி, அவளுடன் போர் செய்கின்றது. அவள் உள்ளே பிரவேசிக்க விருப்பங்கொள்ளவில்லை. ஆகையால் அவள் மிருகத்தை போன்று வேட்டையாடப்படுவாள்'' (வெளி. 12:13,17). ஆனால் மணவாட்டி தேவனுடைய கிருபையினால் இரத்தத்தின் கீழ் இருந்ததால், அவள் இதை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லாமல் போயிற்று. அவளுக்கு உபத்திரவ காலம் கிடையவே கிடையாது. இனிமேல் சபைக்கு அடுத்ததாக நிகழவேண்டியது எடுக்கப்படுதலா கும். ஆமென்! ஆமென்! இதை நாம் தொடர முடியும் (பேச முடியும்தமிழாக்கியோன்) ஓ! இது எனக்கு எவ்வளவு பிரியமாயிருக்கிறது! 171நான் உங்களுக்கு (ஒன்றை) கூறட்டும். அந்திக்கிறிஸ்து எத்த கைய ஜெயங்கொள்வான் என்று நாம் பார்த்தோம். அவன் உண்மையாகவே ஜெயங்கொள்வான். அவன் ஏற்கனவே ஜெயங்கொண்டுவிட்டான். அவன் இனிமேலும் ஜெயிப்பதற்கு எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது. அவர்கள் இழிவான ஆதாயத்தை இச்சிக்கின்றனர். அது சரியானதாகும். தேவனைக் காட்டிலும் செல்வத்தை அதிகமாய் அவர்கள் நேசிக்கின்றனர். இப்பொழுது அவர்களுடைய எண்ணமெல்லாம் அவர்களிடம் எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது என்பதாகும். அது என்ன? 'சபைக்குக் காசைக் கொடுத்தால் அவள் உலக முழுவதையும் புரட்சிக்குள்ளாக்குவாள். உலகம் பூராவும் சுவிஷேகரை அனுப்பி முழு உலகையும் கிறிஸ்துவுக்காக மாற்றிவிடுவாள்' என்று அநேகமுறை சொல்லக் கேட்டிருக்கிறோம். பரிதாப நிலையிலுள்ள என் குருட்டு நண்பனே, உனக்கு ஒன்றைக் கூறவிரும்புகிறேன். உலகம் பணத்தின் மூலம் ஜெயிக்கப்படாது. இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக மாத்திரமே அது ஜெயிக்கப்படும். மரித்தாலும் பரவாயில்லையென்று தேவனுடைய வார்த்தையில் உறுதியாக நிற்கும் வீரமுள்ள மனிதர்களை தேவனுக்கென்று அனுப்புங்கள். அவர்கள் மாத்திரமே அவருக்காக ஜெயிக்கமுடியும். ஊம்... உலகத்தோற்றத்துக்கு முன்பு ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டவரே ஜெயிப்பார்கள். அதைக் கேட்பார்கள். பணத் திற்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. பணம் அவர்களை மேலும் ஸ்தாபனங்களின் பாரம்பரியத்தில்தான் ஆழ்த்தும். 172இப்பொழுது கவனிப்போம். ஆம், அவன் கல்வியறிவு படைத்த நிபுணனாய், சாமர்த்தியம் கொண்டவனாய் இருப்பான். என்னே, என்னே, என்னே ! அவளைக் சூழ்ந்துள்ள அவள் பிள்ளைகளும் Ph.d., L.L.D., இரட்டை (Double) L.D., Q.S.D., A.B.C.D.E.F. முதல் Z வரை ஆன அநேக வேத தத்துவப் பட்டங்களை பெற்றிருப்பார்கள். ஏன்? அதுதான் சாத்தானின் முறைமையாகும். வேதத்துக்கு விரோதமாய் அமைந்திருக் கும் சாமர்த்தியமான உபாயம் ஒவ்வொன்றும் சாத்தானால் உண்டா னதாகும். ஏவாளை அதன் மூலமாகவே அவன் வசியப்படுத்தினான். ஏவாள் அவனிடம், ''இதைச் செய்ய வேண்டாமென்று தேவன் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்'' என்றாள். 173அவன், ''ஆனால் சற்றுபொறு. நிச்சயமாக, தேவன் அப்படிச் செய்யமாட்டார். என்றாலும் நான் உன் கண்களைத் திறந்து ஞானத்தைச் சிறிது அளிக்கிறேன்“ என்றான். அவள் அதைப் பெற்றுக்கொண்டாள். இந்த தேசமும் அதைப் பெற்றுக்கொள்ள விரும்பினது. ஆகையால் அதைப் பெற்றுக்கொண்டது. கவனியுங்கள். அவன் உலகிலுள்ள எல்லா மதங்களின் மேலும் வெற்றி சிறக்கிறான். கடைசி வாரத்தில், தானியேலின் ஜனங்களாகிய யூதர்களுடன் அவன் உடன்படிக்கை செய்கிறான். இங்கு புறஜாதியாரென்றும், தானியேலின் ஜனங்களென்றும் பாகுபாடு உண்டாகிறது. அதை நான் கரும்பலகையில் எழுதி உங் களுக்கு முன்னமே விவரித்திருக்கிறேன். தேவனுக்கு ஸ்தோத்திரம், அவன் அங்கு இருக்கிறான். ஸ்தாபனங்களின் முறைமை பிசாசினால் உண்டானது. அதன்மேல் வேறெந்த போர்வையும்போட முடியாது. பாருங்கள் சரியாக... அது பிசாசின் வேராக அமைந்துள்ளது. இப்பொழுது நான் ஸ்தாபனங்களிலுள்ள ஜனங்களை குறித்து சொல்லவில்லை. அவர்களில் அநேகர் தேவனுடைய பிள்ளைகளாயிருக் கின்றனர். நாம் எக்காளங்களைப் பற்றி ஆராயும்போது... மூன்றாம் தூதன் தோன்றி, 'என் ஜனங்களே அவளைவிட்டு வெளியே வாருங்கள்' என்று சொல்லும்போது.... தூதன் முழங்கும்போது கடைசி எக்காளத்திற்காக செய்தி விழுகிறது. கடைசி தூதனின் செய்தியின்போது, கடைசி முத்திரை திறக்கப்படுகிறது. இவையெல்லாம் ஒரே நேரத்தில் சம்பவிக் கிறது. ஆம் ஐயா. எல்லாம் ஒருங்கிணைந்து, நித்தியத்திற்குள் போகின்றது. 174இப்பொழுது என்ன! அதே சமயத்தில் இவன் ஜெயித்துக் கொண்டு செல்லும்போது, தேவனும் ஏதாவது ஒன்றைச் செய்வார் (நான் முடித்துவிடுகிறேன்) சாத்தானுக்கே நாம் எல்லாப் புகழையும் அளிக்க வேண்டாம். அவனைப் பற்றியே நாம் பேசிக்கொண்டிருக்க வேண்டாம். பாருங்கள்? இது நிகழ்ந்து கொண்டே வந்து, ஸ்தாபனங்களெல்லாம் ஒன்று சேர்ந்து கம்யூனிஸத்தை எதிர்க்கும்போது அவர்களை ஜெயிப்ப தற்காகவென்றே தேவன் கம்யூனிஸத்தை எழுப்பியுள்ளாரென்பதை அவர்கள் அறியார்கள். நிச்சயமாக. ருஷியாவில் கம்யூனிஸம் எழும்பக் காரணமென்ன? அங்குள்ள ரோம சபையும், மற்றவைகளும் அசூசிப்பட்டிருந்த காரணத்தால்தான். ருஷியாவில் அவர்கள் பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு ஜனங் களுக்கு ஒன்றும் கொடுக்காமல் அவர்களை சாகும்வரை பட்டினி கிடத்தினர். அதற்குப் பதிலாக உலகிலுள்ள மற்றவரைப் போல் வாழ்ந்தனர். 175நான் சமீபத்தில் மெக்ஸிகோவுக்குச் சென்றிருந்தபோது, அங் குள்ள ஏழை பிள்ளைகளைக் கண்டேன். எந்த கத்தோலிக்க தேசமும் தங்கள் ஜீவனாம்சத்துக்கு வேண்டியவைகளை போதுமான அளவுக்குப் பெற்றிருக்கவில்லை. எங்கே என்று கேட்கிறீர்களா? அவைகள் எங்கே என்று எனக்குக் காண்பியுங்கள். எந்த ஒரு கத்தோலிக்க தேசமும் தனக்கு வேண்டியவைகளைப் பெற்றிருக்கவில்லை. பிரான்சு, இத்தாலி, மெக்ஸிகோ போன்றவை. ஏன்? சபையானது எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு விடுகிறது. ஆகையால்தான் ருஷியா கிறிஸ்தவமார்க்கத்தை உதைத்துத் தள்ளிற்று. என்ன நடந்தது என்று கவனியுங்கள். 176மெக்ஸிகோவில் நான் கண்ட சம்பவத்தைக் கூறுகிறேன். நான் அங்கு நின்றிருந்தேன். ஆலயமணி அடிப்பதைக் கேட்டபோது, ஏதோ பொன்விழாதான் அங்கு கொண்டாடப் போகின்றனர் என்று நினைத் தேன். ஆனால், ஒரு ஏழ்மையான பெண்மணி காலை இழுத்து இழுத்து நடந்துவர அவளது தகப்பனார் அவள் குழந்தைகளைச் சுமந்து கொண்டு வந்தார். அக்குழந்தைகள் அழுதுகொண்டிருந்தன. மரித்த ஒரு ஸ்திரீக்கு, அவள் பரலோகத்துக்குப் போகவேண்டு மென்று கருதி, அந்தப் பெண்மணி நோன்பு (Penance) செய்கின்றதாக நான் அறிந்தேன். என்னே ஒரு பரிதாபமான செயல்! நான் அங்கு நின்று கவனித்துக்கொண்டிருந்தேன்... கத்தோலிக்க நாடுகளிலுள்ள சபை எல்லாவற்றையும் பறித்துக்கொள்வதால், ஜனங்களின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாயுள்ளது. பாஞ்சோப்ராங்க் (Pancho Frank) என்பவன் அங்கு கொத்தனார் பணி செய்து வாரத்துக்கு 20 பீசோக்கள் (Pesos) சம்பாதிக்கிறான். அவன் ஒரு ஜோடி பாதரட்சை வாங்க வேண்டுமென்றால் 20 பீசோக்கள் எல்லாம் தேவைப்படும். அதுதான் அவர்கள் பொருளாதார நிலையாகும். அங்கு கொத்தனார் பணி செய்கிற அவன் வாரத்திற்கு 20 பீசாக்கள் வாங்குகிறான் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அவன் எவ்வளவு வாங்குகிறான் என்று எனக்குத் தெரியாது. அத்தகைய பொருளாதார நிலை இங்கிருந் தால் என்னவாயிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். 177அங்கு சிக்கோ (Chico) என்னும் புனைப்பெயர் கொண்டவன் வாரத்திற்கு 5 பீசோக்கள் சம்பாதிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவனுக்குப் பத்துக் குழந்தைகள் இருப்பார்கள். ஆனால் யாரோ ஒருவர் கதவைத்தட்டி, (சகோ.பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை அநேக முறைகள் தட்டுகிறார் - ஆசி) அவன் பாவ நிவர்த்திக் கென்று பீடத்தின் மேல் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கவேண்டுமென்று சொல்லி, அவன் சம்பாதனையில் 4 பீசோக்கள் வாங்கிக்கொண்டு செல்வார். அந்தப் பீடம் லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்பு கொண்ட பொன்னினால் செய்யப்பட்டிருக்கும். அப்படியானால் அவர்களுடைய நிலையென்ன வென்று சிந்தித்துப் பாருங்கள். அது எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கிறது. சபை எல்லாவற்றையுமே பிடுங்கிக்கொள்கிறது. ரோமன் கத்தோலிக்க சபை, அனைத்தையும் தன் கரங்களில் கொண்டுள்ளது. அவ்வளவே. அத்துடன் வேதம் கூறுகிறபடி யூதரின் செல்வமும் அவர்கள் செய்யும் உடன்படிக்கை யின் மூலம் ஒன்று சேரும். 178அப்பொழுது அந்திக்கிறிஸ்து மிருகமாக மாறி, உடன்படிக் கையை முறித்து, ஸ்திரீயின் சந்ததியில் மீதியாயுள்ளவர்களை பீறிட்டு, வாயினின்று வெள்ளத்தை ஊற்றிவிட்டு, அவர்களுடன் போரிடுவான். அப்பொழுது அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அதேசமயத்தில் மணவாட்டி மகிமையில் கலியாணம் செய்து கொள்கிறாள். பாருங்கள்? நண்பனே! அதை இழந்துவிட வேண்டாம். நான் அங்கு இருப்பதற்குத் தேவன் தாமே ஒத்தாசை செய்வாராக, அதற்காக என்ன கிரயம் செலுத்த வேண்டுமானாலும் பரவாயில்லை. எவ்வறா யினும் நான் அங்கு இருக்க விரும்புகிறேன். 179இப்பொழுது கவனியுங்கள். அந்திக் கிறிஸ்துவின் துன்புறுத்தல் யாவும் பூமியில் நிகழ்வதற்கு சற்று முன்பு, தேவன் வாக்குத்தத்தம் செய்துள்ளார்... எல்லா ஸ்தாபனங்களும் தங்களிடையேயுள்ள சபை பிரமாணங்களைக்குறித்த வித்தியாசத்தைப் பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், சத்தியமான வார்த்தையைக் கொண்ட ஒரு உண்மையான தீர்க்கதரிசியை ஒரு செய்தியுடன் அனுப்புவதாக தேவன் வாக்களித்துள்ளார். அவன் ஜனங்களை தேவனுடைய மூல வார்த்தைக்கும், 'பிதாக்களின் விசுவாசத்திற்கும் திருப்புவதனால், பரிசுத்த ஆவியின் வல்லமை பரலோகத்திலிருந்து அவர்கள் மத்தியில் இறங்கி, அவர்களுக்கு எடுக்கப்படுதலுக்கேற்ற வல்லமையை அளித்து, அவர்களை உட்பிரவேசிக்கச் செய்யும். ஆம். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை அந்த வார்த்தை உறுதிப்படுத்தும். 180'இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன். நான் செய்த கிரியைகளையே நீங்களும் செய்வீர்கள். நான் உங்களுடனே இருப்பேன். இன்னும் கொஞ்சக்காலம், அதன் பிறகு அவர்கள் என்னைக் காணமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டு சிதறிப் போவார்கள். ஆனால் நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் முடிவு பரியந்தம் உங்களோடு கூட இருக்கிறேன். உங்களுக்குள் இருப்பேன். முடிவில் தேவகோபாக்கினை ஊற்றப்படும். ஓ, தேவனே, 181அந்த வெள்ளைக்குதிரையின் மேல் சவாரி செய்பவன் யார்? நீங்கள் இப்பொது குருடராயில்லை. அவன் யாரென்பதை உங்களால் இப்பொழுது காணமுடிகிறது. அவன்தான் அந்திக்கிறிஸ்து. ஏமாற்றும் அந்த ஆவி புறப்பட்டு ஸ்தாபனங்களில் நுழைந்து விட்டது. தேவன் இவைகளை என் மூலம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருப்பதைப் பாருங்கள். ஒரு மனிதன் வெள்ளைக் குதிரையின் மேலேறி கையில் வில்லைப்பிடித்துக்கொண்டு, அம்புகளின்றி செல்வதை அவர் நமக்குக் காண்பித்தார். அவன் ஒரு பொய்க்காரன். அவனுக்கு வல்லமை எதுவுமில்லை, நீங்கள் 'சபையின் வல்லமை' என்று கூறுகின்றீர்கள். அந்த வல்லமை எங்கே? அவர்கள் வல்லமை காணப்படும்படி என்ன செய்கின்றனர்? அவர்கள், 'நாங்கள்தான் ஆதி சபை' என்கின்றனர். ஆதி சபை பிசாசுகளைத் துரத்தி, பிணியாளிகளை சொஸ்தமாக்கி, மரித் தோரை உயிரோடெழுப்பினது. அது தரிசனங்களைக் கண்டது. அவை யெல்லாம் இப்பொழுது எங்கே? பாருங்கள்? பொய்க்காரன்- அம்புகளில்லாமல் வில்லைப் பிடித்திருக்கிறான். ஊம். அது உண்மை . 182ஆனால் கிறிஸ்து வெள்ளைக்குதிரையின் மேல் வரும்போது, அவர் வாயிலிருந்து மின்னல் வேகத்தில் ஒரு பட்டயம் புறப்பட்டுச்சென்றது என்பதை பாருங்கள் அது அவர் விரோதிகளை அழித்து, பிசாசைக் கீழே தள்ளிற்று. அது எல்லாவற்றையும் வெட்டி வீழ்த்தியது. அவர் வஸ்தி ரம் இரத்தத்தில் தோய்க்கப்பட்டிருந்தது. அவர் தொடையில் ''தேவனு டைய வார்த்தை “ என்று எழுதப்பட்டிருந்தது. ஆமென். அவர் பரலோகத்திலிருந்து தம் சேனைகளுடன் இதோ அவர் வருகிறார். 183ஆனால் வெள்ளைக் குதிரையின்மேல் சவாரி செய்யும் மற்றவனோ, எக்காலத்தும் பூமியில்தான் இருக்கிறான். அவன் அந்திக்கிறிஸ்து வாயிருந்து கள்ளத் தீர்க்கதரிசியாக மாறுவான். பாருங்கள்? முதலில் அவன் அந்திக்கிறிஸ்துவாக-ஆவியாக இருக்கிறான். பின்னர் அவன் கள்ளத் தீர்க்கதரிசியாகிறான். அதன் பின்பு பிசாசு கீழே தள்ளப்படும் போது, அவன் அந்த பிசாசுக்குள் (மனிதனுக்குள்) வாசம் செய்து ''மிருகம்'' என்றழைக்கப்படுகிறான். மூன்று கட்டங்கள் - முதலாவதாக அவன் பிசாசின் ஆவியாயிருக்கிறான். பின்னர் கள்ளப்போதகத்தைப் போதிக்கும் கள்ளத் தீர்க்கதரிசியாக அவன் ஆகிறான். அடுத்ததாக அவன் பிசாசாகவே மனிதனுக்குள் குடிகொண்டு வருகிறான். பாருங்கள்? அவன் அவ்விதமாக இருக்கிறான். 184இந்த பிசாசு பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டு ஒரு மனிதனுக்குள் குடிகொள்ளும் அதே சமயத்தில், பரிசுத்த ஆவியானவரும் மேலே சென்று மனிதருக்குள் வாசம் செய்ய வருகிறார். ஆமென், ஓ. என்னே ஒரு மகத்தான தருணம்! நாளை இரவு, தேவனுக்குச் சித்தமானால், நாம் இரண்டாம் முத்தி ரையைப் பார்ப்போம். அவரை நீங்கள் நேசிக்கிறீர்களா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர்;) சகோதரன் பிரான்ஹாம் சிறிது நேரம் நிறுத்துகிறார்ஆசி) நான் கூறினதை இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ('ஆமென்“'). 185நான் இப்பொழுது ஒலிநாடாவை நிறுத்திவிட்டேன். நான் அதை கேட்பேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாருங்கள், நான் அதனை எதிர்ப்பார்க்கிறேன். சகோதரனே, ஒரு காரியத்தை நான் கூற விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் எதற்காக எப்பொழுதும் ஸ்தாபனங்களுக்கு விரோதமாக என்னை எச்சரித்துக் கொண்டே வந்தார் என்பதை இன்று முதல் முறையாக நன்றாகப் புரிந்துகொண்டேன். இவைகளை தேவனாகிய கர்த்தர் எனக்கு காண்பித்ததற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன். அது சத்தியம் என்பதை நான் அறிவேன். இதோ இந்த இரகசியம் வெளிப்பட்டுவிட்டது. அவன் காலங்கள்தோறும் சவாரி செய்து கொண்டே வந்து முடிவில் அவன் யாரென்பதை முற்றிலுமாக வெளிப் படுத்துகிறான். பாருங்கள் அது அவன்தான். இப்பொழுது நாமோ அவனைக் கண்டு ஏமாறப்போவதில்லை. உங்கள் கண்கள் இப்பொழுது திறக்கப்பட்டுள்ளன. அவ்விதமான காரியங்களை விட்டு அகன்று செல்லுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரில் அன்புகூருங்கள். அவரில் எப்பொழுதும் நிலைத்திருங்கள். ஆம் ஐயா, பாபிலோனை விட்டு வெளியே வாருங்கள்.